1947 யூலை 11 அன்று ஒரு கப்பல் பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பிய யூத மக்கள். வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4515 பேர் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கனவுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.
1928ல் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் “President Warfield” மக்கள் போக்குவரத்திலும் படையெடுப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் பின் இக்கப்பல் Potomac Shipwrecking Co என்ற நிறுவனத்திற்கு பழைய இருப்புக்கு பேரிச்சம் பழம் என்பது போல் விற்கப்பட்டது. ஆனால் இந்தக் கப்பலை வாங்கிய Potomac Shipwrecking Co இடம்இருந்து அதனுடன் தொடர்புடைய Hagana என்ற யூத அரசியல் அமைப்பினூடாக இறுதியில் பலஸ்தீனத்தில் தலைமறைவாக செயற்படும் இரகசிய இயக்கமான Hamossad Le’aliyah Bet இன் கைகளில் சென்றடைந்தது.
Hagana அமைப்பு இந்தக் கப்பலை தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியது. அன்று பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்க இக்கப்பல் தயாரானது. பைபில் காலத்தில் குறிப்பிடப்படும் எகிப்தில் இருந்து கன்னான் க்கு இடம்பெற்ற இடம்பெயர்வைக் குறிக்கும் வகையில் Exodus 1947 இக்கப்பலுக்கு எனப் பெயரிடப்பட்டது.
1947 யூலை 11 அன்று பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட Exodus 1947 ஒரு வாரத்தில் யூலை 18 அன்று பாலஸ்தீனக் கடற்பரப்பை அடைவதற்கு முன்னரேயே பிரித்தானிய கடற்படை போர்க்கப்பல்கள் Exodus 1947யை சுற்றி வளைத்தன. இதில் நடந்த கலகத்தில் Exodus 1947 இன் செலுத்திகளில் ஒருவரும் யூதப் பயணிகள் இருவரும் கொல்லப்பட்டனர் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் பிரித்தானிய கடற்படையினர் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.
இந்த கப்பல் பயணிகளின் பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களின் நாடு தேடும் பயணம் என்ற வகையில் அதற்கு அதீத முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும் சட்ட விரோதமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் திருப்பி வந்த இடத்திற்கே அனுப்புவது என்று பிரித்தானிய காலனியாளர்களால் முடிவெடுக்கப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த Exodus 1947 யை பாலஸ்தீனத்தின் ஹய்பா துறைமுகத்திற்கு கொண்டு சென்று பயணிகளை வேறு மூன்று திருப்பி அனுப்புவதற்கு தயாரான Runnymede Park, Ocean Vigour, Empire Rival கப்பல்களில் ஏற்றி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். கப்பல்களில் பிரித்தானிய கடற்படையினரும் பயணம் செய்தனர்.
திருப்பி அனுப்பப்ட்ட கப்பல்கள் பிரான்ஸின் Port-de-Bouc துறைமுகத்தை அடைந்தது. ஆனால் தாயகம் அமைக்கும் கனவுடன் சென்ற பயணிகள் பிரான்ஸில் தரையிறங்க மறுத்தனர். அவர்களைப் பலவந்தமாக தரையிறக்குவதற்கு ஒத்துழைக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதனால் பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பலைக் கொண்டு வந்து பயணிகளைத் தரையிறக்க முற்பட்டது. அதற்கு ஜேர்மனியே அவர்களுக்கு அருகில் அமைந்திருந்தது.
ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த இந்த கப்பல் பயணம், ஹிட்லரின் வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்ட அதே மக்களை ஜேர்மனியிலேயே கொண்டு சென்று தரையிறக்க முற்படுவது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் அற்றது. அவர்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி முட்கம்பி முகாம்களில் அடைக்கவும் பிரித்தானிய அரசு முடிவு எடுத்தது. ஜேர்மனியின் ஹம்பேக் துறைமுகத்தில் பயணிகள் தரையிறக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் நீண்ட அலைச்சலில் சோர்வடைந்து போராட வலுவற்று தரையிறங்கினர். ஆண்கள் போராடினாலும் இறுதியில் பலவந்தமாகத் தரையிறக்கப்பட்டனர்.
திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் பிரித்தானிய படைகள் மோசமாக நடந்துகொண்டதாக விபரிக்கப்பட்டது. ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் விளையாடுவது போல் பிரித்தானிய படைகள் நடந்துகொண்டதாக உலக யூத கொங்கிரஸ் செயலாளர் Dr Noah Barou பதிவு செய்கிறார். கப்பலில் கொண்டு வரப்பட்டவர்கள் நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்கள் என்ற கரிசனை கூட இன்றி தாக்கப்பட்டதாக அப்பதிவு தெரிவிக்கிறது. கப்பலில் இருந்த யூத மக்கள் பிரித்தானிய படையினரை ‘Hitler commandos’, ‘gentleman fascists’, ‘sadists’ என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.
இந்த Exodus 1947 கப்பல் அகதிகள் பிரித்தானியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. குறிப்பாக நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களை ஜேர்மனியிலேயே தரையிறக்கி தடுத்து வைத்தது பிரித்தானிய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபகீர்த்தியானது. அந்த வகையில் Exodus 1947 ன் தாயகத்தை அமைக்கும் கனவு உடனடியாக நிறைவேறாது போனாலும் சர்வதேச கவனத்தை யூத மக்களின் மீது திருப்பியதுடன் சர்வதேசத்தின் ஆதரவை தமக்காகத் திருப்பியதிலும் வெற்றிகண்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள யூத மக்களின் போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யூத மக்கள் மீது அனுதாபம்கொள்ள ஆரம்பித்தது.
இறுதியில் 1948ல் பிரித்தானிய அரசு இஸ்ரேல் அரசை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த புவியியல் அரசியல் காரணங்களின் தாக்கம் மிக முக்கியமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பனிப்போர் மத்திய கிழக்கில் மையங் கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.
1948 ஏப்ரலில் ஜேர்மனியில் இருந்த இரு முகாம்களிலும் Exodus 1947 கப்பலில் பயணித்த 1800 அகதிகள் மட்டுமே இருந்தனர். ஏனையோர் பாலஸ்தீனத்துக்கு செல்ல முயல்கையில் கைதாகி காலவரையறையின்றி பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த சைப்பிரஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டனர். இஸ்ரேலிய அரசு அங்கிகரிக்கபட்ட பின்னர் இவர்கள் தங்கள் தாயகபூமியாகக் கருதும் இஸ்ரேலைச் சென்றடைந்தனர்.
இவர்கள் பயணம் செய்த கப்பல் Exodus 1947, 1952ல் கடல் மட்டத்திற்கு எரிக்கப்பட்டு ஹய்பா கடற்கரையில் நிறுத்தப்பட்டது. 1963ல் இத்தாலிய நிறுவனத்தினால் பிரித்து மேயப்பட்டது.
._._._._._.
“வணங்கா மண்”: உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.
பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.
தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது.
“வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு.
பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.
இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.
நன்றி-பாரிஸ்தமிழ்.கொம்
._._._._._.
Operation Vananga-Man Vanni Mission என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொருட்களை சேகரிப்பதில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid, Tamils Health Organisation, The Tamils Support Foundation, Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை வழங்குவதாகக் கூறப்பட்டு உள்ளது.
இந்த வணங்கா மண் நடவடிக்கையை எவ்வாறு அனைவருக்கும் அறியப்படுத்த முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் மார்ச் 17ல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கேட்ட போது சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
‘சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ளது’ என்று செய்திகள் கசியவிடப்பட்ட போதும் ‘வணங்கா மண்’ முல்லைத்தீவுத் தரையை தட்டும் என்பது ஒரு பகற்கனவாகவே உள்ளது. நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. கப்பலில் இலங்கைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் இதனையே செய்கின்றன.
‘வணங்கா மண்’ இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசும் பிரித்தானிய தூதரகமும் அவ்வாறான ஒரு கப்பலின் வரவு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மனிதாபிமான நோக்கத்துடன் அவ்வாறான ஒரு கப்பல் வருமாக இருந்தால் அது இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கப்படுமா எனக் கேட்டபோது, இலங்கையின் கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
‘வணங்கா மண்’ ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அமைய உள்ளது. ‘வணங்கா மண்’ ஏற்பாட்டாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கும் இலங்கை அரசின் அனுமதி அவசியம் என்பது தெரியும்.
1947ல் பிரான்ஸில் இருந்து பாலஸ்தீனத்திற்கு Exodus 1947 புறப்பட்டது போல் ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த மண் – வன்னி மண் – வணங்கா மண் முல்லைத்தீவு நோக்கிப் பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்படலாம். இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் அதனை இலங்கை கடற்படை வழிமறிக்கலாம். மனிதாபிமானக் கப்பல் வழிமறித்ததைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கொதித்தெழலாம். தீக்குளிக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மேல் சர்வதேச அனுதாபத்தை அதனால் ஏற்படுத்த முடியுமா?
அன்றிருந்த சர்வதேச அரசியல் நிலவரம் பனிப்போர் இன்றில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள காலம். மார்ச் 1ல் Tamils Against Genocide என்ற அமைப்பு அமெரிக்க சட்டவாதி புரூஸ் பெயின் என்பவரை அழைத்து லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் மரதன் ஓட்டத்தில் கருத்தரங்குகளை நடாத்தியது. அதில் ஒன்றில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவில் உள்ள செனட்டர்களிடம் தமிழ் என்று சொன்னாலே அவர்கள் தமிழ் புலிகளையும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளையும் தான் நினைக்கிறார்கள். அதனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையை அவர்களுக்கு புரிய வைப்பது கடினமானதாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். தமிழ் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை முதலில் நிறுவ வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுவே இன்றைய யதார்த்தம். அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி தனது வாதத்தை வெல்வதற்கு தமிழ் மக்களும் தமிழ் புலிகளும் ஒன்றல்ல என்கிறார். இலங்கை அரசு புலிகளை அழிக்கிறது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது என்று சரியாகவே தனது வாதத்தை ஆங்கிலத்தில் வைக்கின்றார்.
ஆனால் இந்த அமைப்புகள் புலம்பெயர் மக்களுக்கு தமிழில் பேசும் போது தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க முடியாது புலிகள் தான் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான் புலிகள் என்று சொல்லி முல்லைத்தீவு மக்களை மரணப்பொறிக்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல வாயும் வயிறும் கட்டப்பட்டு உள்ள மக்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பூர்வீக மண்ணைவிட்டு – அந்த மரணப் பொறியைவிட்டு அவர்கள் வெளியெற மாட்டார்கள் என்று இவர்கள் குரல் எழுப்புகிறார்கள். ரொறன்ரோ லண்டன் சிட்னி என்று வீடும் வளவும் வாங்கி விட்டுவிட்டு முல்லைத்தீவை பூர்விக மண் என்று அந்த மக்களின் தலையில் கட்டிவிட்டு கதையளக்கிறார்கள் புலத் தமிழர்கள்.
