உலக சமாதான ஆதரவுக் குழுவினுள் சமாதானம் காண முடியாமல் அதன் உறுப்பினர் வெளியேற்றப்பட்டு உள்ளார். புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவுக்கு தலைமை தாங்கி இலங்கைக்குச் சென்ற சட்டத்தரணி கே பத்மநாதன் அவர் அங்கம் வகித்த உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக உலக சமாதான ஆதரவுக் குழுவின் தலைவர் கே குணபாலசிங்கம், கே பத்மநாதனுக்கு எழுதிய கடிதத்தில் ‘உங்களை உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து உடனடியாக நீக்க முடிவெடுத்து உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணி கே பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத்தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பரில் நாடு திரும்பி இருந்தனர். Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பும் அடையாளம் காணப்படக் கூடிய அமைப்பாக இல்லையென்றும் கே குணபாலசிங்கம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்து இருந்தார். இவர்கள் நவம்பர் இறுதிப் பகுதியில் மற்றுமொரு விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்து இருந்தனர். அதற்கிடையே கே பத்மநாதனின் உறுப்புரிமையை உடனடியாக நீக்குவதாக உலக சமாதான ஆதரவுக் குழுத் தலைவர் கே குணபாலசிங்கம் நவம்பர் 12ல் எழுதிய கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக சமாதான ஆதரவுக் குழு – Global Peace Support Group – UK (LTD), பெரும்பாலும் ஒரு கடதாசிப் பதிவுகளில் வாழும் அமைப்பு. ஆனால் இவர்கள் பிரித்தானியாவில் இயங்கும் ஏனைய புலியாதரவு அமைப்புகளுடன் இணைந்து 2008 மார்ச் 22 23ம் திகதிகளில் லண்டனில் ஒரு சர்வதேச மாநாட்டை கூட்டி இருந்தது. ( தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தில் எழுப்ப முயற்சி – Global Peace Support Group ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தென்ஆபிரிக்க பிரதிநிதி Sisa James Nijikelana : த ஜெயபாலன்) இதுவே அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பாடு செய்த பொது நிகழ்வு. இச்சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள முற்பட்ட ஈரோஸ் சங்கர்ராஜி நேசன், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோருடன் சமாதானத்திற்கு வரமறுத்த உலக சமாதான ஆதரவுக் குழு அன்று அவர்களை நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் வெளியேற்றியது. (கருத்தரங்கில் இருந்து ஜெயதேவனும் சகாக்களும் வெளியேற்றப்பட்னர் : த ஜெயபாலன்) இது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் தலையிட்ட போதும் சங்கர்ராஜி நேசன் ஆர் ஜெயதேவன் இருவரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையைக் கண்டித்த பேச்சாளர்கள் அத்தடை நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளாக உலக சமாதான ஆதரவுக் குழுவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சவுத் ஆபிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏன்சி உறுப்பினர்கள் மாநாட்டில் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்த போதும் அண்மையில் ஐநாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் உலக சமாதான ஆதரவுக் குழுவின் விருப்பிற்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர். அன்று உலக சமாதான ஆதரவுக் குழுவின் உறுப்பினராக இருந்த கே பத்மநாதன் தற்போது அவ்வமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். ஆனால் அன்று உலக சமாதான ஆதரவுக் குழுவின் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர் ஜெயதேவன் மற்றும் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் ஒரே குழுவில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் கே குணபாலசிங்கம்.
இலங்கை சென்று திரும்பிய குழு தங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியதாக அவ்வமைப்பின் தலைவர் கே குணபாலசிங்கம் கொதிப்படைந்துள்ளார். உலக சமாதான ஆதரவுக் குழுவின் பெயரை தனது சுயநலத்துக்காக கே பத்மநாதன் பயன்படுத்துவதாகவும் அதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் கே குணபாலசிங்கம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார். கே பத்மநாதனுடைய நடவடிக்கை தங்களுடைய அமைப்பின் வேரையே பாதித்துள்ளதாகவும் கே குணபாலசிங்கம் குற்றம்சாட்டி இருந்தார். கே பத்மநாதனாலும் அவருடன் கூடச் சென்றவர்களாலும் பரப்பப்பட்ட வைரஸ்யை தடுக்க முடியாது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கே குணபாலசிங்கம் ஆனால் இந்த வைரஸ் மேலும் ஊடுருவாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்து இருக்கின்றார். கூடச் சென்றவர்கள் பற்றி ஒரு மென்போக்கை வெளிப்படுத்திய கே குணபாலசிங்கம் அவர்களுக்கு கே பத்மநாதனுடைய உள்நோக்கம் தெரியாது இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சென்று திரும்பிய குழுவின் பயணக் களைப்பு ஆற முதலேயே தனது கண்டணத்தைச் சுடச்சுட வெளியிட்ட உலக சமாதானத்திற்கான ஆதரவு அமைப்பு மே 18 வரையான மிகமோசமான யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் கண்மூடித்தனமாக மக்களைக் கொன்று குவித்தது பற்றி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதுமுனையில் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்து பற்றி சமாதான ஆதரவுக் குழு கண்டுகொள்ளவேயில்லை.
