2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் முடிவுக்கு வருகிறது. இந்த புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு இல்லையென்று சொல்வது அர்த்தமற்றவாதம்.
ஆனால் இவ்வாறான ஒரு திட்டம் இலங்கை அரசால் இணைத்தலைமை நாடுகளுக்குவழங்கப்பட்டு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டதா என பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு திட்டம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மகிந்த அரசு எவ்வித அரசியல் தலையீடும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதையும் இராணுவத்திற்கான முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடிந்தது. இந்தியாவின் இராணுவ ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருந்தது.
படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளன. படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் போராளிகளும் கொல்லப்பட்டு தலைமை அச்சுற்றி வளைப்பை உடைத்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அக்குறுகிய சுற்றி வளைப்பில் இருந்து வெளியேறிய போதும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ள முல்லைத்தீவு பகுதியின் இராணுவ அரணை உடைத்து வெளியேற முடியவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் முக்கிய உறுப்பினர்களை உயிருடன் கைது செய்ய இராணுவத்தினர் மயக்க வாயுவை பயன்படுத்தியதாகவும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 5ல் இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டது. ஆயினும் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டது மட்டுமல்ல அவர்களின் உடல்கள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டும் உள்ளது. இவர்கள் வருமாறு அடையாளம் காணப்பட்டு உள்ளனர். புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும், நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர். கடாபி, பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார்.
இந்த பாரிய இழப்புகளை வெளியிடுவது உளவியல் ரீதியான பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால் புலிகள் இந்த முக்கிய தளபதிகளின் இழப்புகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். புலிகளின் ஆதரவு இணையத் தளமான தமிழ்நெற்றுக்கு சவாலாக உருவாக்கப்பட்ட ‘டிபென்ஸ் எல்கே’ தற்போதைய யுத்தம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் ஊடகமாக மாறியுள்ளது. புலிகளின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ்நெற் பார்ப்பவர்களிலும் பார்க்க டிபென்ஸ் எல்கே பார்த்து யுத்த நிலவரத்தை அறிந்துகொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். அதனால் புலிகள் மறைக்க விரும்பும் செய்திகளும் ஆதார பூர்வமாக அங்கு வெளியிடப்படுகிறது. ஒளிவிச்சு, தமிழ்நெற் எல்லாவற்றையும் டிபன்ஸ் எல்கே உங்வாங்கிக் கொண்டுவிட்டது.
புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நேற்று மாலை (ஏப்ரல் 5ல்) லண்டனில் அவசர அவசரமாகக் கூடிய புலிகளின் முக்கிய ஆதரவாளர்கள் சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக இன்று பிரித்தானியாவின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தீவிர ஆதரவாளர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். காவல்துறையினர் சுமுகமாகவே நடந்து கொள்வதாகவும் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெறுவதாகவும் அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.
புரஜக்ற் பீக்கன் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இணைத் தலைமை நாடுகள் அச்சத்துடனேயே தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். குறித்த காலப்பகுதியில் ஒவ்வொரு இலக்கும் அடையப்பட வேண்டும் என்பதை இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இத்திட்டத்தின் முதலாவது ஆண்டின் வெற்றி இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதி 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றை ஒவ்வொன்றாகக் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு பிரிவையும் கைப்பற்ற இலங்கை அரசு 12 மாதங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் இட்டது.
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கiயோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதிகளையும் கைப்பற்றுவது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றுவது.
புலிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் இந்த திட்டங்களின் படி புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகளை கட்டுப்படுத்த புரஜகற் பீக்கன் திட்டமிட்டது. அதன்படி அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகள் இந்த மூன்றாண்டு திட்டத்தில் கைப்பற்றுவது முக்கிய இலக்குகளாக அமைந்தது.
01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக அமையும். தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமையும். ஏப்ரல் 2011க்கு அண்மையாகவே மகிந்த ராஜபக்ச அரசின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவு பெற்று பொதுத் தேர்தல் இடம்பெற வேண்டிய காலப்பகுதியாகும்.
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 வரையான முதலாவது ஆண்டு காலப்பகுதி இலங்கை அரசுக்கு மிகுந்த வெற்றியை ஏற்படுத்தியது. சம்பூரில் 25 ஏப்ரல் முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதி முழுமையும் 30 ஏப்ரல் 2007ல் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இணைத் தலைமை நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை அரசைப் பாராட்டின. தூதரகங்கள் இராணுவ வெற்றிக்கு பாராட்டுச் செய்திகளை வெளியிட்டன. இந்த வெற்றியானது புரஜகற் பீக்கன் திட்டத்திற்கான ஆதரவை மேலும் பலப்படுத்தியது.
முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட புரஜக்ற் பீக்கன் 2வது கட்டம் மன்னார் – வவுனியா முனையில் 25 ஏப்ரல் 2007ல் ஆரம்பமாகியது. 24 ஏப்ரல் 2008ல் மது தேவாலயப் பகுதியையும் 08 மே 2008ல் அடம்பனையும் இராணுவம் கைப்பற்றியது. புலிகள் பெரும்பாலும் மக்களுடன் பின்வாங்கினர்.
புரஜக்ற் பீக்கன் மூன்றாவதும் இறுதியான புலிகளின் நிலப்பரப்பைக் கைப்பற்றும் யுத்தத்தில் ஜனவரி 3ல் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை சர்வதேச அபிப்பிராயங்கள் அனைத்தையும் இலங்கை அரசு தக்க வைத்துக் கொண்டது. குறைந்தபட்ச உயிரிழப்புகளே ஜனவரி பிற்பகுதி வரையான புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைகளில் ஏற்பட்டது. புலிகள் மக்களையும் சாய்த்துக் கொண்டு முல்லைத் தீவிற்குள் பின்வாங்கிச் சென்று ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கப்பட்டனர். ஜனவரி பிற்பகுதி முதல் இந்த குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்ற இராணுவம் தீவிரமான தாக்குதலை நடத்தியது.
ஜனவரி பிற்பகுதி முதல் தினமும் 40 – 100 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு புறம் இராணுவம் தாக்குதலை நடத்த மறுபுறம் இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். . பிடித்து வந்து செம்மையாக அடித்து முதுகுத் தொலை உரித்தனர். நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்று பலவந்தமாக அழைத்து வந்த மக்கள் புலிகளுக்கு மனிதக் கேடயங்களாக மாற்றப்பட்டனர். புலிகள் தங்கள் நன்றிக்கடனை செம்மையாகச் செலுத்தினர்.
இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகளின் மீதும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது திரும்பும் சர்வதேச அழுத்தங்கள் புலிகளின் நடவடிக்கைகளால் பெரிதும் சமப்படுத்தப்பட்டு இலங்கை அரசு ஒப்பீட்டளவில் சர்வதேச அங்கிகாரத்துடன் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்கிறது.
தற்போது புலிகளின் பலத்த கோட்டையாக விளங்கிய புதுக்குடியிருப்பும் படைகளின் வசம் வீழ்ந்து உள்ளது. இரண்டு மூன்று கிராமங்கள் உள்ளடங்கிய 20க்கும் குறைவான கிலோமிற்றர் பரப்பளவே தற்போது புலிகளிடம் எஞ்சியுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இந்தக் கடைசித் துண்டு நிலமும் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் முற்றுப்பெறும். இது இன்னும் சில வாரங்களுக்குள் 30 ஏப்ரல் 2009ற்குள் சாத்தியமாகும் என்பது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது. இதன் போது பெப்ரவரி 2009ல் நோர்வே உட்பட இணைத் தலைமை நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது. இவை புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைக்கு இணைத் தலைமை நாடுகள் அழித்த அங்கீகாரத்தை வெளிப்படையாகக் காட்டி உள்ளது.
ஆனால் அடுத்த சில தினங்கள் மிகவும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் வே பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமைகள் இப்பகுதிகளில் சிக்குண்டு இருப்பதால் நடக்கப் போகும் யுத்தத்தில் மிகப்பெரும் மனித அவலம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் இந்த யுத்தத்தை வென்றுள்ள இலங்கை அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாது என்பது தெட்டத் தெளிவாகி உள்ளது. புலிகளை அழிப்பதில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைக் கொண்டு வரும் என்பதைத் தவிர இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொடுத்து தனது இலக்கை அடைவதில் எவ்வித தயக்கமும் காட்டாது. புலிகளைப் பொறுத்தவரை தமது இருப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசுக்கு ஒப்பாக தமிழ் மக்களை பலிகொடுப்பதில் தாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஏற்கனவே செயலிலும் காட்டி உள்ளார்கள்.
ஜனவரி இறுதி முதல் மரண வதைக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களுக்கு அடுத்து வரும் நாட்கள் மிக மிகக் கொடுமையானதாக அமைய உள்ளது. தமிழ் தேசியத் தலைமைகளினது குறிப்பாக புலிகளினது முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கும் அதற்கு தலையாட்டு பொம்மைகள் போன்று தலையைத் தலையை ஆட்டிய ஊடகங்களினதும் புலம்பெயர் உறவுகளினதும் தவறுகளுக்கும் வன்னி மக்கள் அதி உச்ச விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் செலுத்தப் போகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்குண்ட இளம்பராயத்தினர் குறுகிய கட்டாய பயிற்சியின் பின் களமுனைக்கு அனுப்பப்பட்டு பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒரு தலைமுறையே இழக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தலைமை மிக நெருக்கடியான இராணுவ நிலைக்குள் சிக்குண்டு உள்ளது. அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் தாக்குதல்கள் அவர்களைச் சுற்றியுள்ள பல நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான வன்னி மக்களை உயிரிழக்கச் செய்யும். மிகப்பெரிய மனித அவலம் ஏற்படும். அதுமட்டுமல்ல ஏற்கனவே வன்னிப் பகுதியை விட்டு வெளியேறி எல்லையோரக் கிராமங்களில் உள்ள புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்கள கிராமங்களைத் தாக்கலாம் என்ற அச்சமும் பலமாக உள்ளது. இல்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரவலத்திலும் பார்க்க இலங்கை இராணுவமும் புலிகளும் ஏற்படுத்தப் போகும் மனிதப் பேரவலம் எண்ணிக்கையிலும் அதன் கோரத்திலும் மிக மோசமாக அமையலாம். இது தெற்கில் ஒரு இனக் கலவரத்தையும் தோற்றுவிக்கலாம்.
இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான காலங்கள் இழக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனவாத அலையிலும் புலி ஆதரவு – புலி எதிர்ப்பு அலையிலும் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புரஜக்ற் பீக்கன் திட்டத்தை புலிகளும் நன்கு அறிந்தே இருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்திய ஆதரவுடன் இலங்கை அரசு புலிகள் மீது இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதை கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அறிந்தே இருந்தனர். ஆயினும் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராணுவத் தவறுகள் அவர்களை அவர்களது முடிவுக்கே துரத்தி உள்ளது. புலிகள் தங்களைச் சூழ நண்பர்களைக் கொண்டிருக்காவிட்டாலும் எதிரிகளை உருவாக்காது இருக்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாக அல்லாமல் ஒரு இராணுவக் குழுவாக செயற்பட்டு தமிழ் மக்களது நியாயமான அரசியல் போராட்டத்தையும் இன்று சிதைத்து தன்னழிவை நோக்கித் தள்ளப்பட்டு உள்ளனர். அதற்கான விலையை ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகமும் செலுத்த வேண்டியுள்ளது.
அறிவானவன்
Very well analysised article even God will not be able to help us.
இஸ்கான்
புலிகளின் இழிவான நிலையையும் அவர்களின் எஜென்டுகளின் வங்குரோத்து அரசியல் நகர்வுகள் பற்றியும் இத்தனையாயிரம் எழுத்தாளர்கள் சுட்டிக் காட்டிவிட்டனர் அவர்கள் அவைகளை மதிக்காமல் மூன்றுகால் முயலை தேடிக் கொண்டிருக்கின்றனர். அதை விடுங்கள். அப்பகுதியில் சிக்குண்டுள்ள நமது உறவுகளின் நிலை என்ன? அவர்களை பாதுகாப்பாக மீட்க நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து மிக அவசரமாக செயலில் இறங்க வேண்டும். அதிலிம் புலிக் கொடியையும் தோற்றுப் போன தலைவரின் படத்தையும வைத்து சர்வதேச ஆதரவை நசுக்கி மக்களை பலியிடவே புலிஆதரவுகள் முற்படுவர் கவனமாக செயற்பட வேண்டும்.
rijai
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று சும்மாவா சொன்னாங்க …
இது தெய்வத்தின் விழயாடல் ஆரம்பம்….. ஒன்னும் பண்ண முடியாது….. புலி / புலி ஆதரவுகளே
தென்கொண்டார்
THE REAL MAAVEERARS
They were different from the so-called “Tamil Diaspora” who spend luxurious lives in western countries and whose battle is limited to the Internet. They knew that the war they were fighting was just like a cricket match to the so-called “Diaspora Tamils”. But they continued to do so as they knew that they have to keep the image of a false “Diaspora” entertained to get the much needed funds for the cause they were made to believe in. Like so many others they swallowed without question that there is a Tamil Diaspora out there, scattered throughout the world, waiting to return to a lost homeland. They did not know that hardly any of those who claimed to be or were described as the “Diaspora” would ever want to rub shoulders with them anywhere on earth.