‘வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.’ இங்கு புலத் தமிழன் ‘வணங்கா மண்’ கப்பல் அனுப்புகிறான் வன்னி மக்களுக்கு. வன்னி மக்கள் எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டுவார்கள் என்ற நினைப்பில் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகிறார்கள்.
இலங்கை அரசு பேரினவாத அரசு என்பதை மட்டும் சரியாகவே இனம்காட்டி தமது தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்வதைத் தவிர தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு தந்தை செல்வா முதல் அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட தம்பி பிரபாகரன் வரை யாரும் விதிவிலக்கல்ல. முன்னையவர்கள் இருவரும் மிதவாத அரசியல் தலைவர்கள். அவர்களின் பார்வை தமிழ் வாக்கு வங்கியின் மீதே இருந்தது. அதனால் அவர்களுக்கு ஓரளவு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருந்தது. பின்னையவருக்கு அந்தக் கவலையும் இல்லை. ஏகபிரதிநிதி. தனிக்காட்டு ராஜா.
தமிழ் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட தியாகிகளும் துரோகிகளும் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் எகிறிக்கொண்டே சென்றது. துரோகிகளின் வரைவிலக்கணங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டு இன்று தங்கள் உயிரைக்காக்க மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களும் துரோகியாகி விட்டார்கள். ரொறன்ரோவிலும் லண்டனிலும் பாரிஸிலும் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக பூமி பற்றி விசேட கருத்தரங்குகள். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் பரவாயில்லை பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்காக இறுதிவரை போராட வேண்டுமாம். அதற்காக தாங்கள் ஐரோப்பாவில் இருந்து உணவும் மருந்தும் வணங்கா மண்ணில் முல்லைத் தீவுத் துறைமுகத்திற்கு வந்து சேருமாம்.
இலங்கை அரசுகளுடைய பேரினவாதப் போக்கும் தமிழ் தலைமைகளின் குறுந்தேசியவாதப் போக்கும் அரசியல் வறுமையும் தமிழ் மக்களை இன்று மிக மோசமான போர்ச் சூழலில் நிறுத்தி உள்ளது. மீளவும் தங்கள் தலைமையை நிறுவ புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து துருப்புச் சீட்டக்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று வன்னி மக்களின் உயிரிழப்புகளால் ஏற்படக் கூடிய மனித அவலம் என்பதும் வெளிப்படையாகி விட்டது. ஒரு பக்கம் இனவாத அரசு. மறுபக்கம் அதற்கு பலிகொடுக்கத் தயாராக நிற்கும் புலிகள். இரண்டுக்குமிடையே வன்னி மக்கள்.
‘நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.’
கலாநிதி குமார் ரூபசிங்க
இன்று எல்லோர் முன்னும் உள்ள மிகப்பெரிய பொறுப்பு ஏற்படப் போகின்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தவது. தாகத்திற்கு தண்ணி தாருங்கள் என்று மக்கள் உயிருக்கு தவிக்கிறார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருந்துகொண்டு ‘வணங்கா மண்’ணில் தண்ணி அனுப்புவம் என்று றீல் விடுவதை விட்டுவிட்டு அங்குள்ள அவலத்தை தடுக்க யதார்த்த்தமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
lama
LTTE and their people collected money – using man technic -nothing elase – wait and see
kanakaratnam
Exodus போல வணங்காமண் கப்பலிலும் வெளிநாடுகளிலுள்ள தமிழீழ நலன்விரும்பிகள் எல்லாரும் ஏறிச் செல்ல வேண்டும். தனிய உணவும் மருந்தும் சில அதிகாரிகளும் மட்டும் போனால் எவ்வித பிரயோசனமும் இராது. பெருந்தொகையாக சனங்கள் போகவேண்டும். அதுக்குரிய வழிவகைகளை பிரிஎவ் தாமதியாது செய்ய வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலை அங்கீகரித்ததுபோல தமிழீழத்தையும் உலகநாடுகள் அங்கீகரிக்கும்
john
கப்பலில் சாமான்கள் ஏற்ற இப்பத்தான் றோட்டு றோட்டாய் கலக்சன் நடக்குது. சாசு சேர்த்து சாமான் வாங்கி ஏத்தி கப்பல் வெளிக்கிட்டு போய்ச் சேரமுந்தி அங்கை ஆமிக்காரன் எல்லாரையும் வழிச்செடுத்துப் போடுவாங்கள். இங்கு நிறைய சொத்துகளுடன் இருப்பவர்கள் ஓரிரு வீட்டை விற்றுபணத்தைக் கொடுத்தால் உடனகாரியமாற்ற ஏதுவாயிருக்கும். பெரிய முதலாளிகள் எல்லாரும் பெருந்தொகைப் பணத்தை வாரி இறைக்க வேண்மும் அப்’பத்தான் தமிழீழம் கெத்யாய் மலரும்.
vithusha
தமிழீழம் கிடைப்பது உறுதியாகிறது. இது தலைவரின் ஒரு முக்கிய இராஐ தந்திரம்.
thurai
புலியின் உயிர்போகுமுன் வால் ஆடுவது போல்தான் வணங்காமண் கப்பலின் பயணமும்.
துரை
viji
வடகிழக்குப் பகுதிகளில் சனத் தொகை கணிசமானவளவு வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் யாழ்பாணத்தில் நிலமை மிக மோசம். கணக்கெடுப்பு நடந்து தேர்தலும் வைத்தால் 3 4 எம்பிக்களே தெரிவு செய்யப்படுவார்கள். அத்தோடு ஆட்களில்லா வீடுகளையும் இராணுவத்தினர் கணக்கெடுப்பதாக அங்கிருந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர். போகின்ற கப்பலில் தமிழ் ஈழ விரும்பிகளும் பெருமளவில் சென்று குடியேறினால தான் மண்ணையும் காப்பாற்ற முடியும்.
santhanam
/தமிழீழம் கிடைப்பது உறுதியாகிறது. இது தலைவரின்/
இந்தியாவின் போலிச்சாமி வேசம் போடுகிறீர் விதுசா.
viji
தமிழீழம் கிடைப்பது உறுதியாகிறது. இது தலைவரின் ஒரு முக்கிய இராஐ தந்திரம்”
பயந்தாங் கொள்ளியும் தொடைநடுங்கியுமான உங்கள் தலைவர் புற்றுக்குள் ஒழிந்து கொண்டு இப்படி எத்தனை தந்திரோபாயங்களை செய்து மக்களை மாட்டி வைத்திருக்கிறார். என்ன நடுக்கடலில் கப்பலில் இருந்தா தமிழீழம் இறங்கப் போகிறது?
SUDA
//இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.//
மேலுள்ள தகவல்படி பார்த்தால் ஒபரேஷனுக்குரிய 80 வீதமான வேலைகளும் செலவுகளும் முடிந்து விட்டுள்ளது. இவ்வளவு பெரிய செலவுகளைச் செய்தவர்களுக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வது மட்டும் சிரமமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
மாற்றுகருத்து
இலண்டனில் வருடத்தில் 4-5 தடவை மூடிய சிறுமண்டபத்தில் 40பேருக்கு குறைவானர்கள் ஒன்றுகூடி இலங்கைதீவில் கொம்முனிச புரட்சி செய்யலாம். ஒரு சிங்களஆதரவு இணையதளம் நடத்தி….. ஈழத்தமிழர்களிற்கு உரிமை பெற்று கொடுக்க முடியும். ஆனால் இலட்சகணக்கான புலம்பெயர் ஈழத்தமிழரால் ஒன்றுகூடி ஊர்வலம் செய்தோ வணங்காமண் கப்பல் அனுப்பியோ ஈழத்தமிழர் அவலம்தீர ஒரு சிறிய பங்களிப்பை செய்ய முடியாதென்றதை எல்லோரும் நம்புங்கோ…………….
………………உங்களிற்கு ஈழவிடுதலை ஆதரவுதடை புலித்தடையுள்ள பிரித்தானியாவிலிருந்து இயங்கும் ஈழமக்கள் ஆதரவு செயற்பாட்டாளர்களையும் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் தகுதி துளி கூட கிடையாது……………….
thurai
இந்தியாவில் நேரு பரம்பரைபோல், தமிழகத்தில் கருணாநிதி பரம்பரைபோல் இலங்கையில் பிரபா பரம்பரை இருக்கச் செய்யவே இந்த வணங்கா மண் கப்பல்.
ஈழத்தமிழரிடம் இப்டியான தனிமனித, குடும்ப, சமூகா ஆதிக்கம்கொண்ட அரசியல் வளர்ச்சி பெறமுடியாது. யாராவது முயன்றால் அது அழிவிற்கே வழிகாட்டும்.
துரை
palli
மாற்றுகருத்து அங்கு உங்கடை தலை தன்னைதவிர யாரும் தமிழருக்கு தலைவன் கிடையாது.அதனால் யார்ரும் எதுவும் பேசப்படாது அப்படி பேசினால் பொட்டர் பாத்துக்குவாரென மிரட்டுகிறார். நீங்க இங்கு எமக்கு பேச துளி இல்லை எண்கிறீர்கள். ஆக மொத்தத்தில் நல்ல பயிற்ச்சிதான் தலை தந்துள்ளது. ஒரு துளி மண்கூட இல்லாமல் பறிபோகும் தறுவாயிலும் கெடு பிடிக்கு குறைவில்லை. வணங்கா மண்ணும் சரி அடங்கா தமிழனும் சரி மக்களை மதிக்காவிடில் இப்படிதான் நாலு காலில் நடக்க வேண்டி வரும்.