கே பத்மநாதனுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ரி தர்மகுலசிங்கம் ஆர் இலங்கைத்தேசியமன்னன், சோமஸ்கந்தன் ஆகியோரையும் கண்டித்துள்ள கே குணபாலசிங்கம் இவர்களின் விஜயம் சுயநல நோக்கம் கொண்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இக்குழு தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி இருந்தனர். இதைச் சுட்டிக்காட்டியுள்ள கே குணபாலசிங்கம் இலங்கைக்குச் சென்றவர்கள் மிக மோசமான கிரிமினல்களைச் சந்தித்ததாகவும் எழுதியுள்ளார். கே பத்மநாதன் தனது தொடர்புகளை பொதுத் தளத்தில் விட்டதைக் குற்றம்சாட்டியுள்ள கே குணபாலசிங்கம், அவர் இலங்கை அரசின் ஏஜென்றாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட கே பத்மநாதன் தலைமையிலான குழு பிரச்சாரப்படுத்தி வருகின்றது. அதற்குப் பதிலளித்த கே குணபாலசிங்கம் உலக சமாதான ஆதரவுக் குழு இலங்கையில் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க உருவாக்கப்படவில்லை என்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதன் வரையறைகளுக்குள் நின்று உதவுவதே அதனுடைய நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழி என்பதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே உலக சமாதான ஆதரவுக் குழு தனது தளம்பலற்ற கொள்கையாகக் கொண்டிருப்பதாக கே குணபாலசிங்கம் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்களே அவர்களது கருத்துக்கு மாறாகச் செயற்படுபவர்களுக்கு அரச முகவர்கள், கைக்கூலிகள் என்ற பட்டங்களை வழங்கி வந்தன. தற்போது முதற்தடவையாக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தன்னுடன் உடன்படாதவர்கள் மீது அரச முகவர்கள் கைக் கூலிகள் போன்ற குற்றச்சாட்டுக்களை எழுத்தில் வைத்துள்ளது.
உலக சமாதான ஆதரவுக் குழுவின் கண்டணம் சட்டத்தரணி கே பத்மநாதனை குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ளும் அதன் ஆதரவு அமைப்புகளுக்குள்ளும் தற்போது ஆரம்பித்துள்ள விரிசல்களையே இக்கண்டனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஏற்கனவே பிரித்தானிய தமிழ் போறம் போன்ற அமைப்புகளுக்குள்ளும் அணி சேர்க்கைகள் தீவிரமடைந்து வருகின்றது. இவற்றின் வெளிப்பாடுகளையே அண்மையில் வெளிவரும் அறிக்கைகள் கண்டணங்கள் வெளிப்படுத்தகின்றன.
உலக சமாதான ஆதரவுக் குழு தலைவர் கே குணபாலசிங்கம் கே பத்மநாதனுக்கு அனுப்பிய கடிதம்:
Dear Mr Nathan
Since you have requested for comments, from readers whom you have sent this informations related to your fact finding mission to Vanni and elsewhere.
I would like to give my observations below:
The purpose clearly indicates that this is a result of self motivated attempt by one or two individuals just to satisfy their own aspirations since there was no agenda and or mandate based on this has taken place. Also, this seems to be an unusual situation fact finding mission without a properly identifiable organisation involved. Therefore, let me go on this basis.
With regard to the list of names of the persons whom you seem to have met is another controversy. The lists containing 18 names among who includes are some notorious criminals. Obviously, as you states you would have received good response, as your voluntary representation adds to the list of traitors? Especially from overseas and on whom the government heavily depending on publicity/propaganda.
By doing so you have given some assurance to the government that some members among Diaspora are still prepared to betray their own suffering Thamil populations.
Good, that you have pointed out number of things includes such as a good judiciary system and even a political solution to the Tamils? I have my very doubt as to whether you are aware of, over the understanding and the circumstances under which all these activities are going on for so long time. So, the circumstances made one or two individuals of your nature to approach the so called authorities to suggest for a political solution? Don’t you think that you have done a crime?
I do not know what to say it to you Nathan? I am ashamed that you were a member of this organisation.
You do not need to say that you and your delegation were careful in avoiding the government’s trap for the propaganda purpose. People are very much aware of your manures’ and most of them are known about the whole picture that created by you.
