ஜெயபாலன் த

ஜெயபாலன் த

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் குடும்பத்தினரும் உயிரிழந்து உள்ளனர்! – எஸ் பத்மநாதன் த வி பு

LTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி மகள் துவாரகா இருவரும் கொல்லப்பட்டதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களுடைய இளைய மகன் பாலச்சந்திரன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லையென செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்

Pirabakaran_Vcharles_anthony.jpgLTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ வலிமையால் வெற்றி கொண்டுள்ள அரச படைகள் மிக மோசமாக சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக செய்திகள் வெளிவருகின்றது. தங்களிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் படுகொலை செய்து வருவதாக தேசம்நெற்கு நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. மே 17ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தோல்வியை ஏற்று ஆயுதங்களைக் கைவிட்டு உள்ளதாகத் தெரிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவருடைய உடல் இன்று கண்டெடுக்கப்படும். இவருடைய உடல் மறுநாள் கண்டெடுக்கப்படும் என்று அறிவித்து ஒரு வகை சாகசமாக இக்கொலைகள் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த அவலத்தின் கொடுமை என்னவெனில் தங்களது தலைவர்கள் சரணடைய மாட்டார்கள் என்று வாய்ச்சொல் வீரம் மட்டும் பேசும் புலத்து தமிழர்கள் அக்கொடுமையை வெளிக்கொண்டுவரத் தயங்குகின்றனர். தாங்களே கட்டமைத்த விம்பங்களை உடைக்க முடியாமல் பொன் விலங்கு பூட்டிய சூழ்நிலைக் கைதிகள் ஆகி உள்ளனர். சரணடைந்த தலைவர்கள் கொல்லபடுகிறார்கள் என்றால் தாங்கள் கட்டமைத்த அடங்காத் தமிழன், மறத் தமிழன், வீரத் தமிழன் என்ற விம்பங்கள் உடைந்துவிடும் என்ற அச்சத்தில் யதார்த்தத்தை உணர மறுக்கின்றனர்.

அவர்களின் மயிரைக் கூட இராணுவத்தால் தொடமுடியாது, அவர்களின் சாம்பலும் கிடைக்காது என்று புராண காலத்து கதை காலேட்சபம் பாணியில் கதையளப்பிற்கு எவ்வித குறைவும் இல்லை. அரசியல் தஞ்சம் கேட்கும் போது உள்ளுணர்வை கைவிட்டு எதையும் செய்யத் தயாராக இருக்கும் புலத்து உறவுகளுக்கு பல நாள் சரியான நித்திரையின்றி, சரியான உணவின்றி மரணப் போராட்டத்தை நடத்தியவர்கள் வேறு வழியின்றி சரணடைவதை பெரும் இழுக்காக அருவருப்பாக எண்ணுவதில் எவ்வித நியாயமும் இல்லை. புலத்து உறவுகளின் வாய் வீரத்திற்காக விட்டில் பூச்சிகள் போல் போராளிகள் மடிய வேண்டிய அவசியமில்லை.

சரணடைபவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேசச் சட்டங்களை உயர்த்திப் பிடித்து அவர்களது உயிரைப் பாதுகாக்கப் போராடுவதை விடுத்து எதற்காகவோ போராடுகிறார்கள். எப்போது? எதற்காகப் போராட வேண்டும்? என்ன கோரிக்கையை முன் வைப்பது தந்திரோபாயமானது? என்பதையெல்லாம் விட்டு சலசலப்பை ஏற்படுத்துவதற்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை.

அன்று மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. வன்னி பூர்வீக மண். அங்கிருந்து மக்களை எழுப்பக் கூடாது என்றார்கள். எங்கள் தலைவர் பிரபாகரன் என்றார்கள்.

கடைசியில் ‘புலிகளை தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்கச் சொல்லுங்கள். நாங்கள் மற்றைய விடயங்கள் பற்றி கவனிப்போம்’ என்று கூறி மாணவர் பரமேஸ்வரனின் உண்ணாவிரத்ததை பிரித்தானிய அரசு முடித்து வைத்தது. அதனைத்தான் ‘வெளியே சொல்ல முடியாத முக்கியமான விடயத்தை பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது’ என்று புலிசார்பு ஊதுகுழல்கள் சிறிது காலம் ஊதித் திரிந்தன.