They were different form the NGO lot who made a lucrative business from the sufferings of others. They did not knew that there is a group of contemptible people who receive great salaries, enjoy routine tours to Western countries (with shopping and other delights, too), and receive international awards allegedly for fighting for media rights, human rights ,etc., covering up the violence they champion and encourage in the name of liberation. They knew not that this group never wanted them to realise their cause nor to ever stop fighting. Hardly did they know anything of the existence of Deshapriayas, Imalkas, Pakiasothies, Wickramabahus, Haththotuwas, etc who make their living by the continued and sustained sufferings of the others.
The men and women in the professional arms of the security forces value honour more than anything else. They fight for the cause they believe in and seek honour by contributing towards its realisation. This is the reason that the armed forces personnel are trained to respect the fallen enemy. We do not wish to insult Theepan, Vidusha, Durga, Gadhapi, Gopith, Nagesh, and the rest who died in the recent fighting. Indeed, they were the cream of the LTTE fighting cadre. It is a shame that they had to die for the wrong cause. They fought for the destruction of their own motherland and their own nation. Their deaths represent the end of the brutal terrorist outfit that devoured some 75,000 lives of Sri Lankan citizens, the lives of their own brethren. But, the mean spirited that mislead them, still desire more deaths, and continued bloodshed in this country. We dedicate this editorial to all Sri Lankans who fully realise the diverse forces that by misleading and misguiding the flower of our youth, brought death and destruction to our country, and are now determined to say – Never Again.
MUKILVANNAN
commuicating with others forces us to step outside ourselves and allows others to renew our mood.
மாயா
மேலே உள்ள கட்டுரை புலிகள் தெரிந்தும் கண்டு கொள்ளாத பல விடயங்களை வெளிப்படுத்துகிறது.
இனிவரும் குறுகிய காலம் பெரும் அவலத்தை உண்டாக்கப் போகிறது. தற்போது காட்டப்பட்டுள்ள புலித் தலைமைகளின் இழப்பை ஒரு வெள்ளோட்டமாகவே அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த கட்ட பிரபாகரனது இழப்பு அல்லது பிரபாகரன் குறித்த செய்திதான் இலங்கையில் இன்னும் பிடிபடாமல் அமைதியாக ஒழித்துள்ள புலிப்போராளிகளை திடீர் தாக்குதல்களை அல்லது தற்கொலைத் தாக்குதல்களைச் செய்யவைக்கும்.
சிறீலங்கா முழுவதும் இருந்த பெரும்பாலான புலிகளின் தற்கொலை போராளிகள் மற்றும் உளவு பார்த்தவர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டும் , கடத்தி கொலை செய்யப்பட்டும் விட்டார்கள். இருப்பினும் ஆரம்பகாலத்தில் வந்தவர்களை இனம் காண முடியாத நிலை தொடர்ந்தே வருகிறது. வன்னித் தொடர்புகள் அற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள தொடர்புகளே அவர்களிடம் இருந்து வருகிறது. அதன் தாக்கம் மற்றும் தாக்குதல்கள் இனக் கலவரம் ஒன்றை உருவாக்க முயலலாம். அதை சிறீலங்கா அரசு கட்டுப்படுத்தும் ஆற்றலோடு இருக்கிறது. ஜே.ஆர் செய்த முட்டாள்தனத்தை அதன் பின்னர் வந்த எவரும் செய்யவே இல்லை. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்பதை உணர்ந்தவர்களான புரிந்துணர்வோடு இருக்கின்றனர். சில சிங்கள அரசியல்வாதிகள் மட்டும் தனது நிலையை இனவாதத்தைக் கொண்டு கட்டியெழுப்ப முனைந்தாலும் அவற்றை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாததை அவர்கள் பெற்ற வாக்குகளும் அவர்கள் தோல்விகளும் காட்டிவிட்டன.
ஜேவீபீ மற்றும் ஐதேகட்சி போன்றவற்றின் பிளவுகளும் அரசுக்கு சார்பானதாகவே ஆகிவிட்டன.
தமிழகத்து மக்களும் உணர்ச்சிகளை விடுத்து உண்மைகளை உணரத் தொடங்கிய காலம் இதுதான் என்பதை இப்போது அனைவராலும் காணமுடிகிறது. ராஜீவ் படுகொலை தொடர்பாக அடக்கப்பட்டிருந்த உணர்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருபோதும் இல்லாதவாறு பூகம்பம் போல் குமுறலோடு வெளியாகியது. அனைத்து தரப்பினரும் சரியோ தப்போ ஈழத் தமிழருக்கான போராட்டங்களில் இறங்கினர். மக்கள் கொதித்தெழுந்து விட்டனர் என தப்புக் கணக்கு போட்ட புலிகள் கலைஞர் கருணாநிதி அவர்களையும், புலிச் செய்திகளை வெளியிடாத ஊடகங்களையும் , தமிழக திரைப்படங்களையும் ஆரம்பகாலம் போல் நேரடியாக இறங்காது, திரைமறைவிலிருந்து கொண்டு தடை செய்யப் போக அது புலிகளுக்கே வினையாக முடிந்தது. அதை தற்போது வெளிப்படையாகவே காணமுடிகிறது.
தமிழர்கள்தான் புலிகள். புலிகள்தான் தமிழர்கள் எனும் கோஸத்தை தமிழர்களே ஒருபோதும் ஏற்றதில்லை. அது இனி வெளிப்படையாகவே தெரிய வரப்போகிறது. புலிகள் மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்களாக இருந்தால் இப்போதாவது அங்கு சிக்கியுள்ள மக்களை வெளியேற அனுமதித்துவிட்டு சரணடைய வேண்டும். அல்லது போராடி மடிய வேண்டும். இதைத் தவிர வேறு வழியே புலிகளுக்கு இல்லை.
மக்களை வெளியேற அனுமதித்துவிட்டு போராடி செத்தால் அவர்கள் குறிப்பிட்ட புலி ஆதரவாளர்கள் மனதிலாவது நினைவில் நிற்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் அவர்கள் கூறும் துரோகிகள் எனும் பதம் மக்களால் புலிகளுக்கே வழங்கப்படும். ஆனால் இந்த மனது புலிகளுக்கு வராது.
