வன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.
குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.
இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.
ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.
போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.
புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.
யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.
கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.
நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.
இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.
யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.
.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:
STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009
in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)
puvanan
உண்மையான அரசியல் உணர்வு பெற்ற எவரும் புலியை நேரடியாக விமர்சிக்காத இப்படியான நிகழ்வுகளில் கலந்து புலிக்கு பலம் சேர்க்க உதவ மாட்டார்கள். மீண்டும் மீண்டும் தமிழினம் தவறுக்கு மேல் தவறுகளை செய்து கொண்டே போகின்றது. பிழை பிழையாக போராடுகின்றது.
ஐக்கியம் பற்றி இப்ப நினைப்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
தமிழினத்தின் அழிவு என்றோ எழுதப்பட்டு விட்டது. இனி புலி இருந்தாலும் ஒன்றுதான். அழிந்தாலும் ஒன்றுதான்.
SUDA
//வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!! ஜனவரி 31இல் லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி.//தேசம் நெற் செய்தி.
ஆம். வன்னி மக்கள் புலியின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். யாரோ சிலரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மக்களின் பெயரால் நடாத்தப்படும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் என்ன கோசம் போடப்போறாங்கள் என்பதுதான் பிரச்சினை.
Anonymous
எங்கள் தலைவன்- பிரபாகரன்.
எமக்கு வேண்டும்- தமிழீழம். எண்ட வழமையான கோசங்களுக்கு குறைவிருக்காது; அதைவிட இப்ப இருக்கற தலயிடிக்கு அதாவது இராணுவ முற்றுகையில இருந்து தப்பிறதுக்கு ஏதுவாக– போரை நிறுத்து; பேச்சு வார்த்தையை ஆரம்பி: பொது மக்களை கொல்லாதே எண்டும் சேர்த்துக் கத்துவாங்கள். அவ்வளவுதான். எல்லாரும் ஒற்றுமையாக எண்ட வசனம் கூட்டத்துக்கு முதல் சொல்வது வந்த சனத்ரின் தொகையை பெருப்பித்துக் காட்ட மட்டுமே.
sura
வந்த சனங்களுக்கு சிவப்பு மஞசள் சீலையோ புலிக் கொடியோ பிரபாகரன் படமோ புலித் தொப்பியோ நாங்கள் கொண்டுவந்து கொடுக்கவில்லை “உணர்வாளர்கள்” தாமே கொண்டுவந்தனர். அதை எப்படி நாம் தடுக்க முடியும் என்று ஒரு அறிக்கைய இப்போதே சுரேன் எழுதி வைத்திருப்பார் வாசிப்பதற்கு பிறகு தேசம் அதை எடுத்து போடும்.
பிரிஎப்க்கும் தமிழீழம் வேணும், புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எண்டு அவரே சொல்லியிருக்க இந்தக் கூட்டம் மட்டும் வித்தியாசமாகவோ நடக்கப் போகிறது. கனடா பிரான்ஸ் மற்ற நாடகளில் நடந்த கூட்டங்களிலம் கூட இது தானே நடந்தது.
santhanam
மீண்டும் மீண்டும் தமிழினம் தவறுக்கு மேல் தவறுகளை செய்து கொண்டே போகின்றது வன்னி மக்கள் உயிர்வாழ அனுமதிக்கவேண்டும். சர்வதேச அரசியலில் தமிழன் வெல்லவேண்டும் இந்த விடுதலைபோரில் தமிழினம் வெல்லவேண்டும்.