There is evidence coming every day apart from some media which has picked up some thing and put some more addition before release. What was the additional commitments that you made while waiting for another delegate? People try to pretend that they are after on some good faith but in your case, you have gone far from that and done the damages.
Nathan, you have phoned me number of occasions at least six times and made appoint to meet me but never kept a single date. Further, if I can recollect, you have phoned up and told me that you have been working tirelessly on a project based on Section 13 amendment and requested me to assist by giving some information of which I have promptly passed on you.
Is this the out come of that project? You being a member of the Diaspora community in the UK, you could not find some or at least one member to come behind your concept? Yes the public are very well aware of your approaches and of your calibre.
Finally, your self centred innovation resulted in losing your rest of the identity if you feel have any.
By declaring your name with all communication details you have challenged all those of legitimate activist and inviting the public or known people to approach you. This act of yours obviously indicates that, that you have taken the task of agent for the Sri Lankan government though there is already some having infiltrated and so with the GPSG.
I am sure you would have used the name of GPSG for your added self promotion and I wonder as to whether you could go any longer in this way. This is a very serious violation against the very root of this organisation. Although we may be able to stop this virus for further infiltration, we may not be able to STOP the same virus that has already being spread by you and your two colleaques. Some of them may not be aware of your motive behind. Mr Nathan. I should tell you that this organisation was formed, not to solve but to assist where possible to solve the TAMIL NATIONAL PROBLEMS by being within the boundary and limitations.
It is the unsakable policy of the Global Peace Support Group – UK to work for the attainment of SELF DETERMINATION OF THE TAMIL SPEAKING PEOPLE IN Sri Lanka, based on the facts that the self determination is the way forward to PEACE.
Please note that you have acted not only at this time but number of occasion previously too and hence our decision to remove you from the membership of the GPSG forthwith.
Please note if you intend to communicate to me or to the organisation, you may do so directly to me though I would not anticipate any such things more.
Yours Sincerely
K.Kunabalasingam
12/11/09
இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் கே பத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:
Dear Friends and colleagues,
Re: Visit to Sri lanka IDP camps.
The Center for peace and social development based in Denmark arranged our visit to Sri lanka.
The purpose of the visit was a fact finding mission made with three good reasons.
1.To understand the real situation of the Tamil civilians affected by the war and the manner in which the expatriate tamils and other international organisation could get together to attend to the humanitarian needs of the civilians and the tamil caders including the so called child soldiers.
2.The Political peace process and the implementation of the already enacted legislations which are favourable to the tamil nation .
3.Expatriate Tamils rights to go back to their home land to claim their lands and properties, enter into any investment programmes in any part of Srilanka .
Even people with European citizens(domicile of choice)their eligibility to revert back to origin of domicile without any payment of fees(administrative fees only)
The members of the team headed by Mr.K.Pathmanathan solicitor visited Sri lanka on 10th october 2009 On a fact finding mission..
The Following members joined the team;
Mr.R.Somaskanthan(Germany),
Mr Tharuman Tharmakulasingam(Denmark)chairman of the center for peace and social development),
MrT.T.Mannan.
THE FACT -FINDING OF THE MISSION:
The team met the following ministers and members of the Sri lankan Parliament.
a.Hon’ble Dew Gunasekera Minister,
b.Hon’ble Rajitha Seneratna Minister,
c. Hon’ble Dr.Tissa Vitharana Minister,
d.Hon’ble Milinda Morogoda Minister,
e.Hon’ble.Neomal Perera Deputy Minister,
f.Hon’ble .Anura Priyadarsana Yapa Minister,
g.Hon’ble Basil Rajapakse Minister
h.Hon’ble.Rathakrishnan Deputy Minister,
I.Hon’ble Douglas Devananda Minister,
j.Hon’ble Vinayagamoorthy Muralitharan Minister,
k.Hon’bleIshard Badiudeen Minister,
l.Mr.Mano Ganeshan MP,
m.Mr.Rauff.Hakeem MP
n. Mr.Noordeen Master
o,MrM.T Hasen Ali MP
p.Mr Somawanasa Amarasingha leader of JVP
q.Mr Chandrsekaran MP
l.Mr Karu Jayasooria MP
We received good response from all the ministers and members of parliament .We discussed the following matters in order to create a consensus.
Firstly we discussed the political mishandling of the rights of the tamils by the successive governments and political leaders of the past, from the time of Independence.
We requested all the politicians and all agreed that the Tamil speaking peoples inherent, inalienable rights and their fundamentals rights under the UN charter to be respected fully and shall not be the subject matter of the political agenda. .All hate speeches ,racial discriminatory actions should be criminalised by appropriate legislation.