இறுதிநேரம் வரை ஏதாவது புதுமை நடக்கும் என்று புலிகள் மக்களை வைத்துக் கொண்டுதான் போராடுவார்கள். அவர்களை விடுவிக்க ஒருபோதும் மனது வராது என்றே நினைக்கலாம். அப்படி நடந்தால் அதுதான் புதுமை.
இந்த புதுமைக்காக புலம்பெயர் போராட்டங்கள் நடக்கிறது. இன்னும் சிறிது காலம் நடக்கும். இப்போதே முன்னைய வேகம் குறைந்துவிட்டது. இருந்தாலும் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் புதுக்குடியிருப்பை இராணுவம் கைப்பற்றிய செய்தி அளவு கூட முக்கிய செய்திகளாக மேலத்தேச ஏனைய மொழி ஊடகங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. புலிகளின் இணையதள பரப்புரைகளில் மட்டுமே அவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தற்போது புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் புலிகளை காப்பாற்றவே இப் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்பதை முழு உலகுக்கும் தம்மை அம்பலப்படுத்தியதாகவே புலிக்கொடிகளும், பிரபாகரனது படங்களும் காட்டிக் கொடுத்துவிட்டன. இவர்கள் தமிழ் மக்களைக் காப்பாற்ற வீதிக்கு வரவில்லை. புலிகளைக் காப்பாற்றவே வீதிக்கு வந்துள்ளார்கள் என்பதை முழு உலகமும் உணர இவர்களே வழி வகுத்துவிட்டனர்.
வன்னி மோதல் இறுதி முடிவுகள் புலத்திலும் சில அசம்பாவிதங்களை உணர்ச்சி மேலீட்டால் உருவாகும். அது இன்றைய இளையோரை முன்னிருத்தி சிலர் செய்யத் தலைப்படுவார்கள். அந்த இளையோரைக் காப்பதும் வழி நடத்துவதும் இன்றைய பெற்றோரின் கடமையும் , ஊடகங்களின் கடமையுமாகும். புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தமது வியாபாரத்துக்காக பிரச்சனைகளை ஊதிப்பெருப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஊடங்கள் அல்ல…. இவர்களை சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. புலிகள் வன்னி மக்களை எப்படி மனித கேடயமாக வைத்திருக்கிறார்களோ? அதேபோல் இந்த ஊடகங்களும் புலம்பெயர் மக்களை கேடயமாக்கி வாழ்கிறார்கள் என்பது பொய்யல்ல?
இனி வரப்போகும் காலத்தின் ஆரம்பம் சோகமாகவும் பின்னர் அதுவே நல்லதுக்குத்தான் அனைத்தும் நடந்துள்ளது என்பதாகவும் அமையும். அதுகூட மகிந்த அரசின் தமிழருக்கான உரிமைகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.
Hg
Tamils abroad urge LTTE leadership to release civilian hostages
One of the members of “Tamil Diaspora for Dialogue” Mrs Rajeswari Balasubramaniam yesterday (Apr 6) appealed to LTTE leader Prabhakaran for the release of innocent civilians trapped in the “No Fire Zone”
She was one of the 21 intellectuals who arrived in Sri Lanka last week. Mrs Balasubramaniam is a writer by profession and Human Rights campaigner who lives in the UK. The other members of the team comprising lawyers, writers, doctors, professors, academics from UK, Denmark, Switzerland, France, Norway, Saudi Arabia, Germany Canada and Australia.
“This is the time for us, Tamils, to rethink anew whether war and destruction is the final solution for Tamils who have lost thousands of them when one looks back after almost 20 years”, he said. “We Tamils who have borne the brunt of suppression, oppression, battered and bruised over the years must forget the past and think anew. We know that it is not easy to forget the past after what we went through was hell for many years it is not easy but you have to forget the past” she asserted.
“This message is especially for all those members of the ‘Tamil Diaspora’ who are especially beating the war drums from the cool comfort and safety of their homes in foreign capitals around the world. They must think anew and learn to live in a united Sri Lanka where all could enjoy equal rights”, she said
They had met ministers Rohitha Bogollagama, Prof. Tissa Vitharna, Dew Gunasekera Senior Presidential Advisor MP Basil Rajapaksa Secretary to the President Lalith Weeratunga Secretary Justice Ministry Suhada Gamlath Foreign Secretary Dr. Palitha Kohonne, Secretary UDA Dr. Prathap Ramanujhan, Secretary Social Services Ministry Mrs Rajeswary Jegarajasingham and former IGP and Presidential advisor Chandra Fernando
Another member Dr. Rajasingham Narendiran said that the delegation members were highly impressed by Senior Presidential Advisor Basil Rajapaksa during his three hour presentation on Re-awakening of the East program of the Government “We found that through the Central Government they had done tremendous work which we would have preferred if it were implemented by the Provincial Government”, he said .He further said they requested the government any surrendering LTTE cadre should be treated with humanity and rehabilitated
Mrs. Balasubramaniam said that it is time for LTTE leader to rethink how productively he could have used his abilities by creating a new Tamil community by entering the democratic path
Courtesy: The Island
thurai
புலிகளின் வீழ்ச்சியை தாங்கமுடியாத புலத்துப் புலிகள் உலகெங்கும் தமது சுயரூபத்தை காட்டுகின்றார்கள்.
பிறந்தநாட்டையும் மதிக்கமாட்டோம், வளர்ந்தநாட்டையும் மதிக்கமாட்டோம், வாழும்நாட்டையும் மதிக்கமாட்டோம். எஙகள் தலைவர் பிரபாகரன், எங்கள் அமைப்பு புலிகள்.நாங்கள் வேண்டுவ்து தமிழீழம்.
துரை
BC
//இஸ்கான்-அதிலிம் புலிக் கொடியையும் தோற்றுப் போன தலைவரின் படத்தையும வைத்து சர்வதேச ஆதரவை நசுக்கி மக்களை பலியிடவே புலிஆதரவுகள் முற்படுவர் கவனமாக செயற்பட வேண்டும்.
துரை-பிறந்தநாட்டையும் மதிக்கமாட்டோம் வளர்ந்தநாட்டையும் மதிக்கமாட்டோம்.//
மிக சரியாக சொல்லியுள்ளார்கள்.