nesan
தேவைப்பட்டால் முன்னாள் போராளிகள் 25000 ஆயிரம் பேருடன் ஒரு 10கப்பல் போகவும் தயார்ப்படுத்த இது ஒரு முன்னோட்டம். ஜெயபாலன் உங்களால் ஒரு 10 பஸ் லண்டனில் ஏற்பாடு செய்து உங்கள் மாற்றுகருத்து செல்வங்களை கூட்டிக்கொண்டு பிரான்ஸ்க்கோ ஜேர்மனிக்கோ செல்ல முடியுமா? இந்த கட்டுரை இயலாமையின் ஆத்திரத்தை தீட்டியுள்ளீர்கள். இவ்வளவு மக்களின் இழப்புகளுக்கு உங்கள் செல்லமணிகள் வன்னி மக்கள் தொடர்பான என்ன வேலைதிட்டத்தை முன்னெடுத்தீர்கள்? மகேஸ்வரிக்கு விழா எடுத்த உங்களால் 2000 மக்களின் கொலைகளுக்கு என்ன செய்தீர்கள்? இதே கட்டுரையில்,/”ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது”/ இது உண்மையானால் கூட இதில் என்ன தவறு உள்ளது. கப்பல் சாட்டர் பண்ண பொருளை கொடுத்து கப்பல் சாட்டர் பண்ண முடியுமா? அதை விட சுனாமி நேரத்தில் புலம் பெயர்ந்த மக்கள் வன்னியின் கால நேர சூழல் தேவைக்கு பயன்படாத ஒத்துவராத பழுதடையகூடிய ஏன் இங்கு குளிருக்கு போடக்கூடிய உடுப்புக்களையும் அனுப்பி வைத்தனர். ஆனால் அவை அங்கு பயன்படுத்த முடியாமல் போனது. இப்படி இன்னோரன்ன காரணங்களுக்காக அங்கு மக்களால் பாவிக்ககூடிய சூழலுக்கு ஏற்ற பொருட்களை கொள்வனவு செய்ய ஏன் பணம் தேவைப்படாது? பணம் என்று கேட்டாலே அது புலிக்கு போய்விடும் என்ற உங்களின் அதீத கற்பனைகளுக்கு அதனை புகுத்தியுள்ளீர்கள். அப்படி கொடுத்தாலும் நீங்களா கொடுக்குறீர்கள்? புலிகளை ஆதரிப்பவர்கள் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த பூச்சாண்டித்தனமான கருத்துருவாக்கங்கள் இனி எடுபடாது.
palli
எது விதுசாவின் பின்னோட்டமா?
nesan
தேசத்துக்கு வெளியால் மாற்றுகருத்து தோழர் சொன்னது போல் 40 பேர் கூடும் மண்டபத்தை கயர் பண்ண தான் திராணியுள்ளது, அதற்கு வெளியே உங்கள் எவராலும் வர முடியாது. எல்லாவற்றுக்கும் புலி கூட்டத்தை சாட்டிக்கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டமட்டுமே லாயக்… கப்பல் ஒட்ட முடியாது.. பிளேன் ஓட்ட முடியாது.. நீர் மூழ்கி கப்பல் செய்ய முடியாது… புலிக்கூட்டத்தால் எப்படி இப்படி முடிகிறது என்ற பொறாமைதான் மேலோங்கியுள்ளது.
nesan
1968இல் காசியானந்தன் எழுதிய தமிழன் கனவுநூலில் உள்ளபடி பின்னர் பலதும் நடந்துள்ளது. இஸ்ரேலின் கனவு என்று முயற்சியை கொச்சைப்படுத்த வேண்டாம். உங்களால் முடியாமல் போனால் … விமர்சிக்க நிறைய பேர் — செய்யதான் — ஜெயபாலன் உங்களால் முடிந்ததை சொல்லுங்கள்… முடியாததை விமர்சித்து கட்டுரையை நிரப்ப வேண்டாம்
மாற்றுகருத்து
பல்லி! புலம்பெயர்மக்கள் ஈழத்தமிழர் பாதுகாப்பு சுதந்திரம் கேட்டு பிரசெல்ஸ் சென்ற போது அவர்களது பஸிலேயே அவர்களை உளவுபார்க்க போன நீர் தமிழர் நலன்பற்றி பேசவேண்டாம். சிங்கள நலனுக்கணக்காக செயற்படுபவர்கள் ஈழத்தமிருக்கு முதலைகண்ணீர் வடிக்க தேவையில்லை.
BC
தலைவர் கடைசிவரை கலக்சனிலும் கெடுபிடியிலும் போட்டுதள்ளுவதிலும் உறுதியாகவே இருப்பார்.
santhanam
முல்லைத்தீவில் இருந்து சென்ற பொதுமக்களுடன் வவுனியாவுக்கு சென்ற புலி உறுப்பினர்கள் 65 பேர் ஒமந்தையில் மேற்கொள்ளப்படும் ஆரம்ப விசாரணைகளின் பின்னர், புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். 2,169 பேர் புதுக்குடியிருப்பு, சுண்டிக்குளம் மற்றும் ஒமந்தைக்கு நேற்று சென்றதாகவும் இவர்களுடன் சென்ற 65 புலி உறுப்பினர்களிடம் ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனையோர் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தில் இருந்து வெளியேறிய 48,611 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக படையினர் கூறியுள்ளனர்.
இது எப்படி விதுஷா- நேசன் உங்களிற்கு உலக அரசியல் சூனியம்.
padamman
வணங்கா மண் நல்ல வசூல்தான் ஆரம்பத்தில் இப்போது கொஞ்சம் குறைவுதான் பொருளைவிட பணம் என்றவுடன் மக்கள் சற்று யோசிக்க இதுவும் சுனாமிக்கு சேர்த்ததைப்போல் அவ்வளவு பணத்தையும் சுட்டது போல் ஆகிவிடும் என்று பல மக்கள் கொடுக்க மறுக்கின்றர்கள் சிலர் கொடுத்தபின் ஆதங்கபடுகின்றர்கள்.
jimmy
அப்படியெண்டால் நேசன் அந்த 2000 பேரும் புலி சுட்டுத்தான் செத்ததென்று சொல்கிறீங்கள்.
nesan
……………………………….. ” நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. “” –
villan
jeyabalan … are you spending your money,… their money, their car, their petrol. you just waste time on writing these….
Kullan
காசியண்ணர் கனவுகண்டார் இலங்கைத்தமிழன் செத்தான். இந்தியாவில் இருந்து கொண்ட நல்லாக்கனவு காணலாம் தானே.
நேசன்! 10 பஸ்கொண்டு போங்கோ பாப்பம் என்கிறீர். மாற்றுக்கருத்து! உங்களின் ………? பல்லி பஸ்சில் வந்து உளவுபார்த்தது என்றால் அதற்காக அசராங்கத்தின் காலில் விழுந்ததாக அர்த்தமாகாது. உங்களுடையதும் தலைகளினதும் கருந்துப்படி மாசு மறுவற்றவர்கள் புலிகள் என்பதாகும். புலிகள் மேல் விமர்சனம் வைப்பவர்கள் எல்லாரும் அரசின் கால்களில் விழுந்தவர்கள் அல்ல. புலிகள் என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுள்களா? கடவுள்களையே விமர்சனத்துக்கு மட்டுமல்ல கோட்டிலும் நிறுத்த மனிதன் தொடங்கிவிட்டான்.
Kullan
வணங்காமண் மட்டியிட்டுக் கிடக்கிறது போய்பாருங்கள். உங்கள் கப்பலை குத்துவிளக்கேற்றி ஆலாத்தி எடுத்துத்தான் அரசு வரவேற்கப் போகிறது.
வன்னிப்புலி
கப்பல் ஓட்டினோம்…
பிளேன் ஓட்டினோம்..
நீர் மூழ்கி கப்பல் செய்தோம்….
என்னத்தைக் கண்டோம்?
இப்ப துண்டு மண்ணிலை நிண்டுகொண்டு வணங்கா மண் வராதோ என பார்க்க வேண்டிக்கிடக்குது.
narathar
ஜெயபாலன்,
வன்னியிலுள்ள மக்களைக் காப்பற்ற நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? இங்கிருந்து கொண்டு கதைக்க வேண்டாம் வன்னி செல்லுங்கள் பார்ப்போம் என்று கூறினீர்கள். இப்போது கப்பலில் வன்னி சென்றால், அதையும் விமர்சனம் செய்கிறீர்கள். …………………
கப்பல் பயணம் ஆகக் குறைந்தது சர்வதேச ரீதியாக யூதர்களுக்கு நடந்ததைப்போல் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்க்கும் அல்லவா?
அதன் மூலம் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்கள் உருவாகும் அல்லவா?
நீங்கள் ஒரு ஐம்பது பேர் கூடி மூடிய அறையில் குசு குசுப்பத்தை விட இது சிறந்த போராட்ட வழி முறை தானே? மக்கள் போராடினால் உங்களுக்கு ஏன் வையித்தைக் கலக்குது?
nadesh
வில்லன் கப்பல்தான் போகுதெண்டு கட்டுரை சொல்லுது. நீங்கள் கார் விடுகிறீங்கள்
thurai
//புலிகளை ஆதரிப்பவர்கள் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த பூச்சாண்டித்தனமான கருத்துருவாக்கங்கள் இனி எடுபடாது.//
ஈழத்தில் அம்மன் கோவிலிற்கு ஆலாத்தி அருட்சனை செய்து பணம் பிடுங்கியவர்கள், இன்று உலமுழுவதும் கோவில் கட்டி பணம் கறக்கிறார்கள். ஆனால் ஈழத்தில் அம்மன் தலையில் இப்ப காகம் இருக்க புலத்தில் அம்மன் தலையில் பொன் முடியுள்ளது.
புலியின் தமிழீழத்திற்கும் இதே நிலைதான். புலத்தில் மட்டும் தான் வீ வான்ட் தமிழீழம் இலங்கையிலல்ல. எங்கே பணம் அங்கேதான் புலி.
துரை
sapi
என்ன தான் சொன்னாலும் புலி ஆதரவளார்கள் மக்களுக்காக ஏதோ ஒன்று செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் புலி எதிர்ப்பாளர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள் புலி ஆதரவாளர்களையும் செய்ய விட மாட்டார்கள். அவர்களுக்கு புலியை விமர்சிக்கவே காலம் சரியாய் இருக்கும்.
kamal
ஆயிரக் கணக்கில் கூட்டங்களுக்குச் சனங்கள். பொங்குதமிழ் எண்டால் மாவீரர்தினமென்றால் 40000; 50000 எண்டுவருவாங்கள் ஊர்வலமோ ஒருலட்சம் 2 லட்மமெண்டு திரளுவாங்கள். அப்பிடியிரக்க இந்த 40: 50 சனம் ஏன் அடிக்கடி உறுத்துது. அப்பஅவங்கள்ல ஸ்ரோங்கான விசயமிருக்குத்தான்.
மாற்றுகருத்து
“பல்லி பஸ்சில் வந்து உளவுபார்த்தது என்றால் அதற்காக அசராங்கத்தின் காலில் விழுந்ததாக அர்த்தமாகாது…….”Kullan
வெறும் விமர்சனத்திற்காகதான் ஒருவர் தனது முழுநாள் பொழுதை செலவழித்து உளவுபார்த்தவர் என்று நீங்கள் “சிங் சக்….” போடலாம் அதை மற்றவர்கள் அப்படியே நம்புவார்களென சுயதிருப்தி கொள்ளுங்கள். பிரசெல்ஸிற்கு ஊர்வலம் போனவர்கள் புலிகளா? மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாய்தான் தெரியும்.
murugan
இரண்டு ரெலிவிசன் எண்ணுக்கணக்கற்ற இணையத்தளங்கள் உருவேற்றும் பாடல்கள் காட்சிகள் இவற்றை வைத்துக் கொண்டு அப்பாவிகளை ஏமாற்றுவது பெரிய சாதனையா? உலகம் உங்களை திரும்பிப் பார்ப்பது இருக்கட்டும். முதலில் உங்கள் தலை நான் குற்றமற்றவன் என பிரகடனப்படுத்திக் கொண்டு ஒளிந்திருக்காமல் உலகத்தின் முன்னே வரச் சொல்லுங்கள். இப்ப சண்டை நடக்குது எதிரி சுட்டுப் போடுவான் என கதை விடாதீர்கள். 2001 ல் இருந்து 2006 வரை கூட தலை தலைகாட்டவில்லை. ஒளிச்சிருக்கிற அந்தாளை வைத்துக் கொண்டு சுரேந்திரனும் இராஐ மனோகரனும் டாக்டர்மாரும் வயிறு வளர்க்கிறதுக்கு வன்னி சனம் மண்ணில் புதையுது.
palli
மாறு பட்ட கருத்து இதுதான் அவருக்கு சரியான ஈழ தமிழாக இருக்கும்.