இன்று புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இவர்களோ எங்கள் தலைவர்கள் எல்லாம் பூர்வீக மண்ணை விட்டுத் தப்பிச் சென்று நலமாக காட்டுக்குள் தீவு ஒன்றில் இருப்பதாக திருப்திப்பட்டுக் கொண்டு ‘தலைவருக்கே சவாலா’ என்று கூறிக்கொண்டு உலா வருகின்றனர். புலிப் போராளிகளும் தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் அந்த மண்ணோடு மண்ணாக்கப்படுவது பற்றிச் சிந்தித்து செயற்பட அவர்களால் முடியவில்லை.

நிஜமாகவே புலிகளுக்கு இறுதியாக அமைந்த இந்த யுத்தத்தின் கடைசிச் சில நாட்கள் மிக முக்கியமானது. புலிகளை வேரோடு அறுத்தெறியும் திட்டம் மிகக் கச்சிதமாக நிறைவேற்றப்படுகிறது. அதனை அறிய முடியாது புலி ஐதீகத்தை ஏற்றி மயக்கத்தில் உள்ளது புலிகளின் தமிழக புலம்பெயர் ஆதரவுத்தளம். ‘முகம் இளமையாக உள்ளது.’ ‘முகத்தைத் திருப்ப முடியாது.’ ‘சேவ் எடுக்கப்பட்டு இருக்கிறது.’ ‘மீசையில் சில மயிர்கள் மிஸ்ஸிங்’ என்று புலத்து உறவுகள் எல்லாம் குற்றவியல் பரிசோதணையில் நிபுணர்கள் ஆகிவிட்டனர். இதற்கு இந்திய புலனாய்வுச் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட ஒருவரின் குறிப்புகளை இங்கு தருகிறேன்.

No reason to doubt the statement of the Sri Lankan Army about the death of Prabakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam ( LTTE), and other leaders of the LTTE. Doubts about the circumstances relating to their death will remain. These doubts will have no impact on the ground situation. Pointless wasting time and space analyzing the doubts.
20-May-2009 : B. Raman – Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai.

இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் உண்டு. இந்த யுத்தத்தை பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய புலனாய்வுத்துறை. அவர்கள் யுத்தக் களத்திலும் உள்ளனர். வே பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதில் தான் சந்தேகங்கள் என்கிறார் பி ராமன். இந்த சந்தேகங்கள் யுத்த களத்தில் உள்ள நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறும் பி ராமன் அந்த சந்தேகங்களை ஆராய்வது அர்த்தமற்றது என்கிறார்.

புலனாய்வுச் சமூகத்தைச் சேர்ந்த பி ராமனுக்கு அது அர்த்தமற்தாக இருக்கலாம் ஆனால் மனிதாபிமான நோக்கில் செயற்படும் ஒவ்வொருவரும் அதனை ஆராய்வது தவிர்க்க முடியாதது. வே பிரபாகரன் மட்டுமல்ல புலிகளின் முக்கிய தலைவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது ஆராயப்பட வேண்டும்.

அவர்கள் கொல்லப்பட்டுள்ள முறை அதனை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஜேவிபி காலகட்டத்தில் ஜேவிபி எவ்வாறு களையெடுக்கப்பட்டதோ அதே போன்றே இன்று புலிகளின் களையெடுப்பும் நடாத்தப்படுகிறது. ஒரு வித்தியாசம் அன்று ஜேவிபி களையெடுப்பில் சிவில் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த மஹிந்த ராஜபக்ச இன்று புலிகளின் களையெடுப்பை நடத்துகின்றார்.

ஜேவிபி களையெடுப்பில் அதன் தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவ்வமைப்பின் தலைவர்கள் இளைஞர்கள் யுவதிகள் கொல்லப்பட்டனர். களனியாற்றில் வீசப்பட்டனர். அதே போல் இன்று புலிகளின் களையெடுப்பில் சரணடைந்த அதன் தலவர் பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சுட்டுக்கொல்லப்பட்டு நந்திக் கடற்கரையில் வீசப்படுகின்றனர்.