மாயா
புலிகளின் தலைவரையும் தம்மையும் காப்பாற்றுவதற்காக புலிகளின் தளபதிகள் கடும் யுத்தம் புரிந்து தமது உயிர்களை இழந்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு முழுவதையும் புலிகள் இழந்த நிலையில் புலிகளின் தலைவர் தனக்கும் தனக்கு வேண்டிய ஒரு சிலருக்கும் பொது மன்னிப்பு தருமாறு திரை மறைவில் ஐரோப்பிய நாட்டின் சமாதான தூதுவர் ஒருவர் ஊடாக பேச்சுக்களை நடத்திய செய்தி தெரிய வந்துள்ளது. காடுகளை கூட கட்டுப்பாட்டு பிரதேசங்களாக வைத்துக் கொள்ள முடியாத நிலமை ஏற்பட போகின்றது என்பதினை அறிந்து கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் தாய்லாந்தில் மறைந்து இருப்பதாக நம்பப்படும் குமரன் பத்மநாதன் ஊடாக ஐரோப்பிய நாட்டின் சிறப்பு தூதுவரை அணுகி இலங்கை அரசுடன் இரகசிய பேச்சுக்களை நடத்து மாறு நிகழ்த்து மாறு கேட்டு இருந்தார். அதற்கு அமைய சிறப்பு தூதுவர் சிங்கப்பூரின் ஊடாக மலேசியா சென்று அங்கிருந்து தாய்லாந்து சென்று குமரன் பத்மநாதனுடன் பேசியுள்ளார். புலிகளின் அனைத்து போராளிகளும் ஆயுதங்களை கைவிட்டு படையினருடன் சரண் அடைவார்கள் என்றும், ஆனால் பிரபாகரனுக்கும் மற்றும் சில உயர்மட்ட தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி இரகசியமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என பத்மநாதன் விஷெட தூதுவருக்கு விளக்கம் அளித்துள்ளார்.மேலதிக தகவல்கள்:
theneeweb.de/html/070409.html –இதுக்குத்தான் கப்பல் விடத் திட்டம் போட்டவர்கள் போல் தெரிகிறது?
ganesan
புலிகள் எழுப்பிய புரளியில் ஜெயபாலனும் எடுபட்டுள்ளார் காரணம் இந்த வன்னி யுத்தம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இராணுவம் பாவிக்கும் குண்டுகள் ஒரேமாதிரியாகவே புலிகளின் உடல்களை அழிக்கின்றது – நச்சு வாயு அடித்திருந்தால் இறந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அருகே இருந்த தலைவரும் அல்லவா இறந்திருப்பார் அப்படியல்ல இவர்க்ள தலைவரை பாதுகாக்கவே போராடி இறந்தனர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்படதால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் – புலிகளின் பலவீனத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் நச்சு வாயு அடித்தாலே இந்தப் பெரிய தலைகள் பாரிய படைநகர்வுகளை செய்யக் கூடியவர்கள் இறநடதனர் அலலது அவர்களை இந்த இராணுவத் கொல்ல முடியாது என்ற வாதத்தின் பிரதி பலிப்பே நச்சு வாயு ஜெயபாலன் இந்தக் கருத்தை ஆய்வு செய்யவும்.
மாயா
ganesan கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. நச்சு வாயு அடித்திருந்தால் அப்படியான படங்களை இராணுவம் வெளியிட்டு இருக்காது. புலிகளின் தளங்களில் இராணுவம் வெளியிட்ட படங்களே இடம்பெற்றுள்ளன. இறந்த போராளிகள் கொமாண்டோ படையணி போல் கறுப்பு வண்ணத்தை பூசிக் கொண்டு இரவில் வெளியேற முயன்றிருக்கலாம்? அல்லது இரவில் தெரியாதவாறு முன்னேறி இராணுவத்தை தாக்க நினைத்திருக்கலாம்.
சில நாட்களாக இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றிருக்கிறது. முதலில் அவர்களை காக்கவே நோர்வே ஊடாக ஐநா முக்கியஸ்தரோடு பேரம் பேசப்பட்டுள்ளது? அது இழுபறிப் படவே ஒட்டு மொத்தமாக இராணுவம் தாக்கி போராளிகளை அழித்துள்ளது. நச்சு வாயு அடிக்கப்பட்டிருந்தால் அது ஒரு நிறத்தை தரும் என்று எதிர்பார்க்க முடியாது.அப்படியானால் கூட அனைத்து உடல்களும் நிறமாக இருக்க வேண்டுமே?
kuna
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.
இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..
இலங்கையின் 58வது ராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.
இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய ராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை ராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.
சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.
மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை ராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயா
பிரெஞ்சு மீடியாக்களில் அப்படி ஒரு செய்தியும் இல்லை. அந்த செய்தி தளத்தையோ அல்லது எந்த மீடியா என்பதையோ எழுதுங்கள். இதுவெல்லாம் புலிகளது புலுடா? சில நாட்களுக்கு முன் 300 இந்திய இராணுவம் செத்தது என்றீர்கள். பெண்களுக்கு கருத்தடை செய்கிறார்கள் என்றீர்கள். இராணுவம் பலாலியல் பலாத்காரம் என்றீர்கள். சரி இவ்வளவும் தெரியுது ஆனால் புலிகளது முக்கிய தளபதிகள் எத்தனையோ பேர் செத்துக் கிடக்கிறார்கள். இன்னும் உங்களுக்குத் தெரியவில்லையே?
MUKILVANNAN
A TRUTH IS TO BE KNOWN ALWAYS TO BE UTTERED SOMETIMES
lio
தமிழர் போராட்டம் எப்படி நடாத்தப்பட்டுள்ளது என்பதும் இதன் தலைத்துவம் எப்படி செயற்ப்பட்டுள்ளதும் சர்வதேசத்தில் ஒரு எதிர் மறையான உதாரணமாக உருவாகிவிட்டது. சர்வதேசங்களில் போராட்டங்கள் ஒரு விடயத்தை சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது ஆனால் ஈழப்போராட்டம்…..
Tharanya
//இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.//
அந்த பிரெஞ்சு நிறுவனத்தின் பெயர் என்ன? எப்போது இந்த செய்தி வெளியாகியது? போன்ற தகவல்களை தந்தால் நாங்களும் சரி பார்க்கலாமே.
damilan
புலிகளின் தலைமை ஆபத்தில் இல்லை புலிகளின் தலைவர் ஆபத்தில் என்று தலைப்பை மாற்றவும். மாற்றுக் கருத்தை இயக்கத்தில் முன்வைத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் பட்டம் துரோகி. இது புலிகளின் வரலாறு.அந்த வகையில் பிரபாகரனைப் பொறுத்தவரையில் தனது முக்கிய தளபதிகளைக் காப்பாற்ற எடுக்க வேண்டிய முடிவு அவர் கையிலேயே இருந்திருக்கும் தீபன் போன்ற தளபதிகள் தம்மைக் பாதுகாக்க வேண்டிய பிரபாகரனிடம் கோரி இருக்க முடியாது.என்ன விலை கொடுத்தாவது தமது தளபதிகளைக் காப்பாற்றி இருந்தால் அது தமது தலைமையைக் காப்பாற்றியதற்கு சமன்.