Mathivathani
// ஆர்ப்பாட்டத்திலென்ன கோசம் போடப்போறாங்கள் //
தலைவா எனி போதும் உன் ஆட்டம். எம் மக்களை இனியாவது வாழவிடு
தமிழீழத்தின் பெயரால் உண்டியல் குலுக்கமாட்டோம்
மதிவதனி
sura
கடந்த கிழமை நடைபெற்ற பிபிசி நிலையத்திற்க முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் எப்படி தேவையற்ற சலசலப்போ அது போல இன்றும் நேற்றும் SKY TV அலவலகத்திற்க தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட தலையிடியும் தேவையற்றதே காரணம். புலிகளும் புலிகளின் பினாமிகளும் தொடர்பு சாதனங்களக்கு ஆய்க்கினைகளும் தொல்லைகளும் கொடுத்தே தமது நாளைய செய்தியை வெளிப்படுத்த முனைந்துள்ளதாக SKY TV நிறுவனத்தினர் முறைப்பாடுகள் செய்கிறார்கள்.
புலிகளும் அதன் ஆதரவாளர்களும் தமது பிரதேசங்களில் பத்திரிகையாளர்கள் மீடியாக்காரர்களை தொல்லையும் கொலையும் செய்து வருவதாயும் இவர்கள் சுயாதீன ஊடக நடைமுறைகளில் நம்பிக்கையற்றவர்கள் எனவும் ஸ்கை நிறுவனத்தினர் செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Sinna Siththar
BTF has to seek independence from LTTE before they liberate Thamil Eelam.
Will BTF assure us that this event will not be hijacked by LTTE to heil the chief? If LTTE supporters glorify the chief how would BTF deal with them? Will they ask the LTTE supporters to leave the procession?
Would they allow me to bring Mahinda’s portrait and praise him for his war effort?
sivaji
யுத்தம் இருவருக்கிடையிலானது ஒன்று புலி மற்றது இராணுவம் போரை நிறுத்தச் சொல்லி ஊர்வலம் செய்யும் போது பக்கச் சார்பான பதாகைகள் எதுவுமின்றி இரு பகுதியினரையும் யுத்த நிறுத்தம் செய்யும்படி BTF கேட்க வேண்டும்.
இது BTF தன்மீதான கறைகளை கழுவிக் கொள்ள கிடைத்த இறுதிச் சந்தர்ப்பம் ஆகும்.
kula
BTF க்கு நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் மண்டையில் ஏறப் போவதில்லை காரணம் BTF IS A BRITISH TIGER FORUM என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்
chandran-raja
புலம்பெயர் நாட்டில் தமிழர் வாழவேண்டும். வேலையில்லாவிட்டாலும் இங்கு விலை உயர்ந்த கார் ஓடவேண்டும்மென்றாலும் வீடுவாங்க வேண்டுமென்றாலும்கோடம்பாக்கத்தில் படமெடுக்க வேண்டுமென்றாலும் தொலைகாட்சி நிலையம் வைத்து நடத்த வேண்டுமென்றாலும் கள்ள கிரடிற்காட் அடிக்க வேண்டுமென்றாலும் ஈழத்தமிழர் அழிய வேண்டுமென்றாலும். புலிகள் வாழ்வை உறுதி செய்யவேண்டும். இப்படி இப்படி ஊர்வலம் நடத்துவதாலேயே சாத்தியம்.
PRO-TAMIL
/இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்./
சோதிலிங்கம் இதை வாசியும்—
வவுனியா வைத்தியசாலையில் வைத்தியரும் தாதியரும் காயமுற்றோருடன் நேரடியாகப் பேசமுடியாத நிலை. படையினரின் விதிமுறையும் கூடவே பிரசன்னமும்!!
மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேசம் ஸ்ரீலங்கா அரசிற்கு கூறிய அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்காகியது.நேற்று ஸ்ரீலங்கா அரசு அறிவித்த 48 மணிநேர அவகாசமும் அதனுடன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் மீண்டும் செயலற்றுப்போய்விட்டன.வுன்னியிலிருந்து வருபவர்கள் சுகந்திரமாக நடமாடலாம் மற்றும் வேற்றுமை காட்டப்படாமல் பராமரிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.ஆனால் இன்று நடந்ததோமுற்றிலும் வேறு:
இன்று வன்னியில் காயப்பட்ட ஒர் இளைஞனும் தாயும் வவுனியாவிற்;கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். காயப்பட்ட இளைஞனை வைத்தியாசாலையில் அனுமதிக்க அனுமதியளித்து விட்டுத் தாயை அவரைப் பார்க்க விடாது வேறு முகாமிற்கு விடாப்பிடியாக மாற்றியது இராணுவம்.காயமடைந்த தனது மகனைப்பார்க்கவோ பராமரிக்க முடியாத மகிந்தவின் சுதந்திரம் இதுதான்.