மே 16ல் இந்திய தேர்தல் தங்களுக்கு எதிராக அமைந்ததைத் தொடர்ந்தே புலிகள் தங்களது இறுதிக் கட்டத்தை உணர்ந்தனர். அன்று (மே 16) காலையே அவர்கள் தங்கள் கணக்குத் தவறியதை அறிந்துகொண்டனர். உடனடியாக புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் ‘எதுவும் செய்யத் தயார்’ என அமெரிக் அதிபர் ஒபாமாவிற்கு பகிரங்கமாகத் தெரிவித்தார். ‘எதுவும் செய்யத் தயார்’ என்பது சரணடையவும் தயார் என்பதையே வெளிக்காட்டி நின்றது.

புலிகள் 400 * 600 சதுர மீ பரப்புள்ள ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதன் அளவு ஒரு உதைப்பந்தாட்ட மைதானம் அளவே இருக்கும். அந்நிலையில் ஜோர்தானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தான் பயங்கரவாத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாட்டிற்கு செல்லப் போகிறேன் என்று மே 16ல் தெரிவித்துவிட்டு தனது பயணத்தை குறுக்கிக் கொண்டு இலங்கை பயணமானார். ஜனாதிபதி பயணமாகும் போது தெரிவித்த கூற்றும் மறுநாள் மே 17 காலை விமானத்தில் இருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கியதும் இராணுவத்தின் வெற்றியை மிக உறுதிப்படுத்தி உள்ளது.

ஒரு சிறு பகுதிக்குள் சுற்றி வளைக்கப்பட்ட புலிகள் தொடர்ச்சியான தாக்குதல்கள் நித்திரையின்மை பசி ஆகியவற்றினால் ஏற்படும் களைப்பு என அவர்கள் மிகக் கடுமையான உடலியல் அசௌகரியத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்த விரக்தி, வெறுமை, மனவுறுதித் தளர்வு அனைத்தும் எதிர்பார்க்கக் கூடியதே. இருந்தும் அன்று (மே 17) வெளிவந்த சூசையின் தொலைபேசி வேண்டுகோள் ‘போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.”  எனத் தெரிவித்து இருந்தது.

ஆனால் அதே நேரப்பகுதியில் வந்த செல்வராஜா பத்மநாதனின் வேண்டுகோள் ”இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”’ என்றது. செல்வராஜா பத்மநாதனின் கூற்றுப்படி மே 17 பிற்பகலுடன் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் மௌனமாகின. அவர் ”இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.” எனத் தெரிவித்து இருந்தார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

அதேசமயம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. (மே 17 இரவு மே 18 அதிகாலை) தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்ட இருந்தது. கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார்.

அதேநேரம் முள்ளிவாய்க்காலில் அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் மே 17 2009 ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் மே 18 2009 அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா, கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்ததாகவும் புதினம் இணையத்தளச் செய்தி தெரிவிக்கின்றது.

மே 18 2009 அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர் என்றும் அச்செய்தி கூறுகின்றது. இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாகவும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கும் இவ்விணையத் தளம் இந்தப் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தங்களுக்கு தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் இராணுவம் மே 17 2009 காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்து இருந்தது. இவர்கள் மீட்கப்பட்டனரா அல்லது சரணடைவின் போது ஒப்படைக்கப்பட்டனரா என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

இவற்றைப் பார்க்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 17 மாலைக்குப் பின் தாக்குதல் நடத்தக் கூடிய வலுவை இழந்துள்ளனர் அல்லது தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவதற்குத் தயார் நிலையில் இருந்துள்ளனர் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக உள்ளது. ஏப்ரல் 5 – 6 ல் புலிகளின் கருமையமான போராளிகள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்ட போது புலிகளின் முக்கிய இராணுவத் தலைவர்கள் ஐவரும் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தலைவர்கள் கொல்லப்பட்டனர். மே 17 சரணடைவுக்கு முன்னான தாக்குதலில் சொர்ணம் சசி மாஸ்டர் ஆகிய இரு முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர்.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் அனைவரும் மே 18 காலைக்குப் பின்னரேயே கொல்லப்பட்டனர். அதாவது விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்ட பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான உடற் காயங்கள் இதுவரை காட்டப்பட்ட அவர்களின் உடலங்களில் காணப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சார்ள்ஸ் அன்ரனி, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை ஆகியோர் உட்பட பலர் தலைப் பகுதியில் சுடப்பட்டே கொல்லப்பட்டு உள்ளனர். புலிகளது பிஸ்டல் குழுவினர் மரண தண்டனை வழங்கும் பாணியிலேயே இலங்கை அரச படைகளும் பழிவாங்கும் வகையில் இப்படுகொலைகளைப் புரிந்திருக்கலாம் என எமக்குக் கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றது.