சரி விடயத்துக்கு வருவோமே. பல்லி பஸிசில் போனது உன்மைதான். காரணம் ஏற்க்கனவே சொல்லி விட்டேன். பல்லி படிக்கவில்லை. ஒரு எழுத்தாளனல்ல. ஊடகவியாளனுக்கு உள்ள எந்த தகுதியும் கிடையாது. அதனால் எம்மவர் விடும் தவறுகளை நேரில் பார்த்து விமர்சிப்பதும் சரியானதை பாராட்டுவதும் பல்லிக்கு மனதுக்கு பிடித்திருக்கு.
உளவு பொட்டர் வேலை. அதனால் தான் இன்று தமிழருக்கு ஒரு பிடி மண்கூட இல்லை. அதில் வணங்கா மண்ணாம். இறுதிநேரத்தில் கூட பழய பொலிஸ்காரன் சீனாவை இருகை எடுத்து கும்புடுவதை உலகம் பார்க்கும்போது வணங்கா மண்ணாவது மரமாவது.
மாற்று கருத்து; பல்லி பஸ்சில் போனதை விட்டுவிட்டு அங்கு நடந்த சீர்கேடுகளை சரிசெய்ய முயற்ச்சிக்கவும். சாவிலும் வாழ்வோம் போராட்டத்தில் கூட காதலுக்கு மரியாதை. உமது தலைவந்தான் புரியாத புண்ணாக்கு. உமக்குமா என்ன நடக்குது என புரியவில்லை. பல்லி அரசை விமர்சிப்பதை பலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பல்லியை பொறுத்த மட்டில் அரசு; புலி; ஊடகங்கள், ஜனனாயகவாதிகள், கமினிஸ்ட்டுக்கள் ஏன் தேசமானாலும் சரி சரியானால் பாராட்டவும் தவறினால் விமர்சிக்கவும் தவறாது. பல்லியை பதம்பார்பதை விட்டுவிட்டு புலிகொடியை சரியான வளம் பிடிக்கும்படி புலி ரசிகர்களுக்கு சொல்லவும். உலகிலேயே ஒரு போராளிக்கு (அப்படி இருந்தால்) கட்டவுட் வைத்த பெருமை தமிழரையே சேரும்.
பல்லி சொன்னால் பலன்.
மாற்று கருத்து சிதறினால் திரை (முடிவு)
palli
40 பேர் 50 பேர் என சலிச்சுக்கிற சீமான்களே. ஜரோப்பா பாராளமன்றத்தில் 50000 பேர் போய் பொறுப்பற்ற தனமாக நடந்ததை விட அதில் ஒரு 10பேர் கல்விமான்கள் அவர்களுடன் புலியின் தடை எடுக்க கோரியும். இன்று மக்கள் படும் சிரமம் பற்றியும் ஆக்கபூர்வமாக பேசியிருந்தால் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு முதல்படியாக ஆவது இருக்கும். அதை விட்டு கும்பலில் கோவிந்தா போட எந்தனை லட்ச்சம் பேர் போனால் என்ன ஆக்கபூர்வமாக பேச 10பேர் போனால் என்ன. அதுக்காக இவர்களை பல்லி நியாய படுத்தவில்லை.
palli
//பிரசெல்ஸிற்கு ஊர்வலம் போனவர்கள் புலிகளா?//
அப்படியா. அப்படியாயின் எதற்க்காக புலி கொடி தலையின் கட்டவுட்.
அத்துடன் ஒருநாள் பொளுதை பல்லி வீனாக்கவில்லை. ஒருநாள் பொழுதை வீனாக்கிய பலரது முகம் அம்பலபடுத்த பல்லி ஒருநாளை செலவு செய்ததில் மகிழ்ச்சிதான்.
palli
நண்பர்கழுக்கு ஒரு தகவல்; வணங்கா மண் கப்பலின் சிறப்பு ஆய்வாளராக சிவாஜிலிங்கம் தமிழகத்தில் இருந்து அவசரமாக லண்டன் வந்துள்ளார். இவருக்கும் மண்ணுக்கும் பல ஒற்றுமை உண்டு. பலர் அறிந்திருக்க கூடும். இல்லாவிடில் பல்லி பின்பு வருகிறேன்.
murugan
“வெறும் விமர்சனத்திற்காகதான் ஒருவர் தனது முழுநாள் பொழுதை செலவழித்து உளவுபார்த்தவர் என்று நீங்கள் “சிங் சக்….” போடலாம் அதை மற்றவர்கள் ”
முதலில் உளவு என்ற வார்த்தையை எங்கே பாவிப்பது என மாற்றுக்கருத்து உணரவேண்டும். உளவு பார்த்து விமர்சனம் செய்ய முடியாது. ஆளை மண்டையில் போடத்தான் உளவு பார்க்கிறது. வெறும் விமர்சனத்திற்காகதான் ஒருவர் தனது முழுநாள் பொழுதை செலவழித்த்தார் எனில் உமக்கு விமர்சனத்தின் அருமை தெரியவில்லை. கொலைகளையும் பழிச் சொற்களையும் பொய்களையும் மாத்திரம் கண்டு வளர்ந்த உங்களுக்கு விமர்சனம் என்பது பேய் பிசாசு மாதிரித்தான் தெரியும்.
murugan
வணங்கா மண் கப்பலின் சிறப்பு ஆய்வாளராக சிவாஜிலிங்கம் வந்து கப்பலில் மண்ணெண்ணை பெற்றோல் எல்லாம் சரியாய் இருக்கு என ஆய்வு பண்ண போறாரா?
பார்த்திபன்
சிவாஜிலிங்கத்தாரே வணங்கா மண் விடயத்தைப் போட்டுடைத்து விட்டாரே. “வணங்கா மண் போனாலும் வெற்றி, போகாவிட்டாலும் வெற்றி” என்று தன்னையறியாமல் உளறிக் கொட்டிவிட்டார். இதிலிருந்தே தெரிகின்றது மக்களுக்கு இவர்கள் போடப்போவது நாமம் என்று. இப்படித்தான் சில மாதங்களிற்கு முன்பும் வன்னி மக்களுக்கு அனுப்புகின்றோம் என்று பொருளாகவும் பணமாகவும் ஐரோப்பா முழுவதும் சேகரித்தார்கள். கடைசியில் அவற்றிற்கு என்ன நடந்தது?? சில வாரங்கள் கழித்து மக்கள் கடையில் அவற்றையெல்லாம் விற்பனை செய்து, பொருட்களை சேர்த்தவர்கள் தமது பைகளில் பணத்தையும் சேர்த்து விட்டனர். இப்போது மீண்டும் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுருட்ட நினைக்கும் போது, அதை புட்டுப்புட்டு வைத்தால் வருமானம் பாதிப்படைந்துவிடும் என்பதால் இங்கும் சிலர் தம்மையும் அறியாமல் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
nesan
பல்லி, சிவாஜிலிங்கம் தொடர்பில் விமர்சனமிருந்தாலும் அவர் விமானத்தில் பறக்கிறாரோ கப்பலில் பறக்கிறாரோ ஏனைய கூட்டமைப்பு பா.உ பார்க்க மக்களின் அவலங்களை கொண்டு செல்லுகிறார்……….
susai
விதுசா சொன்னமாதிரி நானும் இராசதந்திரம் என்றுதான் நினைத்தேன்.உது 40 வருசத்துக்கு முந்தின விளையாட்டுஎன்ற இப்பத்தான் புரியுது
பார்த்திபன்
நேசன், சிவாஜிலிங்கம் பறந்து திரியும் போது தமிழீழப் பிரகடனத்தையும் அல்லவோ காவிக் கொண்டு பறக்கிறார். இலங்கையிலிருந்து இந்தியா போகும் போது தமிழீழப் பிரகடனத்தையும் காவிக் கொண்டு அங்கு வைத்து பிரகடனப்படுத்தப் போறேன் எண்டார். ஆனால் அவர் இன்னமும் செய்யவில்லை. அதாலை அவர் போக வரேக்கை வழியிலை போட்டு விடுவாரோ என்று தான் பயப்படுகின்றேன்.
//வணங்கா மண் கப்பலின் சிறப்பு ஆய்வாளராக சிவாஜிலிங்கம் வந்து கப்பலில் மண்ணெண்ணை பெற்றோல் எல்லாம் சரியாய் இருக்கு என ஆய்வு பண்ண போறாரா?//
முருகன், சிவாஜிலிங்கம் “வணங்காமண்” என்றதும் ஏதோ ஐரோப்பிய மண்ணை வன்னிக்கு கொண்டு போகினம் போல என நினைச்சுக் கொண்டு தானாம் பார்ப்பதற்கு ஓடோடி வந்தவர். வந்த பிறகு தான் விசயம் விளங்கியதாம் இதுவும் ஒருவகைச் சுருட்டல் என்று…..
kamal
என்ன நேசன் 22 எம்பிமாரும் புலியின் அரசியல்பொறுப்பாளர்கள் எனறு சொல்லி திரிந்தீர்கள் திடிரென சிவாஜிலிங்கம் பரவாயிலில என்கிறீங்கள். வினோதலிங்கம் பல்டி அடித்துடன் இம்முடிவுக்கு வந்தீங்களா?
மலைமகன்
வணங்காமண் ஊர்தி தொடர்ந்து கீழ்காணும் திகதிகளில் இவ்விடங்களுக்கு செல்லவுள்ளது இவ்விடங்களில் வாழ்பவர்களும் இதனைச் சுற்றியுள்ளவர்களும் 7536 785 186 இத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்வதன் மூலம் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்
வெள்ளிக்கிழமை : (20-03-09) Crowley, Southampton
சனிக்கிழமை : (21-03-09) Glasgow, Liverpool, Coventry
ஞாயிற்றுக்கிழமை : (22-03-09) Northampton, Milton keyns, Luton, Oxford
திங்கட்கிழமை : (23-03-09) Birmingham
செவ்வாய்க்கிழமை : (24-03-09) Gloucester, Bristol
புதன்கிழமை : (25-03-09) New castle, Manchester
narathar
//இரண்டு ரெலிவிசன் எண்ணுக்கணக்கற்ற இணையத்தளங்கள் உருவேற்றும் பாடல்கள் காட்சிகள் இவற்றை வைத்துக் கொண்டு அப்பாவிகளை ஏமாற்றுவது பெரிய சாதனையா?//
எல்லாம் மக்களின் பணத்தில் தான் நடக்கிறது……………………..