பிரபாகரனால் கைவிடப்பட்ட நிலையிலேயே கடைசிவரைப் போராடி தமது உயிரினை கொடுத்துள்ளனர்.ஏனெனில் புதுக்குடியிருப்பை தக்க வைப்பதன் மூலம் எதயும் செய்ய முடியாது. தமக்கும் தமது தலைமைக்கும் விசுவாசமாக நடந்த தளபதிகளுக்கு பிரபாகரன் கொடுத்த பரிசு இது. தம்மை நம்பி வந்த மக்களுக்கு பிரபாகரன் கொடுக்கும் பரிசு எதுவாக இருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் இருந்தே புத்தியுள்ள அல்லது புத்தி இல்லாத யாரும் கணித்துக் கொள்ள முடியும்.
புலிகள் இயக்க அழிவிற்கும் இந்த நிலைக்கும் இலங்கையையோ இந்தியாவையோ சர்வதேசத்தையோ கூட்டுக் காரணியாக காரணம் காட்டுவதன் மூலம் இலங்கை படைத்தரப்பின் பலத்தை குறைத்துக் காட்ட முற்படுவது சிறுபிள்ளைத்தனமான வாதம் இந்தியா திட்டம் போடவும் சட்டம் போடவும் இலங்கை இந்தியாவின் கொலனி அல்ல.மற்றும் ராணுவ உதவியை இந்தியா வழங்க மறுத்த போது அதன் எதிர் நாடுகளான பாகிஸ்தான் சீனாவிடம் இலங்கை ஆயுதங்களைப் பெற்ற போது இந்தியா வழிக்கு வந்தது ஞாபகம் இல்லையா ?
படத்திற்கு அது ஓட முதல்தான் தலைப்பு கதை வசனம் எல்லாம் எழுதுவார்கள் படம் ஓடி கிளைமாக்ஸ்ஸில் யாரும் எழுதுவதில்லை. ஜெயபாலன் அவர்கள் இடையிலேயே எழுதியுள்ளர். கதை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் வில்லன்(பிரபா) கதாநாயகனைப் (மகிந்த) ‘யதார்த்தவாதி’ என்று புகழ்வார் அது எந்தக்கட்டத்தில் வருகிறது ?
பார்த்திபன்
//இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. – குணா//
அடடா உங்களுக்கு மட்டும் செய்தி தரவெண்டு ஏதாவது பிரான்ஸ் செய்தி நிறுவனத்தை வைத்துள்ளீர்களா?? எங்களுக்கும் அந்த செய்தி நிறுவனத்தின் பெயரைச் சொல்லுங்கோ நாமும் கொஞ்சம் உல்டா பார்க்க. இவ்வளவு நாளும் பினாமியாக செயல்பட்ட இணையத்தளங்களை வைத்து புரளியைக்கிளப்பினீங்க. இப்ப உதவிக்கு பிரான்ஸ் செய்தி நிறுவனங்களையும் சேர்த்து புரளி கிளப்புறீங்ளகளோ?? கடைசி மாவீருரையில் தலை உலகத்தின் 4 வது பெரிய இராணுவத்தையே அடித்து விரட்டியவரர்கள் என்று விட்டது உதார் என்று இப்ப சொல்ல வாறியளோ?? சொல்லுங்கோ சொல்லுங்கோ கொஞ்சம் உரக்கவே சொல்லுங்கோ……….
murugan
ஜிரிவி யை பார்க்க பயமாக இருக்கிறது. எங்கே பிரித்தானியாவிலும் பிரான்சிலும் அந்நந்த அரசுகளுக்கெதிராகவும் ஆயுதப் போர் தொடங்க வேண்டும் என கிளம்பி விடப் போகிறார்கள். நாங்கள் சொல்லுவதைத் தான் உலகம் கேட்க வேணும். உலகம் சொல்வதை நாங்கள் கேட்க தேவையில்லை என்ற “வீரபரம்பரையினர்” அல்லவா?
இஸ்கான்
யுத்த சூனிய பிரதேசங்களில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அவர்கள் படும் தூன்பங்களில் இருந்து மீட்கப் படுவதற்கான தங்கள் பணிகளை மேற்கொள்வதை விடுத்து புலிகளை காப்பாற்ற முற்படும் இவர்களை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. அங்கே இவர்கள் காப்பாற்ற எதுவும் மீதமும் இல்லை புலிகளில் ஆகவே மக்களை விடுதலை செய்ய ஆவண செய்து நல்லதோரு அரசியல் திட்டத்திற்கு பங்களிப்பதே புத்திசாலித்தனமானது.
ஒரு சிறு குழந்தைகூட விளையாடும் போது விழுந்து விட்டால் அழும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் தனாக எழும்பி தன்னை சரிசெய்து கொண்டு ஓடி வரும் ஆனால் இந்தப் புலிகளின் ஆதரவாளர்கள் எத்தனைமுறை விழுந்து கொண்டு அழுகின்றனர் யாரும் உலகில் அவர்களை அரவணைக்க வரப்போவதில்லை என்று தெரிந்தும் எழுந்து தாங்களாகவே சுதாகரித்துக் கொள்ளும் ஒரு சிறு குழந்தையின் புத்தி கூட இவர்களுக்கு இல்லை.
புலிகள் மாவிலாற்றை மறைத்து யுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோது அண்ணர் தொடங்கிட்டார் இனி தமிழ் ஈழத்தின் மீதி முற்பதுவீதமும் மீட்கப்பட்டு தமிழீழம் மலர்ந்துவிடும் என ஒரு அரசையும் அதன் இராணுவத்தையும் கணக்கிலெடுக்காத இவர்கள் இனி இராணுவம் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தியே புலிகளை பிடித்தாகவே கதை அளப்பர். அவர்களுக்கும் அவர்களின் ஆய்வாளர்களுக்கும் இதை தவிர வேறு எந்த கதையும் சொல்லி தங்களின் தொல்வியை ஒப்புக் கொள்ள சாட்டுப் போக்கு இல்லை.
thurai
ஈழத்தமிழர்களிற்கு தலைவர் என்று சொல்லவும், தமிழர் வீரத்தைப்பற்ரிப்பேசவும் தலவரும் அவ்ரின் ஆதரவாளர்கழும் தகுதியானவர்களா? பல கோடி சொத்துக்களையும், லட்சக்கணக்கான உயிர்களையும் அழித்தது.