கொல்லப்படுபவர்கள் தலையில், காதில், முகத்தில் என சுடப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். இவர்களின் உடலின் ஏனைய பாகங்களில் சுட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியவரவில்லை. நேற்று (மே 20 2009) கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது குடும்பத்தினர் அனைவரது உடலிலும் அவர்களது தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபாவின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, கடைசி மகன் 13 வயதேயான பாலச்சந்திரன் கூட தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேர்த்தியாக உடலின் குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் உள்ள துப்பாக்கிச் சுட்டுக் காயங்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டு உள்ளதையே புலப்படுத்துவதாக முன்னாள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய போராளியொருவர் தெரிவித்தார். இது முன்பு இயக்கங்கள் மரண தண்டனை வழங்கும் பாணியான படுகொலைகள் என்பது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.

எமக்குக் கிடைக்கும் மற்றுமொரு தகவல் இப்படுகொலைகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளின் நேரடிப் பணிப்பில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. அத்தகவலின்படி சரணடைபவர்களில் புலிகளின் கருமையத்தைச் சார்ந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்திய புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் புலிகள் ஆயுதங்களைப் போடும் சரணடையும் முடிவுக்கு வந்த பின் மே 17 2009 இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின் முக்கிய சந்தேக நபர்கள். அவர்கள் மீது இந்திய நீதிமன்றம் பிடியாணையும் விதித்து உள்ளது. அவர்கள் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒரு சூழல் இந்திய அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதும் இன உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதும் உறுதியானது. அவ்வாறான ஒரு அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்தியா அவர்களை படுகொலை செய்யும்படி கேட்டிருக்கலாம் என்ற பொருத்தமான வாதம் ஒன்று வைக்கப்படுகிறது.

புலிகளின் தலைவர்கள் தங்களிடம் சரணடைந்து விட்டனர் என்பது இலங்கை அரசுக்கு கௌரவத்தை அளித்தாலும் அவர்கள் பிரிவினைவாதத்தின் குறியீடாக இருப்பதால் அவர்களை அகற்றுவது நீண்ட காலப் போக்கில் இலங்கைக்கு லாபகரமானதாக அமைந்திருக்கும். போராட்டம் பிரிவினை ஈழக் கோரிக்கைகு இதனை ஒரு பாடமாக்கவும் இலங்கை தீர்மானித்து இருக்கலாம்.

புலிகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி இருக்காவிட்டாலும் ஒரு போராட்டத்திற்கான முன்னுதாரணமாக அமைந்ததால் அவர்களை இவ்வுலகை விட்டு அகற்றுவதில் சர்வதேச வல்லாதிக்க நாடுகளுக்கும் வேறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே பயக்கெடுதியை ஏற்படுத்தும் வகையில் புலிகளின் முக்கிய தலைவர்களும் குடும்பங்களும் குழுக்குழுக்களாக அல்லது குடும்பங்களாகக் கொல்லப்படுகின்றனர்.

இலங்கை – இந்திய அரசுகளின் அதிஸ்டம் இதனைத் தட்டிக் கேட்கக் கூடிய புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் புலிகளின் தலைவர்கள் சரணடையவும் இல்லை கொல்லப்படவும் இல்லை அவர்கள் தப்பித்துக் கொண்டனர் என்பதை நிரூபிப்பதிலேயே உள்ளனர். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் இருக்கும் போது மக்களைத் தடுத்து வைத்தும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் தங்களது பயங்கரவாத நடவடிக்கையால் இலங்கை அரசைப் பாதுகாத்து அரச பயங்கரவாதத்திற்கு நியாயத்தைக் கொடுத்து வந்தனர். அவர்களின் அழிவின் போதும் அரசு மீது கடுமையான யுத்தக் குற்றங்கள் வந்தவிடாமல் ‘நாங்கள் சரணடையவும் இல்லை. அரசு எங்களைக் கொல்லவும் இல்லை’ என்று அரசைக் காப்பாற்றுகின்றனர். மகிந்த ராஜபக்ச அரசுக்கு புலி இருக்கும் போதும் ஆயிரம் பொன் அழிந்த போதும் ஆயிரம் பொன்.