மாற்றுகருத்து
“…..பல்லி பஸ்சில் போனதை விட்டுவிட்டு அங்கு நடந்த சீர்கேடுகளை சரிசெய்ய முயற்ச்சிக்கவும். சாவிலும் வாழ்வோம் போராட்டத்தில் கூட காதலுக்கு மரியாதை….”
உங்கள் திருப்திக்கு குற்றச்சாட்டை உண்மையென வைப்போம். பாடசாலையிலும் கோவிலிலும்தான் காதல் சங்கதி நடக்குது. அதற்காக பாடசாலையையும் கோவிலையும் அவற்றின் நோக்கத்திலிருந்து விலத்தி கொச்சையாக விமர்சிப்பீர்களா?அது யதார்த்தமான ஆரோக்கியமான விமர்சனமா! ஐரோப்பாவில் காதலுக்கு இடமில்லாது சாவிலும் வாழ்வோம் போன்ற நிகழ்வுதளங்கள்தான் காதல்களுக்கு துணைபோவதாக என்று யாருக்கு சொல்கிறீர்கள்.
நீங்கள் எப்படி அந்த பஸ்பயணத்தை உளவு நடவடிக்கைக்காக துஸ்பிரயோகம் செய்தீர்களோ அதே மாதிரி சிறிலங்கா உளவாளிகளும் திட்டமிட்டு காதல் சேட்டைகளை அரங்கேற்றி சாவிலும் வாழ்வோம் நிகழ்வை கொச்சைபடுத்த முயற்சித்திருக்கலாம். தமிழர்களில் இவர்களிற்கா பஞ்சம். ஊர்வலம் சென்ற வீதியில் புலிக்கொடி போர்த்தி கொண்டு கையிலும் ஏந்தி கொண்டு ஒரு இளைஞர் கூட்டம் காவல்துறையினரை வீம்பிற்கு சீண்டிகொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை அணுகி ஏன் இந்த வீண் சீண்டலென விசாரித்தபோதுதான் தெரிந்தது அதில் ஒரிருவர் தவிர்ந்த மற்றவர்களிற்கு தமிழே தெரியாது அவர்களிடம் சிங்களசாயல் தெரிந்தது. விடயத்தை உரியவர்களிடம் எடுத்துசெல்ல முற்படுகையில் அந்த கூட்டம் தலைமறைவாகி விட்டனர். இப்படி சிங்கள உளவுத்துறை எத்தனையோ குள்ளநரிதனத்தை பாவித்து நிகழ்வை கலவரமாக்கி குழப்ப முற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
யூத மக்களின் முதல் முயற்சி தடுக்கப்பட்டது அவர்கள் இம்சிக்கபட்டார்கள் அம்முயற்சியில் உயிரிழந்தார்கள். அதற்காக அவர்கள் சோர்ந்து விடவில்லை. அந்நிகழ்வில் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளை வஞ்சங்களை உலகின் முன் காட்டி தமது இலக்கை அடைந்தனர். 60 வருடத்திற்கு முன் நிகழ்தப்பட்ட வரலாற்றில் பதியபட்ட யதார்த்த வெற்றியை ஜீரணிக்க முடியாது அவஸ்தைபடுபவர்களே “வணங்காமண்” முயற்சியை கொச்சைபடுத்தி திருப்தி கொள்கிறார்கள்.
thurai
//வணங்காமண் ஊர்தி தொடர்ந்து கீழ்காணும் திகதிகளில்//
தமிழீழம் வணங்கா மண் வடிவில் லண்டனில் வீதிஉலா. நன்கொடை போதாவிட்டால் உலகமுழுவதும் தொடரும். காத்திருங்கள் தமிழீழ பக்த்தர்களே.
துரை
Jeyabalan T
உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.
‘ஏதாவது முடிந்தால் நீங்கள் செய்யுங்கள் அல்லது பேசாமல் இருங்கள்.’ என்ற அடிப்படையில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 40 பேர் 50 பேர் என்று சொல்கிறார்கள். சில சமயம் 10 பேரும் வர மாட்டார்கள். இங்கு எண்ணிக்கையல்ல பிரச்சினை வைக்கப்படும் கருத்துத்தான் பிரச்சினை.
புலத்தில் லட்சக் கணக்கில் திரண்டு பொங்கு தமிழ் வைத்து போர் முழக்கம் இட்டார்கள். அந்த நினைவுகள் மறைய முன்னரே. லட்சக் கணக்கில் திரண்டு யுத்த நிறுத்தம் செய் என்று கேட்கிறார்கள்.
ஆனால் இந்த 10 முதல் 50 பேர் அன்றைக்கும் யுத்தம் வேண்டாம் என்றார்கள். இன்றைக்கும் யுத்தம் வேண்டாம் என்கிறார்கள்.
புலிகளை இந்தளவு மோசமாக பின்னடைய வைத்தது இந்த புலம்பெயர் ஆதரவாளர்களும் புலிகளுக்கு ஜால்ரா அடித்து சிஞ்சா போடுகிற ஊடகங்களுமே.
எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் செயற்பாடாக இருந்தாலும் அவைபற்றி அலசி ஆராய்ந்து சாதக பாதகங்களை அறிய வேண்டும். பல்வேறு கோணங்களிலும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை வைக்கும் போது சிந்திக்கவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. விமர்சித்தவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுத்தது. இன்று விளைவு என்ன இவர்களுடைய அரசியல் தவறுகளுக்கு யார் விலை கொடுக்கிறார்கள். அதே கூட்டணியின் வாரிசுக்கள் இன்று பிரபாகரனின் தலைமையில் தொடர்கின்றனர்.
விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்சவுக்கும் இலங்கை அரசுக்கும் விமர்சிப்பவர்களைப் பிடிக்காது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சிங்கள இளைஞர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகிறார்கள் என்றால் அரசுக்கு பிடிக்காது. போராட்டம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் பலியாகிறார்கள் என்றால் புலிகளுக்குப் பிடிக்காது. இவற்றை விமர்சித்தால் ‘அப்ப ஜெயபாலன் கட்டுரை எழுதி மினக்கெடாமல் இரத்தம் சிந்தாமல் செய்துகாட்டும்’ என்றால் என்ன செய்ய முடியும்.
விவாதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும். அவற்றில் இருந்து முடிவுகளுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு மகிந்தவின் பஸ்ஸில் ஏறிக்கொண்டு புலிகளை அடியோடு அழிப்பம் என்றதும் பிரபாகரனின் பஸ்ஸில் ஏறிக்கொண்டு எங்கள் தலைவன் பிரபாகரன் என்றதும் இப்ப இருக்கிற பிரச்சினைக்குத் தீர்வல்ல.
தந்தை செல்வாவின்ர பஸ்ஸில கொஞ்சக் காலம். அண்ணன் அமிர்தலிங்கத்தின்ர பஸ்ஸில இன்னும் கொஞ்சக்காலம். இப்ப தம்பி பிரபாகரன்ர பஸ்ஸில என்று மாறி மாறி தொத்திக் கொண்டு போறம். இனி தம்பின்ர மகனின்ட பஸ்ம் வரும்.
விமர்சனங்களும் விவாதங்களும் இன்றி ஜால்ராவையும் சிஞ்சாவையும் நம்பினால் அது ஆபத்திலேயே கொண்டுவந்து நிறுத்தும். நிறுத்தி உள்ளது.
வணங்கா மண்ணும் அப்படியே. இன்று அந்த மக்களுக்கு உள்ள உயிர்ப் பிரச்சினையை கவனத்திற்கொள்ளாமல் வணங்கா மண் உண்மையில் பயணத்தை தொடர்ந்தால் நடுக்கடலில் கப்பல் இழுபறியில் வன்னி மக்களின் மீது உள்ள குறைந்தபட்ச கவனமும் கப்பலை நோக்கித் திரும்பும். மக்கள் மரணத்தின் விளிம்பில் இல்லாவிட்டால் கட்டுமரம் விடலாம் கப்பல் விடலாம் ஹெலியும் விடலாம். இன்று நிலைமை அவ்வாறு அல்ல. இராணுவம் குண்டுகளை பொழிகின்ற இடத்தில் மக்களை புலிகள் தடுத்து வைத்துள்ளனர். புலம்பெயர்ந்த தமிழர்களும் ‘அந்த மக்கள் அந்த குண்டு மழைக்குள் இருக்க வேண்டும். அவர்கள் வெளியேற்றப்படக் கூடாது’ என்றே கோருகின்றனர். நாதியற்ற அந்த மக்களை ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப ஆட்டிப்படைக்கின்றனர்.
ஆகையால் வணங்கா மண் என்று றீல் விடுகிற விடயங்களுக்கு சென்ரிமென்டுக்கு நாங்கள் எடுபட முடியாது.
முதலில் யுத்தத்தை நிறுத்த இருதரப்புக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற இரு தரப்பும் அனைத்து நடவடிக்கைகளையும் – யுத்த நிறுத்தம் உட்பட – மேற்கொள்ள வேண்டும்.
இவை சாத்தியமாகாத பட்சத்தில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு அந்த மக்களை யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும்
.
யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்தவர்கள் வெயெற்றப்பட்டவர்கள் முற்றிலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பாதுகாப்பில் ஒப்படைக்க வேண்டும்.
murugan
யூத மக்களின் முதல் முயற்சி தடுக்கப்பட்டது அவர்கள் இம்சிக்கபட்டார்கள் அம்முயற்சியில் உயிரிழந்தார்கள். அதற்காக அவர்கள் சோர்ந்து விடவில்லை”
யூத மக்கள் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டும் இருக்கவில்லை. தமது சொந்த இனத்தவரையே ரயர் போட்டு கொளுத்தவில்லை.
chandran.raja
பிணங்கள் வீழ்ந்தால் பணங்கள் சேரும் என்பது புலிகள் கோட்பாடு. காலத்திற்கேற்வாறு வேஷம் போடுவதும் பெயரை மாற்றி வீதிக்கு வருவதும் அவர்கள் கைவந்தகலை.சேர்த்த பணத்திற்கோ பொருள்களுக்கோ கணக்கு காட்டுவதோ கணக்கு கேட்பதோ இந்த விசுவாசிகளுக்கு கிடையவே கிடையாது. தொன்றுதொட்டு வருகிற குடியடிமை பழக்கவழக்கம் போல!
