சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

varsa.jpgதிருகோண மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமியான ஜூட் ரெஜி வர்ஷாவின் படுகொலை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் 5 பேரும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களில் இருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் தமது விசாரணைகளில் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, சந்தேக நபர்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம் பெற்ற 30இற்கும் மேற்பட்ட ஆட்கொலைகள், கப்பம், ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

வர்த்தகர்கள் ,சினிமா திரையங்கு உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கப்பம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நபர்கள் கொலை செய்தவர்களின் சடலங்கள் கடந்த காலங்களில் நடுக்கடலில் வீசப்பட்டுள்ளன. சிறுமியின் சடலத்தையும் இதே பாணியில் கடலில் போடுவதற்கே இவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும் அன்றைய தினம் கடற்படையினரால் விதிக்கப்படடிருந்த மீன் பிடித்தடை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kusumpan
    Kusumpan

    பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான். கடலிலை போட நாம் என்ன மீன் குஞ்சுகளா? இலங்கையில் இராச்சதர்கள் வாழ்ந்ததற்கு மகிந்த முதல் இவர்கள் வரை சாட்சி உள்ளது

    Reply
  • palli
    palli

    குசும்பு ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டுவது தெரிகிறது. ஆனால் என்ன என்பது மட்டும் புரிய மாட்டேங்குது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தவணைமுறையில் செய்திகளை வெளியிடுவதை விட்டுவிட்டு அரசு உண்மையான குற்றவாளிகளின் கடந்த கால வரலாறுகளை வெளிக்கொணர வேண்டும். அவர்களின் உண்மையான தொடர்புகளும் அம்பலத்திற்கு வர வேண்டும். இதன் மூலமே அரசு கிழக்கு மாகாண மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.

    Reply