சரித்திரத்தில் இல்லாதவாறு தமிழர் பிரதேசங்களை சிஙள்வரிடம் பறிகொடுத்தமை ஈழத்தமிழரிற்கு இந்தியாவையும்,சிங்கள இனத்தையும் பகைமையாக்கியது சிங்கள இராணுவத்தை வென்று ஈழம் மீட்கப்புறப்பட்டவர்கள். தமிழரையே காக்க முடியாதது மட்டுமல்ல,இன்று இறப்பவர்களின் உடல்களைக் காட்டியும் உலகெங்கும் தமிழர் வீதியில் விழுந்து குளறியும் தலைவரைக் காப்போம் என்னும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
துரை
Jeyabalan T
//புலிகளின் பலவீனத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் நச்சு வாயு அடித்தாலே இந்தப் பெரிய தலைகள் பாரிய படைநகர்வுகளை செய்யக் கூடியவர்கள் இறநடதனர் அலலது அவர்களை இந்த இராணுவத் கொல்ல முடியாது என்ற வாதத்தின் பிரதி பலிப்பே நச்சு வாயு ஜெயபாலன் இந்தக் கருத்தை ஆய்வு செய்யவும்.// கணேசன்
கணேசன் எனது கட்டுரையில் எங்கும் இராணுவம் நச்சு வாயு பயன்படுத்தியதாகக் குறிப்பிடவில்லை. வருமாறே குறிப்பிட்டு உள்ளேன். //இந்த தாக்குதல்களில் முக்கிய உறுப்பினர்களை உயிருடன் கைது செய்ய இராணுவத்தினர் மயக்க வாயுவை பயன்படுத்தியதாகவும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.// உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன். நாம் தகவல் மூலங்களை வெளியிட முடியாதநிலையில் எமக்கு கிடைக்கக் கூடிய நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலேயே செய்திகளை வழங்குகின்றோம். யுத்த சூழலில் அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தவும் முடிவதில்லை. அதனை வெளிப்படையாகத் தெரிவித்தும் உள்ளேன்.
மாயா
பிரபாகரன் உடனடியாக சரணடையவேண்டும் இது கடைசி அறிவிப்பு என ஒலிபெருக்கிகளில் படையினர் அறிவிப்பதாக லங்காதீப பத்திரிகையில்வந்துள்ளது என சிறீலங்காவிலுள்ள நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
MUKILVANNAN
THERE IS NO WITNESS TO PROVE IN AN ALLEGED POISON GAS ATTACK ON TAMIL REBELS AND CIVILLIANS BUT PICTURE AND VIDEO FOOTAGE ISSIED BY THE SRILANKAN GOVERMENT IS EVIDENCE. HOWEVER WAR CRIMES ARE NO LONGER CONCIDERD A CRIME THESE DAYS BECAUSE MAJORITY DOES IT, TO BLAME ITS POINTS FINGER BACK TO THEM. SO THAT WORLD WILL NEVER GOING TO BREAK THE SILENCE.
TO PROTECT THE TAMIL CIVILIANS WE NEED TO ACT TOGETHER, BE TOGETHER, AND LOVE ONE ANOTHER.THEY BY HAVING ONE CHOICE TO MAKE. EITHER SUPPORTING GENOCIDE OR RATHER BEING WITH OUR OWN PEOPLE, TO MAKE A BETTER PLACE TO LIVE.
aasa
/PICTURE AND VIDEO FOOTAGE ISSIED BY THE SRILANKAN GOVERMENT IS EVIDENCE.//
what evidence? If chemical attack happened, entire forest would be dead. Trees, plants and green leaves would die. The whole place would be dead. No one can enter that place or touch the people who are dead. If it is chemical attack, the people would not be dark. There would be white powder over them. No one can beleive your assertions.
It is a classic pincher movement that sla did and the tigers were caught unaware. More than 125 tigers surrendered to the sla.
iniyan, kanchipuram
மானமுள்ளவன் போராடிச் சாகின்றான்.
மானங்கெட்டவன் புழுங்கிச் சாகின்றான்.
ஒற்றைத் தமிழ்மகன் உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம், பிறப்பின்மேல் ஐயமென
சற்றும் தயக்கமின்றிச் சாற்று.
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
பார்த்திபன்
இனியன், மானமுள்ளவன் போராடிச் சாகின்றான். உண்மை தான், ஆனால் பதுங்கு குழியினுள்ளும், அப்பாவி மக்களினிடையேயும் பதுங்குபவன் தான் மானமுள்ளவனென்று உங்களுக்கு யார் சொன்னது. ஏன் சம்பந்தமில்லாது பாவலரேறு பெருஞ்சித்திரனார் கவிதையை கேவலப்படுத்துகின்றீர்கள்.
thurai
//மானமுள்ளவன் போராடிச் சாகின்றான்//
தமிழரைக் காக்கப்புறப்பட்ட தமிழனே, காக்கப்படும் தமிழனாக மாறியுள்ளபோது மானமென்ற பேச்சிற்கே இங்கு இடமில்லை.
துரை
மாயா
இந்த நச்சு வாயு பயன்படுத்தியதான கதையை தாக்குதலில் இருந்து தப்பி வந்த லோரன்ஸே சொன்னதாக செய்திகள் தெரிவித்தன.
ஆனால் இன்று பீபீசீ தமிழோசையில் “நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாராவது சிகிச்சை பெற்றனரா?” என புதுமாத்தளன் மருத்துவ அதிகாரி சத்தியமூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் “இல்லை” என்று பதிலழித்தார்.
எனவே??
murugan
“சிறீலங்கா அரசின் போரின் வேகத்தை விட தமிழ் மக்களின் போராட்டத்தின் வேகம் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அனைத்துலகத்தின் கண்களில் மண்ணைதூவி விட்டு சிறீலங்கா அரசு வன்னி மக்கள் மீதான மனிதப்படுகொலைகளை மிகவிரைவாக ஆரம்பிக்க திட்டமிட்டுவருவதாகவே படைத்தரப்பு தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது”
கெதியாக தலைவரைக் காப்பாற்றுங்கள் என புதினம் கெஞ்சுகிறது. சுரேந்திரனும் இராஜ மனோகரன் ,கந்தையா, மூர்த்தி எல்லோரும் புறப்படுங்கள்!
kirupa
பொருஙல் புலி விரைவில் புரபடும்
அறிவானவன்
UN DAILY NEWS from the UNITED NATIONS NEWS SERVICE 8 April, 2009
‘CLOCK TICKING’ FOR SRI LANKA’S CIVILIANS, WARNS UN HUMANITARIAN CHIEF
Time is running out for the thousands of civilians trapped in northern Sri Lanka amid the ongoing conflict between Government forces and Tamil rebels, the United Nations humanitarian chief warned today, appealing once again for a temporary halt in fighting to assist the innocents.