இந்த கப்பலால் யார் பயன் அடையப்போகிறார்கள் என்றால் நிச்சியம் வன்னிமக்கள் அல்ல. அப்படியென்றால் யார்? லண்டனில் வாழும் ஒரு சில பிரமுகவர்களே! இது நவீனகாலத்து “சுறுட்டல்”கையில் ஒரு வகையே!
kamal
வணங்கா மண் பெயர் கூட தலைவர்தானாம் செலக் பண்ணினது இங்க இருக்கிற புலிகள் எப்ப சரி ஏதாவது பிரயோசனமா ஏதாவது தமது சரிபிழை கதைத்திருப்பாங்களோ எல்லாம் தலைக்கு பங்கருக்குள்ளே இருந்து சொல்லுவார் என்று ஒக்ஸ்போட்டில் படித்துவிட்டவர்கள் கூட இப்படி கேட்கிறர்கள் என்றால் இத்தனை ஆயிரம் கேட்கும் தானே?
ஜிவாஜிலிங்கம் சரியான ஆள்த்தான் ஏன் தெரியுமோ இவங்களுக்குத்தான் தெரியும் கள்ளக்கடத்தல் எப்படி செய்வதேன்று
உங்கட வணங்கா மண்ணை போக இலங்கை கடற்படைவிடாது என்று தெரிந்தும் இப்படி செய்வது அந்தக் கடல் பிரதேசத்தில் மீன்களுக்கு சாப்பாடு போடத்தான் புண்ணியம்.
இவ்வளவு காலமும் அடிபட்டு என்னத்தை கண்டனீங்கள் என்று சிந்தித்துவிட்டு கேட்பார்கள் காலம் வருகுது வெகு சீக்கிரத்தில் – இந்த காசு விடயத்தில் வியாபாரிகள் மிகவும் கெட்டித்தனமாக எல்லாத்தையும் செய்கினம் விசயம் முடிய தலைவரின் தலையில் இதையும் போடுவாங்கள் வியாபாரிகள் பொறுத்திருங்கள் புலிகளே
BC
/தந்தை செல்வாவின்ர பஸ்ஸில கொஞ்சக் காலம். அண்ணன் அமிர்தலிங்கத்தின்ர பஸ்ஸில இன்னும் கொஞ்சக்காலம். இப்ப தம்பி பிரபாகரன்ர பஸ்ஸில என்று மாறி மாறி தொத்திக் கொண்டு போறம். இனி தம்பின்ர மகனின்ட பஸ்ம் வரும். விமர்சனங்களும் விவாதங்களும் இன்றி ஜால்ராவையும் சிஞ்சாவையும் நம்பினால் அது ஆபத்திலேயே கொண்டுவந்து நிறுத்தும். நிறுத்தி உள்ளது.//
மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் ஜெயபாலன்.
padamman
யார் என்ன சொன்னால் என்ன பிரபாகரன் உயிரோடு உள்ளவரை அந்த மக்களை வெளியேற விடமாட்டார். இவர்கள் இங்கு வணங்கா மண் சாவிலும் வாழ்வோம் விளுந்தாலும் எழும்புவோம் இன்னும் எத்தனையோ வழிகளில் பணம் சேர்க்கத்தான் போகின்றர்கள். இது அவர்களுடைய வாழ்க்கை (வருமானம்) பிரச்சனை. பிரபாகரனுக்கு தன்னுடைய உயிர்பிரச்சனை மட்டும்தான் வணங்கா மண் வந்தாலும் சரி வணங்கிய மண் வந்தாலும் சரி அதைப்பற்ரி அவருக்கு ஒரு பொருட்டுயில்லை இங்கு பணம் அங்கு உயிர் நடுவில் மக்கள்.
மாற்றுகருத்து
“40 பேர் 50 பேர் என்று சொல்கிறார்கள். சில சமயம் 10 பேரும் வர மாட்டார்கள். இங்கு எண்ணிக்கையல்ல பிரச்சினை வைக்கப்படும் கருத்துத்தான் பிரச்சினை.”-ஜெயபாலன்
வெறும் கருத்தைவிட ஆக்கபூர்வமான செயற்பாடே முக்கியம். நேர காலம் விளங்காமல் நச்சரிப்பதற்கு பெயர் கருத்துமல்ல.
“10 முதல் 50 பேர் அன்றைக்கும் யுத்தம் வேண்டாம் என்றார்கள். இன்றைக்கும் யுத்தம் வேண்டாம் என்கிறார்கள்.”
வெற்று கோசம் செயல்வடிவம் பெறாது அது வெறும் புலம்பலாய்தான் அன்று தொடக்கம் இன்றுவரை இருக்கிறது.வெறுமே வாயால் நெருப்பு என்பதால் அது சுவாலையை உருவாக்காது.
“புலிகளை இந்தளவு மோசமாக பின்னடைய வைத்தது இந்த புலம்பெயர் ஆதரவாளர்களும் புலிகளுக்கு ஜால்ரா அடித்து சிஞ்சா போடுகிற ஊடகங்களுமே …”
ஆமா மோசமாக பின்னடைந்த புலிகளை அழிக்கதான் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைபீடத்தின் உதவி அவசர அவசரமாக கோரப்பட்டது. அவர்களிற்கு காலதாமதமாக 1990 களின் சோமாலியாவில் அமெரிக்கா படை பட்ட அவமானம் நினைவுபடுத்தப்பட்ட போது ஆளைவிடு சாமி என ஒதுங்கியது இந்த மாத நிகழ்வு. 6000 இந்திய கூலிபடையை இரகசியமா உதவிக்கு அனுப்பியும் நினைத்த வெற்றி கிடைக்கவில்லை என்றவுடன் புல்மோட்டையில் இந்திய படையிறக்கி இப்போ குறுந்தூர ஏவுகணை வீச்சை நடத்திற இன்றைய நிகழ்வும்.
நிமால் சிறிபால டீ சில்வா புலிகளிற்கெதிரான வெற்றிக்கு முழுமையான காரணம் இந்திய இராணுவ பொருளாதார இராஐ தந்திர உதவிகள்தான். அதனால் சிறிலங்கா குடிமக்கள் இந்தியாவிற்கு என்றென்றும் விசுவாசமாக இருக்க வேணுமென்ற நாடளமன்ற உரையும் இன்றைய உண்மை நிலையை உணர்த்துகிறது.பின்னடைவு புலிகளிற்கு மட்டுமா! எதிரிக்கும்தானா என்று.
“விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்க வேண்டும்”
இந்த வெத்துவேட்டு விமர்சகர்கள் பலதசாப்தங்களாக வெறும் விமர்சகர்களாகவே இருந்துள்ளனர். செயற்பாடு ஒரு போதும் இருந்ததில்லை. இதனால் இது விமர்சனங்கள்களல்ல வெறும் விசமதனம்.
நீந்தி பழகியபின்தான் தண்ணீர் இறங்க வேணுமென புத்தி சொல்லும் அறிவாளிகள்தான் இந்த வெத்து வெட்டு விமசகர்கள்.
“அந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற………”
வெளியேறும் மக்கள் தடுப்புமுகாம்களிற்குள் சிறைவைக்கபடுகிறார்கள். அது மனிதவுரிமை மீறல் என சொல்லும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள். அதை தடுக்க விருப்பின்றி/வலுவின்றி சிறிலங்காவிற்கு சிஞ்ச்சக் போடுது. இது இன்றையதார்த்தம். இதை தெரிந்து கொண்டும் “மக்கள் வெளியேற்றபடல் வேண்டும் முற்றிலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பாதுகாப்பில் ஒப்படைக்க வேண்டும்.” என வைக்கப்படும் போலி கோசம் சிறிலங்காவிற்கான வக்காளத்து என்பதை தவிர வேறொன்றுமில்லை.
“யூத மக்கள் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டும் இருக்கவில்லை. தமது சொந்த இனத்தவரையே ரயர் போட்டு கொளுத்தவில்லை”-முருகன்
யூதமக்களை பிரித்தானியா வஞ்சித்த போது அந்த மக்கள் அன்றைய உலக பேராசென பிரித்தானியாவிடம் பணியவுமில்லை. தங்களிற்கு தாயகம் வேண்டாம் பிரித்தானியாவின் நலம்தான் முக்கியமென தன்னின நலத்தை பதவிக்கும் பணத்திற்கும் விட்டு கொடுக்கவுமில்லை. அதனால் ரயர் போட்டு கொளுத்த வேண்டிய தேவையுமிருக்கவில்லை.
murugan
உணர்ச்சி வசப்பட மட்டுமே தெரிந்த புலன் பெயர்ந்த மக்கள் …………. என சுரேந்திரன் சத்திய மூர்த்தி போன்றோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஏவுகணை வாங்கவென்று தொடங்கி சுனாமி வரை சேர்த்த பணங்களுக்கு என்ன நடந்தது என எத்தனை தரம் ஏமாற்றப்பட்டாலும் சுரணையே இல்லாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். வன்னி மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் சுரேந்திரன் ராஜமனோகரன் சத்தியமூர்த்தி போன்றவர்களின் வீடுகளுக்கு முன்னால் போராட்டம் தொடங்க வேண்டும்.
murugan
தங்களிற்கு தாயகம் வேண்டாம் பிரித்தானியாவின் நலம்தான் முக்கியமென தன்னின நலத்தை பதவிக்கும் பணத்திற்கும் விட்டு கொடுக்கவுமில்லை. அதனால் ரயர் போட்டு கொளுத்த வேண்டிய தேவையுமிருக்கவில்லை”
ஆனால் ராஜீவை கொன்று விட்டு துன்பியல் நிகழ்வென்று பம்மியதும் இந்தியாவே எங்கள் தந்தை நாடு என்று வழிந்ததும் இன்று உலகம் தலைவரைக் காக்க வேண்டும் என கும்பிடுவதும் இனத்தின் நலனுக்காகவா? போராட்டத்தைக் கருவறுத்தவர்களையும் ஆயுதம் கொடுத்தவர்களையும் உதவிக்கு அழைப்பது எதற்காம்?
damilan
புலிகள் இனி புலத்தில் எப்படி நிதி சேகரிப்பது சாத்தியம் மண் மீட்பு ? இறுதி யுத்தம் ? எது சொன்னாலும் புலத்தில் எடுபடாது. ஏனெனில் எல்லாம் சொல்லித்தான் இதுவரை காலமும் கலக்சன் பண்ணினார்கள் இனி சொல்ல ஒரு காரணமும் மீதி இல்லை. என்ன சொன்னாலும் எடுபடாது. அப்ப கலக்சனுக்கு என்ன வழி? கடைசி சுருட்டலுக்கான கடைசி முயற்சிதான் ப(வ)ணங்காமண். கப்பல் வன்னிக்கு வருமுன் மிகுதி சனத்தையும் அரசு மீட்டுவிடும்.