சம்பவம் இரண்டு-கடந்த 26ம்திகதி நடந்த எறிகணைத்தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கை செஞ்சிலுவைச்சங்க பணியாளருடன் வவுனியாவுக்கு வந்த அவரது மனைவியும் மகனும் வவுனியாவில் வைத்து பிரிக்கப்பட்டு கணவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.படுகாயமடைந்த கணவரின் நிலையறியமுடியாது இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலய திறந்தவெளிச்சிறைச்சாலையில் மனைவியும் மகனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகிந்தவும் இந்தியாவும் சேர்ந்து போட்ட 48மணித்தியால சுதந்திரம் இதுதான். இன்று காயமடைந்து வவுனியாவுக்கு வரும் அனைவரும் பராமரிப்பார் யாருமற்று உயிருள்ள பிணங்களாக்கப்பட்டுள்ளனர். இதுதான் மகிந்தா நேற்றுச்சொன்ன தமிழருக்கான சுதந்திரம். மகிந்தாவின் தங்கமுலாம் பூசிய அறிவிப்புகளுக்கு வரவேற்பளிக்கும் எவரும் இதுபற்றி அக்கறைப்படுவதில்லை. நேற்றய தினம் வவுனியா மருத்துவமனை தாதியின் நேரடி கவலைத்தொடர்ந்து இப்போது காயமடைந்த எவருடனும் கதைக்காதபடி சுற்றிவர பாதுகாப்புபடையால் மருத்துவமனை புடைசூழப்பட்டு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மக்களை போர்ப்பிரதேசங்களில் இருந்து வெளியேற 48 மணி நேர கால அவகாசம் கொடுத்தாலும் அதற்கான வழிவகைகள் அறிவிக்கப்படவோ அல்லது அது தொடர்பான உடன்பாடுகள் எவையும் இதுவரை எட்டப்படவோ இல்லை என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த 2000 மக்களின் நிலையைப் பார்க்கும் போது இனியும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு என்னாகுமோ என்ற அச்சம் எமக்கு எழுந்துள்ளது.அவர்கள் ஒரு சிறையின் உள்ளேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் மத்தியிலிருந்து இளைஞர்கள் காணாமல் போவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் நாங்கள் ஒன்று சேர்ந்து விடுக்கும் வேண்டுகோளாக வன்னியில் தொடரும் மனித பேரவலத்தை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.
வன்னியிலிருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.அமைப்புகளை வேண்டுகிறோம். உடனடிப் போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். நீதியான அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கோருகிறோம் என இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் நாளாக யாழ் மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் முடிவிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் மற்றும் ஐ.நா பிரதிநிதிகள் உட்பட்ட பல தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினாலும் வேறு பல அமைப்புக்களாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையிலும் வன்னியில் மனிதப் பேரவலம் தொடர்வதாகவும் அறிக்கைகளின் படி நேற்றைய தினம் மட்டும் எறிகணைவீச்சுக்களாலும் விமானத் தாக்குதல்களாலும் 44 பேர் கொல்லப்பட்டதாகவும் 172 பேர் காயமடைமந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் உணவு மற்றும் போதிய அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றி எப்போதும் அச்சத்துடனேயே பதுங்குகுழிகளுக்குள் வாழ்ந்து வருவதாக யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
PRO-TAMIL
MPs barred from visiting Vavuniya Hospitals and Detention Camps!