“As a full-scale, long-term ceasefire is unlikely to be agreed now, the only way to get the civilians out of harm’s way is a temporary humanitarian lull, during which aid workers and relief supplies must be allowed into the conflict zone, and those who want to leave must be given the chance to do so,” John Holmes writes in an opinion piece published today in The Guardian.
Mr. Holmes, the Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, urges immediate action to help those trapped in the Vanni region, warning that “a bloodbath on the beaches of northern Sri Lanka seems an increasingly real possibility.”
The Sri Lankan military has pushed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) into an area so small that any shooting or shelling inevitably causes casualties among the 150,000 to 190,000 civilians trapped in the same zone, he says.
There have been many hundreds of civilian deaths caused by firing from both sides, he adds, although exact numbers and who fired what and when are impossible to verify.
“It is clear that the LTTE is refusing to let people flee, though many are managing to escape somehow, and I fear the combatants may be gearing up for a final confrontation,” Mr. Holmes states.
Civilians trapped by the fighting must be allowed a free choice of whether to leave or stay, he stresses. “If the LTTE truly has the best interests of the Tamil people at heart, they should contribute to ending this unnecessary suffering of the civilian population.”
The Sri Lankan Government, for its part, must stick to its promise of not using heavy weapons while the fighting lasts, and hold off from any final attack in the conflict zone while the pause is negotiated, he adds.
“With so many people packed into such a small area, further military action not only risks more civilian deaths and injuries but also threatens to undermine the Government’s credibility with the international community and the national groups with whom it must soon seek reconciliation.”
Independent aid workers must be allowed to bring in more aid, assess the situation and help civilians to decide their own fate, he states, adding that unless better access for supplies and aid workers is urgently secured, “the ravages of disease, untreated wounds and hunger will kill many more people, regardless of the conflict.
“With thousands of lives in the balance and the clock ticking, the time for decisive action by the government, the LTTE and the international community is now, before it is too late,” he stresses.
mano
துரை சொன்னது போல> பிறந்த நாட்டையும் மதிக்கமாட்டோம்> வளர்ந்த நாட்டையும் மதிக்கமாட்டோம்> வாழ்ந்த நாட்டையும் மதிக்கமாட்டோம். இலங்கைத் தமிழ் இனத்தின் மீது இத்தகைய பற்றற்ற தன்மை (புலியின் மீது பற்று என்று நினைக்கிறீர்களா?) நிலைத்துவிட்டது. அதனாலேயே தனது சுதந்திரத்தை உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. சரியான நோக்கத்தின் மீது பற்றுவைக்காமல் தமது சொந்த நலனை வைத்துக்கொண்டே போராட்டம் நடத்துகிறார்கள்.
வளைந்து நுழைந்து நிமிரலாம் என்ற நம்பிக்கையுடன் போராடுபவர்களைப் பார்த்து> நேராகப் போய் முட்டிமோதி நீ சாகாவிட்டால் துரோகி தான் என்று முடிவுசெய்கிறார்கள் சிலர். அந்த சிலர் யதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள்.
இவர்கள் தொடங்கிய வேளாண்மையில் நெல் வீடு வந்து சேரும் என்று பட்டினியாகக் காத்திருக்கிறார்கள் அப்பாவி மக்கள். வேளாண்மைக்கு புறப்பட்டவர்கள் ரின் சாப்பாடுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மாயா
புலிகளை சரணடையுமாறு நேற்று விடுத்த ஒலிபெருக்கி அறிவித்தலை அடுத்து யுத்தசூன்ய பகுதியிலிருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்காக புதுமாத்தளன் , நந்திக்கடல் மற்றும் கிழக்கு புதுக்குடியிருப்பின் பாதுகாப்பு முன்னரங்குகளை இராணுவம் திறந்துள்ளதுடன் அப்பகுதிக்குள் முன்னேறவும் தொடங்கியுள்ளது. தற்போது மக்களுக்கும் படையினருக்குமான தூரம் 400 – 500 மீட்டர் தூரத்தேயுள்ளது. கடல் மார்க்கமாக வெளியேறும் மக்களை ஏற்றுக் கொள்வதற்கு படையினர் கடலில் தரித்து நிற்கின்றனர். நிலப் பரப்புகளால் வரும் மக்களை நோக்கியே புலிகள் சுடுகின்றனர் என்கிறது இராணுவம்.
பிரபாகரன் உடல் நலம் குன்றியிருப்பதாக அறிவித்திருக்கும் படையினர் தாக்குதல் தலைமையை பொட்டு அம்மான் ஏற்றிருப்பதாகவும், படைத்துறைப் பொறுப்பை வேலவன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் காவல்துறை பொறுப்பாளராக இருக்கும் இளங்கோ மூலம் அனைத்து போராளிகளையும் முன்னரங்குகளை நோக்கி வருமாறு பொட்டு அம்மான் பணித்துள்ளார்.
தகவல் : LDN
மாயா
//மானமுள்ளவன் போராடிச் சாகின்றான்.
மானங்கெட்டவன் புழுங்கிச் சாகின்றான்.- iniyan, kanchipuram on April 8, 2009 4:23 //
முட்டாள்கள் விட்டில் பூச்சாய்
விளக்கில் விழுந்து
இல்லாமலே போன்றான்
Dylan
Lots of Indian military person in the war going on in northern part of Sri Lanka, along with SLA said French News Agency in news. The news says that there are many Indian soldiers in the 58th and 59th divisions of the Sri Lankan Army
Even now, the war in Pudukudiyiruppu had resulted in large causalities and more than 125 Indian Army men’s dead bodies are sent to chennai, and they are kept in Nugambakkam Medical College said the French News Agency. It is noted that, 3 Radar Engineers of India are get injured in this attack.
However Sri Lankan Army has denied the news. THANKS LANKA TRUTH
damilan
“சிறீலங்கா அரசின் போரின் வேகத்தை விட பிரபாகரனின் ஓட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் புலி ஆதரவாளர்கள் கண்ணில் எண்ணையை ஊற்றி அவதானமாக இருக்கவும்” விரைவில் நல்ல ? செய்தி வரும்.
aasa
what french agency? People keep asking the actual link in the internet or the newspaper image. Why the puli supporters are not able to produce that?
மாயா
we are in the media. We don´t know such a media in FRANCE, aasa.