The Emergency laws and unlawful arrest ,kidnapping of the tamil speaking people should be stopped forthwith,
All the impediments and obstructions, like high security zone, check post and other security measures so far existed should be removed. At one point The ministers said that’State could not compromise the security for which the delegates clearly stated that Tamil speaking peoples security and freedom cannot be compromised and if compromised the state is depriving the freedom and sovereignty of the Tamil people. The Tamil speaking people should be able to enjoy their life peacefully. Their privacy should not be tampered. The Tamils freedom of movement within Sri lanka should not be restricted and the fear of ethnic cleansing and genocide should be eradicated immediately by appropriate legislation and independent Judicial process. There should not be any economical or social disparity between the two major communities concerning the future developments.
Regarding the political solution we discussed with important ministers.The implementation of 13 th amendment and power sharing was discussed in length.
Regarding the implementation of the Tamil language the ministers agreed that the Tamil language would be implemented fully in the North and East. In the East and other 24 districts where Tamil speaking community are identified to be in considerable numbers, the use of Tamil language shall be implemented in all GA division by appointing sufficient public officers with the knowledge of Tamil Language. All Tamil speaking people will receive reply in Tamil for all communications in Tamil Language.
The ministers agreed that the The North and East police departments should have 90% tamil speaking police officers employed.
The delegates pointed out the police high handed action in the past which led to the growth of several armed resistance.
The police and army atrocities have gone unabated with the blessing of the politicians and the fear enshrined in the minds shall not be dispelled unless strict measures are taken immediately.
The delegates maintained that the Judiciary is not independent and pointed several decisions where the Tamils lost confidence in the system.
We also requested that Diaspora Tamils should be consulted regarding the appointment of the panel of members for the implementation of the 13th amendment and power sharing proposals. WE suggested to appoint a commission Including the delegates from theDiaspora Tamils to monitor the implementation of 13th amendment.
Regarding the investment proposals.
The ministers are interested in encouraging investment in Sri lanka by the Diaspora Tamils.The delegates maintained that unless the peace process are in place and the Tamils repose confidence in the governmental system the Tamils will not be encouraged immediately to invest; considering the past experience.
Visit to Mannar, Manthai, Cheddikulam manik farm,Vavuniya, Mankulam, Thunukai and Mullaitivu district.
The Delegates visited Mannar,Manthai and observed the following matters:
The giant tank is being renovated and new roads being constructed. The plans were shown to us by engineers involved.
In Manthai demining is taking place.
We went to Thunukai and visited few re-settled families. They explained their difficulties. They have to start their life from the scratch. They have to travel many miles to collect their food and other house hold items. Children has to travel many miles to their schools. They have no transport facilities. They don’t have even bicycles to travel..The basics things are not available for the resettled people.
The IDP’s are mostly settled in their own lands. Some have moved to original places after so many years. The government ministers promised that all the IDPs’ shall be settled in their own lands.
The expatriates Tamils should send their representatives to identify their respective lands and claim as soon as possible and government is expecting the Diaspora Tamils to visit their land and arrangement shall be made to assist them.
The government authorities promised that No land grabbing nor encroachment on others lands will be permitted.
The delegates visited the Manik IDP camp on the 2nd day visit. The government officials maintained that they are doing every thing to provide the necessities to the people in the camp. The UNHCR has provided a better shelter for the IDP’s compared to the other camps.
We could not visit all the camps. The government propaganda media was very keen to record our opinion about the camps and the IDPs. The People wanted to leave the camps as early as possible.
The advisor to the government, Mr Chandra Fernando,Retired IGP, said that the IDP’s will be settled before January 2010, except those areas where the last phase of the war took place.
There are 12000 LTTE caders and 2000 child soldiers in the Poonthoddam camp.
We had the opportunity of meeting the local organisation which visited the camp. They organised a musical group to poonthodam camp. The caders joined the Bajans with great reluctance.
We the delegates feel like visiting the camp as soon as we receive permission from Mr.Morogoda, the minister for Judiciary and Defence secretary Mr.Gothabaya Rajapakse.
CONCLUSION:
Our delegation was careful in avoiding the trap set by the government propaganda machinary. We were focussing on the areas where our tamil people needed help and assistance to restart their life.There are thousands of orphanage tamil children in hospials in the Sinhala areas. There are children in Kandy hospitals as well.
We met the National Child protection authorities and they are willing to hand over 300 children immediately for the diaspora tamils to take over and maintain them .The government is ready to give 15 acres of land in Thunukai to set up a proper center to look after and maintain them. This a massive project available for the diaspora tamils to start working immediately.
There 46000 widows in the Eastern province and similar number of widows in the Northern province. The widows and their children need assistance.It seems that the government has no plan in place to assist them immediately.
Further visit to be made by the end of this month and any body interested to join please donot hessitate to contact Mr K.Pathmanathan (0208 ……)
kpnathan@hotmail.co.uk