[ rdpf;fpoik, 31 rdthp 2009 ] [ gpuGuhk;(fdlh) ]
Dr. Jayalath Jaywardena MP said that the Sri Lankan Defence Ministry has denied a request made by him and five fellow MPs to meet the injured lying in the Vavuniya hospital and inmates at the detention Centres there.
This has raised serious concerns as to the happenings in those two places according to him.
Tamils held in prisonlike SLA detention centres – CJPCD
TamilNet,
?Considering the plight of the 2000 Tamils who had fled war and are detained in Sri Lanka Army (SLA) detention centres, a justifiable fear arises as to what would happen to those who come to these detention centres which are like prisons; youths detained in these centres are said to have gone missing,” Commission for Justice and Peace of the Catholic Diocese of Jaffna (CJPCD) said in its appeal sent on its third day of the protest fast observed in Jaffna , against the killing of Tamils in the Vanni , sources in Jaffna said.
The appeal , copies of which were dispatched to the Foreign Ambassadors , UN resident representative , in Colombo and organizations like ICRC and other International Humanitarian Organizations , made special mention about Sri Lanka President?s announcement of a 48 hour respite in the attacks on the Tamils in Vanni , allowing them to come into government controlled areas.
?The president?s announcement did not detail the modus operandi and no mutual agreement has been reached on the proposed plan until now ,” the appeal pointed out.
Maavai Senathirajah , the Tamil National Alliance (TNA) parliamentarian for Jaffna , took part in the third day fast protest led by the Bishop of Jaffna , Rt. Rev. Thomas Saundaranayagam , along with more than a hundred persons from various religious and social organizations.
?It is the government armed forces that are directly responsible for the human disaster in Vanni ,” Maavai Senathirajah said , addressing the gathering.
?The government has failed to take sincere and constructive steps to free the people and the indifference of the government is the cause for the people?s sufferings in Vanni,” he added.
?We have rallied again on the third day of the protest fast and we wish to reiterate our urgent requests,” the appeal said.
? We beseech the concerned parties to take immediate action to stop the human disaster in Vanni. ? The ICRC and UN organizations should ensure the safety of the people coming from Vanni to the SLA detention centres. ? An immediate ceasefire to be brought in force. ? A just and peaceful solution should be reached through negotiations.
Para
Dear Comrade Sothi, I appreicate your call for the liberation of the poor tamil people and their children from the iron clutch of fascist LTTE.It is an open fact that LTTE is using the people as a human shield to safeguard themself.Therefore our prime intention is asking the Tamil tiger leadeship to leave the people to move freely to the safe Zone which is announced by the Srilankan govt.There is no point in collaborating with the pro Tiger organization BTF because they never ever respect the will of the people. Because they are fundamentally anti -people and a fascist movement.
The latest request by UN chief BanKi-moon is as follows,”The secretary general calls upon the (rebell ?)LTTE in particular,to allow the civilians in the conflict zone to move to where they feel most secure,including(the govt.controlled )areas.”
I dont think the pro LTTE forces will act in favour of the people or in the liberation of the people. Therefor all the other democratic and pluralistic Tamils and other people must oraganize a mass movement to free the Vanni masses from the Iron clutch of LTTE.The pro ltte agents and their finamies are trying to safeguard the fascist ltte leadeship to continue their fund collection and all the other business.
chandran.raja
கோஷம் இதுவாக இருக்கட்டும்.
அரசே! தீர்வை முன்வை!!
புலியே! மக்களை விடுவீ ! !
damilan
புலிகள் தங்களால் சண்டை பிடிக்க முடியாத போது மூன்று விடயங்களைக் கையாள்வர்
1. அரசுடன் சமாதானம் பேசுவது.
2. சிங்கள மக்களைக் கொலை செய்வது
3. சொந்த மக்களைக் கொல்வது.