தலைவரின் உயிர் கடைசி நேரத்தில் ஊசலாடுவதைக் காணச்சகிக்காத காவடிகள் ஆடும் ஆட்டம் வன்னி மக்களை மீட்க உதவாது. மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள் புலிகள் மட்டுமில்லை நாங்களும் அதில் சேர்ந்து கொள்கிறோம் என்பது போல இருக்கிறது இவர்களின் செயல். அணைகடந்த வெள்ளம் அழுதாலும் திரும்பாது என்பது பழமொழி.
பார்த்திபன்
//வணங்காமண் ஊர்தி தொடர்ந்து கீழ்காணும் திகதிகளில்//
மலைமகன் வணங்காமண் பொருட்சேர்ப்பு நடைபெறும் இடங்களின் பட்டியலை இணைத்தது போல் சென்ற வருட இறுதியில் வன்னி மக்களுக்கு என்று சேகரித்த பொருட்களும் பணங்களும் யார் யார் பைகளை நிரப்பியதென்ற விபரங்களையும் ஒருக்கால் பதிந்து விடுங்களேன்.
palli
வணங்கா மண் என பெயர் எதுக்கு?
யார் வைத்தது??
இது சாத்தியமா??
கப்பல் போய் சேரும் போது இன்றய நிலை நீடிக்குமா??
ஏன் இந்த கப்பலை உதவி அமைப்புகளிடம் கொடுக்கவில்லை??
இது புலிக்கு ஆதரவானதா??
உன்மையில் மக்கள்நலன் கருதியா??
இது அரசின் சோதனையின்றி போகுமா??
ஏன் இந்த கப்பல் தூத்து குடியில் இருந்து புறபடவில்லை??
இத்தனை சந்தேகமும் பல்லிக்கு வந்தது தவறா??
palli
//நீங்கள் எப்படி அந்த பஸ்பயணத்தை உளவு நடவடிக்கைக்காக துஸ்பிரயோகம் செய்தீர்களோ அதே மாதிரி சிறிலங்கா உளவாளிகளும் திட்டமிட்டு காதல் சேட்டைகளை அரங்கேற்றி சாவிலும் வாழ்வோம் //
ரெம்ப நன்றி இதன் பின்னும் மாற்று கருத்துடன் மல்லு கட்ட பல்லியால் முடியாது.ஆகவே பகலில் முட்டையும் இரவில் பாலும் குடித்து விட்டு இதமான தூக்கம் தூங்கி விட்டு காலையில் எழுந்து எந்த கடனும் முடியாது புலிக்கு புண்ணாக்கு வைப்பதே தொண்டாக இல்லாமல் தொழிலாக செய்பவர்களுடன் பல்லி புடுங்குபடுவது பல்லியின் உளவு(உமது பாஸையில்) அழகல்ல. ஒரு நாளைக்கு புலம்பெயர் தேசமும் வன்னி போல் சுற்றி வளைக்கபடும் (கருத்தால்) அன்று பல்லி மாற்று கருத்தை பாதுகாப்பாக எடுக்க முடியுமாஎன சர்வதேசத்திடம் கேக்க முடியாவிட்டாலும் நம்ம தேசத்திடம் கேக்கும்.
பார்த்திபன்
மாற்றுக் கருத்து
சுவிசிலை முருகதாசிற்கு நிகழ்ந்த அஞ்சலி நிகழ்வில் உந்த இளையோர் அமைப்பினர் (ஆண் பெண் இரு பாலாரும்) ஒருவரை ஒருவர் அணைத்தபடி ஒருவருக்கு மேல் ஒருவர் ஏறிப்படுத்தபடி ஒரு வித்தியாசமான அஞ்சலி செலுத்தினர். பார்க்க ஆயிரம் கண் வேண்டும். இந்த இலட்சணத்தில் இந்தப்படங்கள் பல புலியாதரவு ஊடகங்களிலும் வந்தது. அதைத் தாங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இது போல் சமீபத்திய பேரணியொன்றிற்கு பிரான்சிலிருந்து புறப்பட இருந்த இளையோர் அமைப்பினர் (ஆண் பெண் இரு பாலாரும்)தங்குவதற்கு ஒரு மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. என்ன ஆச்சரியம் இரவு எவருமே அங்கு தங்கவில்லை. விடியும் போது கை கோர்த்தபடி மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் நம்ம இளையோர்கள். இரவு அவர்கள் தங்கள் சொந்த வீடடிலும் தங்கவில்லை ஒழுங்கு செய்த மண்டபத்திலும் தங்கவில்லை. அப்போ எங்கே தங்கினார்கள்?? எனி நீங்கள் தொடருங்கள் இதுவும் சிறிலங்கா உளவாளிகளின் திட்டமிட்ட சதியென்று …..
Jeyabalan T
//வெறும் கருத்தைவிட ஆக்கபூர்வமான செயற்பாடே முக்கியம். நேர காலம் விளங்காமல் நச்சரிப்பதற்கு பெயர் கருத்துமல்ல.// மாற்றுக் கருத்து.
எது ஆக்கபூர்வமான செயற்பாடு? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் உடையும் என்பதற்காக தலையால் அடித்து அம்மியை உடைப்போம் என்றால் அது ஆக்கபூர்வமான செயற்பாடு. வெறும் கருத்தைவிட செயற்பாடே முக்கியம் என்று தலையால் அம்மியை உடைப்பவர்களை உசுப்பேத்தி விட வேண்டும். நல்ல நியாயம் மாற்றுக் கருத்து.
என்றைக்காவது புலிகள் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறர்களா? இதில் என்ன நேரம் காலம் பார்த்தது விமர்சிப்பது. எப்பவும் பக்கத்தில் இருந்து ஜால்ராவும் சிஞ்சாவும் போடுவதற்குப் பெயர் ஊடகம் அல்ல.
//வெற்று கோசம் செயல்வடிவம் பெறாது. அது வெறும் புலம்பலாய்தான் அன்று தொடக்கம் இன்றுவரை இருக்கிறது. வெறுமே வாயால் நெருப்பு என்பதால் அது சுவாலையை உருவாக்காது.// அந்தப் பத்துப் பேர் வைத்த வெற்றுக் கோசத்தை ஏன் இப்போது 100 000 பேர் தாங்கள் வாழ்கிற நாடுகளில் எல்லாம் இப்பொது உரக்கக் கத்துகிறார்கள். அது வெத்துக் கோசமல்ல சரியான கோசமாக இருந்ததாலேயே இன்றைக்கு அதை பின்பற்றுகிறீர்கள்.
இன்றைக்கு புலிகளுக்கு அரணாக இருப்பது 200 000 மக்கள். வடக்கு கிழக்கின் சகல பகுதிகளிலும் ‘யுத்ததந்திரத்துடன்’ பின்வாங்கிய புலிகள் இன்று 200 000 மக்கள் உள்ள சிறிய பிரதேசத்திற்குள் மக்களுடைய பாதுகாப்பில் உள்ளனர். அதனால் தான் மக்களைப் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என புலி ஆதரவு அமைப்புகள் கோருகின்றனர். இதுதான் யதார்த்தம். அதைவிட்டுவிட்டு ஏதோ இலங்கை இராணுவத்திடம் மக்கள் சென்று துன்பப்பட்டு விடுவார்கள் என்று பரிதாபப்படுவது சுத்தமான நடிப்பு.
பெரும் தொகையில் மக்கள் கொல்லப்பட்டு மனித அவலம் இடம்பெற்றால் அதனைக் கொண்டு ஒரு அரசியல் பேரம்பேசி தங்கள் அதிகாரத்தை மீள்விக்கவே புலிகள் முயற்சிக்கின்றனர். ஒருவகையில் இலங்கை அரசின் இன அழிப்புக்கு புலிகளும் துணை போகின்றனர். புலத்து தமிழர்களும் துணை போகின்றனர்.
மக்களது அழிவில் அரசியல் பேரம் பேசும் புலிகள் அமெரிக்காவுக்கு அடிப்பம் இந்தியாவுக்கு அடிப்பம் என்று இன்னமும் ரீல் விடுவதை நிறுத்தவில்லை. எல்லோருக்கும் அடிக்கிறது பெரிய விடயமேயல்ல. ஒரு தற்கொலைக் குண்டை வெடிக்கவைத்து அழிவை ஏற்படுத்தலாம். ஆனால் இதுவரை ஆக்கபூர்வமாக என்னத்தை செய்துள்ளார்கள்?
ஒரு அரசு பலவினம் அடைந்தால் உலக அரசுகள் ஓடிவந்து முண்டு கொடுக்க முயலும். இந்தியாவும் அதனைச் செய்யும். செய்தது. செய்து கொண்டிருக்கிறது. இதனை தமிழீழம் கேட்டபோதே பலர் எடுத்துக்காட்டினர். மாற்றுக் கருத்த நண்பர் இன்றைக்கு சொன்னது போல் நோகாலம் தெரியாமல் விமர்சிப்பதாக அன்றைக்கு கூட்டணியினர் சொன்னார்கள். இத்தனையாயிரம் பேர் கொல்லப்பட்ட பின்பு வந்து நிமால் சிறிபால டி சில்வாவை துணைக்கழைத்துக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை.
//நீந்தி பழகியபின்தான் தண்ணீர் இறங்க வேணுமென புத்தி சொல்லும் அறிவாளிகள்தான் இந்த வெத்து வெட்டு விமசகர்கள்.// மாற்றுக்கருத்து நண்பரே உதாரணம் ஏராளம் பழமொழிகளும் ஏராளம். நாங்கள் என்ன சொல்கிறொம் என்றால் ‘ஆழமறியாமல் காலை விடக் கூடாது.’ மாவிலாற்றில் தண்ணியை நிப்பாட்டி இருக்கக் கூடாது. பொங்கு தமிழ் வைத்து யுத்தத்திற்கு அழைப்பு விட்டிருக்கக்கூடாது. இப்படியே பின்னுக்கு போனால் சுந்தரத்தை சுட்டிருக்கக் கூடாது. என்று பெரிய பட்டியலே வரும். புலிகளை விமர்சிப்பதால் மற்றவர்கள் பெரிய திறம் என்ற முடிவுக்கு யாரும் வந்திவிட வேண்டாம். அவர்களும் ஒரே குட்டையில் ஊறியவர்களே.
//சர்வதேச மனிதாபிமான அமைப்புகள். அதை தடுக்க விருப்பின்றி/வலுவின்றி சிறிலங்காவிற்கு சிஞ்ச்சக் போடுது. // மாற்றுக்கருத்து நண்பர் புலி ஆதரவு இணையங்கள் பார்ப்பீர்கள் வானொலி கேட்பீர்கள் அல்லவா. அரசாங்கத்தை அந்த அமைப்பு கண்டித்தது. இந்த அமைப்பு இலங்கை அரசாங்கம் இனவாதத்தை நோக்கிச் செல்கிறது. என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள். அது எப்படி? மனிதாபிமான அமைப்புகளின் மனிதாபிமானம் பற்றி எமக்கு வேறுபட்ட கருத்து உண்டு. ஆனால் புலிகளைக் குறைகூறுவதற்காக அரசுக்கு சிஞ்சா போடு என்பதும் பிறகு அரசைக் கண்டிக்கிறார்கள் என்று செய்தி வெளியிடுவதும் முரண்நகையல்லவா?