எத்தனையோ முயற்சிகள் பண்ணி சமாதானம் சாpவரவில்லை இப்போதும் அரசியல் தீர்வுபற்றி கதைத்துள்ளார் நடேசன். அப்ப தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டார்களா? இப்போது புலிகளும் துரோகிகள்தானே. துரோகத்திற்கு தண்டணை புலியின் பாசையில் மரணம் இப்ப இந்தத் தண்டணையை வழங்குவது ராணுவம். தான் போட்ட சட்டத்திற்கு தனக்கே தண்டணை கிடைக்கிறது. ‘அரசன் அன்று கொல்வான் ஆமி நின்று கொல்லும்’
சிங்கள மக்களை கொலைசெய்வதும் தற்போது நின்று விட்டது அதற்கு காரணம் கடுமையான பாதுகாப்பு முறை. தொடர்சியான செக்கிங்.
மூன்றாவது வழி சொந்த மக்களை கொல்லுவது புலிகளுக்கு உள்ள ஒரே இறுதியான இலகுவான வழி கடற்த கலங்களில் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் மோதல் தவிர்ப்பின் போதே மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர். மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் அடித்த செல் புலிகளுடையாதாகத்தான் இருக்கும்.
ஆக புலிகளின் துருப்புச் சீட்டு மக்களே இனி தெpர்வரும் நாட்களில் அதிகமான மக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை வைத்தே புலி தனது காயை நகர்த்தும். பாவம் அப்பாவி மககள் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
SUDA
மேலேுயுள்ள செய்திய புரோ தமிழ் ஏந்த வெப் சைற்றில பார்த்துப் போட்டு எழுதியிருக்கார் என்டு எல்லார்க்கும் நல்லாத் தெரியும்.
அந்த சைற்றில ஏதோ அரச கட்டுப்பாட்டுக்குள் போனால் நீங்கள் இராணுவத்தால் கொலை அல்லது துன்புறுத்தல் செய்யப்படுவீர்கள் என்ட மாதிரி அந்த புலியாதரவு சைற்றில போட்டிருக்கிறாங்கள். நான் தெரியாமத்தான் கேட்குறன் வாகரை தொப்பிகலை குரங்குபாஞ்சான் கஞ்சிக்குடிச்சாறு(அம்பாறை) மன்னார் வவுனியா யாழ்ப்பாணம்…. இங்கெயெல்லாம் முன்ன புலியின்ர கட்டுப்பாட்டில இருந்துட்டு பிறகு அரச கட்டுப்பாட்டுக்குள்ள போன சனங்களெல்லாம் எங்க செத்தா போயிட்டாங்கள்? அதுகள் இன்டைக்கும் நல்லாத்தான் இருக்குதுகள் கப்பம் பிள்ளை பிடிப்பு பயம் இல்லாமல்.
உதெல்லாம் எங்க சனம் அங்க போட்டா நாளைக்கு நம்ம பேச்சு எடுபடாதே என்ற பயத்தால் புலி விடுற பொய்ப்பிரச்சாரம். தாங்கள் அப்பாவி சனத்த வலுக்கட்டாயமா தடுத்து வச்சிருக்கிறத அவையளின் உறவினர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு நியாயப்படுத்துறக்கு புலியால் செய்யப்படும் பிரச்சாரமும் கூட.
புலம்பெயர் வாழ் மக்களே ஏமாறாதீர்கள்.
Thaksan
புலி தனது இறுதி சுவாசத்தை இழுழுத்து விடுகிறது. இந்த இழுவைக்கு மக்கள் தேவைப்படுது. பாவம் மக்கள். எல்லா மக்களுக்கும் பயிற்சி குடுக்கிறம்… இது இறுதிப் போர்…எண்டு அறிக்கை மேல் அறிக்கை விட்டதோட வீடியோவும் எடுத்து காட்டிச்சினம். இப்ப ஆமிக்கு எல்லாரும் பயிற்சி எடுத்த புலியாக தெரியுது. துரோகி எனத் தீர்த்து அன்றொரு நாள் சுட்ட வெடி……கண்டவனை> நிண்டவனை….ஐயகோ! பரிதாபம்!! கடைசியாக சுட்டவனையும் சுடுகிது!!!.