//அதனால் ரயர் போட்டு கொளுத்த வேண்டிய தேவையுமிருக்கவில்லை.// தேவைப்பட்டால் ரயர் போட்டுக் கொழுத்தலாம். மாற்றுக்கருத்து நண்பரே முதலில் மனிதத்தை மதியுங்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புலிகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்தவர்கள் துரோகிகள். புலிகளை விமர்சிப்பவர்கள் துரோகிகள். புலிகளுக்கு ஆதரவளிக்காதவர்கள் துரோகிகள். புலிகளின் அமைப்பில் சேராதவர்கள் துரோகிகள். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து தப்பி வெளியெறுபவர்கள் துரோகிகள். இவர்கள் சுட்டும் கொல்லப்படலாம் ரயர் போட்டு எரிக்கப்படலாம்.
மாற்றுக் கருத்து நண்பரே மண், கொள்கை, இலட்சியம், உரிமை என்று கூறிக்கொண்டு நாம் மனிதத்தை தொலைக்காமல் இருப்போம்.
பார்த்திபன்
இங்கே இளையோரின் தனிப்பட்ட நடத்தைகளை எவரும் விமர்சிக்க வேண்டுமென்பது நோக்கமுமல்ல. ஆனால் தாயக மக்களின் சீரளிவை வைத்து நடத்தப்படும் போராட்டங்களில் இப்படியான செயற்பாடுகளைப் புகுத்தப் பயன்படுத்தும் ஒரு களமாக்க முனைவதையே கண்டிக்கின்றோம். அத்துடன் இப்படியான செயற்பாடுகளுக்கு மறைமுகமாக போராட்ட ஒழுங்குகளை செய்வோரே துணை போகின்ற நிலைமையே ஏற்படுகின்றது. இதனால் இப்படியான போராட்டங்களினால் தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு விடிவு கிடைக்கின்றதோ இல்லையோ, மாறாக எமது இளையோர்கள் சீரளிவதற்கே இவை துணை போகின்றன என்ற எமது ஆதங்கத்தையே நாம் பதிகின்றோம். இதன் மூலம் எதிர்வரும் காலங்களிலாவது போராட்டங்களை ஒழுங்கு செய்வோர் இவ்விடயங்களில் அக்கறை செலுத்தி ஆவன செய்ய முன்வரலாம் என்று நம்புகின்றோம்.
thurai
புலிகள் கேட்ட தமிழீழம் புதுக்குடியிருப்பினுள் மடிந்து போகின்றது. புலியின் ஆதரவாளர்களோ சில தொலைக்காட்சிகளோடும், தெரு தெரு வான ஓலங்களோடும் காலத்தைக் கழிக்கின்றார்கள்.
புலியின் பக்தர்கள் உலகத்தை அறியாமல் புலியின் வாலினைப் பின்தொடர்ந்தால் வ்ன்னி மக்களிற்கு நேர்ந்த கெதியே புலத்தில் வாழும் தமிழர்களிற்கும் நேரும்.
துரை
பகீ
முருகன், …யூத மக்கள் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டும் இருக்கவில்லை. தமது சொந்த இனத்தவரையே ரயர் போட்டு கொளுத்தவில்லை…..
யூத இயக்கமான ’இர்குன்’ ஒரு பங்கரவாத இயக்கமாக இங்கிலாந்து அரசால் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேலிய மக்கள் அவர்களை ஒரு விடுதலை இயக்கமாகவே கருதினர். இவர்களின் பயங்கரவாதச் செயல்கள் பட்டியல் மிக நீள்ம். இறுதியில் யூத ஆதிக்கம் கொண்ட நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கே தாங்கமுடியாமல் போய் இவர்களைப் பயங்கரவாதிகள் என அழைத்தது. இப்பத்திரிகையுடன் லண்டன் ரைம்ஸ் பி.பி.சி கூட சேர்ந்து கொண்டது. மற்றும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்ரன் சேச்சில், விஞ்ஞானி அல்பேட் ஐன்ஸ்ரைன் கூட இவர்களைப் பயங்கரவாதிகள் என அழைத்தனர். இவர்கள் ரயர் போட்டு எரிக்கவில்லையோ தெரியாது. ஆனால் தம்முடன் சேராத, பிள்ளைகளை தம்முடன் சேரவிடாதவர்களின் பெற்றோர்கள் போன்றவர்களை அடித்தும் சுட்டும் காயப்படுத்தியும் கொன்ற வரலாறு உண்டு. இவர்களின் மிகப்பேசப்படும் செயல்களில் ஒன்று கிங் டேவிட் ஹோட்டலில் குண்டுவைத்து தர்த்தது. ஆமாம் பொது மக்கள் கூடும் ஹொட்டல் தான். அப்போது இங்கிலாந்து ராணுவத்தினர் தன்கி இருந்தனர் என்றே குண்டு வைத்தனர். இன்றைய முக்கிய இஸ்ரேலிய கட்சியான லுகிட் கட்சியின் ஆரம்பமே இவ்வியக்கத்தில் இருந்தே தொடங்கியது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் யிற்சாக் ரபின் , இறந்த யிற்சாக்ஷமிர், போன்றவர்கள் இப்பயங்கரவாட்த இயக்கத்தின் முக்கிய அங்கத்துனர். இதில் ரபின் மிகப்பிரபலமானவர். அவருக்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள். அவர் துப்பாகி முனையில் 30,000 பாலஸ்தீனர்களை அவர்களின் மண்ணை விட்டு துரத்தியதாக அவரே சொல்லி பெருமைப்பட்டவர். சமாதான நோபல் பரிசுபெற்ற இன்னொரு பிரதமர் மெனக்கம் பெகினும் இவ்வமைப்பைச் சேர்ந்தவர்தான். இவருக்கே ஹோட்டலை குண்டுவைக்கும் உத்தரவு வழங்கப்பட்டது! இறந்த போது கூட இவர் தன்னை இஸ்ரேலியத் தலைவர்களைப் புதைக்கும் இடத்தில் புதைக்க வேண்டாம் எனவும் தனது பழைய சகாக்களைப் புதைத்திருக்கும் ‘ஒலிவ் மலை -Mount of Olives’ பகுதியிலேயே புதைக்குமாறும் கூறி இருந்தார்
theve
வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.
அடங்காத்தமிழன் வன்னியசிங்கமல்ல சுந்தரலிங்கம். இவர் தான் எலிசபேத் மகராணிக்கும் கணக்கு சொல்லிக் கொடுத்தவர். மாவிட்டபுர ஆலய பிரவேச நாயகன். 1970ல் காங்கேசன்துறை தொகுதியில் செல்வநாயகம் வி.பொன்ம்பலம் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு அய்யாயிரம் வாக்குகள் பெற்றவர்.
வன்னியசிங்கம். பாவம். தெல்லிப்ழையை சேர்ந்தவர். கோப்பாய் எம்பி. கோப்பாய் கோமான் என்று அழைக்கப்படுபவர். செல்வநாயகத்தின் வலது கை. தமிழரசுக் கட்சிக்குள் ஒரு ஒரு நல்லமனிதர். இளவயதில் மறைந்துவிட்டார்.
ஜெயபாலனின் நல்ல கட்டுரை. நன்றி.
panchali
“வணங்கா மண்” பயண ஏற்பாட்டாளர்களிடம் ஓர் உணர்வுபூர்வமான வேண்டுகோள். எத்தனை தடைவைதான் எங்களால் இப்படியாக பொருட்களை அனுப்பிக் கொண்டு இருக்க முடியும். எம்மினத்தின் அழிவில்தான் தமிழீழம் கிடைக்கு மென்றால் ஏன் எங்களிடம் உள்ள கப்பல்வழங்கள் அனைத்தையும் பயன்படத்தி புலம் பெயர் மண்ணிலே 20 லட்சத்திற்கு மேல் தன்மானத் தமிழர் வாழ்கின்றோமே அதில் உணர்வுகள் பொங்கி தங்களுக்குள்ளே அடக்கி வைத்திருப்பவர்களுக்கு முன்னுருமை அளித்து தொடர்ச்சியாக வன்னி மண் நோக்கிப் போய் தரையிறங்கி எங்கள் போராட்டத்தை விரைவு படுத்தமுடியாது. நான் சில நண்பர்களுடன் உரையாடிய போது அவர்கள் தயார் ஆகவே உள்ளார்கள் நானும் தயாராகவே உள்ளேன். ஏன் அப்படியான ஓர் பகிரங்க வேண்டு கோளை விட்டு இப்படியான உணர்வு பூர்வமான போர்க்குணம் கொண்ட மக்களை தரையிறக்க உங்களால் ஒத்துழைக்க முடியாது. நாங்கள் எத்தணை நாள்தான் இப்படியாக உண்ணா விரதங்களையும் போர்க் கொடிகளையும் பிடிப்பது.எத்தனை இளம்யுவதிகளும் இளைஞர்களும் தமிழினம் அழிகின்றதே என்று மனதிற்குள் வெதும்பிய படி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் நாங்கள் விமானங்களில் நாடுகடந்து போய் போராட்டங்கள் நடாத்தவில்லையா? நாங்கள் தன்மானத் தமிழன் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டாமா? ஏன் நாங்கள் புலம்பெயர் மண்ணிலே சுதந்திரமாகவா வாழ்கின்றோம்?. இங்கே சேவகஞ் செய்பவர்களாக வாழ்வதை விட எங்கள் மண்ணிலே உயிரை விட்டால் கூட எம் உயிர் மன நிறை வோடு மோட்சத்தை அடையும்.உங்கள் பகிரங்க அறை கூவலை எதிர் பார்த்திருக்கும் ஈழத்தமிழன். கூடவே வை.கோவிற்காலையும் நெடுமாறன் ஜயாவுக்காலையும் எம் தொப்பிள் கொடி உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்களும் கூடவே எம்மவருக்காக உடன் வந்து ஒத்துழைப்பார்கள.
பார்த்திபன்
பாஞ்சாலியின் சபதத்தை இல்லையில்லை கருத்தை எங்கள் இளையோர் சார்பில் நான் வரவேற்கின்றேன். எத்தனை நாளைக்குத் தான் முகத்திலை கலர் அடிச்சுக் கொடி பிடிக்கிறது. துப்பாக்கியையும் பிடித்து உலகிற்கு காட்ட வேண்டாமோ??