யுத்தம் மே 17ல் முடிவுக்கு வந்து சில நாட்கள் ஓடிய போதும் அரசு இன்னமும் யுத்தப் பகுதிக்குள் சுயாதீன ஊடகங்களையோ மனிதாபிமான அமைப்புகளையோ அனுமதிக்கவில்லை. மாறாக யுத்தப் பகுதியை துப்பரவு செய்து தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முரண்பட்ட வாக்கு மூலங்கள்:

வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை.
மே 19 2009 : செல்வராஜா பத்மநாதன், சர்வதேச இணைப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? இல்லையா: என்பதற்கு அப்பால் யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அமைப்புகள் இவ்விடயத்தில் ஈடுபடுத்தப்படுவதும் கைது செய்யப்பட்டவர்கள் சரணடைந்தவர்கள் கௌரவமாக வாழ உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம்.

இன்னமும் விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.

இந்த சரணடைவை மத்தியஸ்தம் செய்தவர்கள் யார்?
எந்த நம்பிக்கையில் இந்த சரணடைவு ஒழுங்கு செய்யப்பட்டது?
எரிக்சொல்ஹெய்ம் விஜய் நம்பியார் ஆகியோரின் ஈடுபாடு என்ன?
புலிகளின் சர்வதேச இணைப்பாளர் ஏன் இது தொடர்பாக மெளனம் காக்கின்றார?
ஐநா அப்பகுதியின் செய்மதிப் பதிவுகளை வெளியிடுமா?
இந்தச் சரணடைவில் இந்தியாவினதும் இலங்கையினதும் பாத்திரம் என்ன???????

புலிகளின் இறுதிநாட்கள் ஒரு காலக் குறிப்பு:

மே 13 2009: இந்திய பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு. தமிழ்நாட்டில் இன்று (மே 14 2009) இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்.

மே 14 2009 அமெரிக்க அதிபர்  ஒபாமா:  ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” இதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் பாதுபாப்பு புலனாய்வு மற்றும் முக்கிய அதிகாரிகள் இலங்கை சம்பந்தமாக இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

May 14, 2009 : Press Trust of India / Washington: A top US official today said the Obama Administration has kept India fully informed and is working very closely with New Delhi on the current Sri Lankan crisis. “We have been working very closely with India,” the Assistant Secretary of State, Richard Boucher, told a group of South Asian journalists at the Foggy Bottom headquarters of the State Department. Boucher, who has been actively involved in the Sri Lankan crisis, said Secretary of State Hillary Clinton has had consultations with her Indian counterparts on several occasions during this period. “We had visits of Indian diplomats wherein we were able to confer closely with India,” he said.

After every co-chair meeting involving France, Britain, the United States and Japan, Boucher said India has always been informed about it. “We always inform India and confer with India. So we are very much involved with India on the Sri Lankan situation,” Boucher said.

மே 14 2009 : முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள் விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் மே 14 2009 உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

மே 15 2009 : இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளது அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங்

மே 15 2009 : படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன், மகள், மற்றும் இரு உறவினர்கள் இன்று (மே 15 2009) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார்.

மே 15 2009: புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் மே 15 2009 கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மே 16 2009: இன்று (மே 16 2009) காலை இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமான அரசியல் கட்சிகள் தோல்வியடைந்தன.

மே 16 2009: ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

மே 16 2009: ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள்இ இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மே 17 2009: வெள்ளைமுள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400*600 மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும்இ இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மே 17 2009: சூசை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி: ”ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை (மக்களை) அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை….. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது…. நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை.

நாங்கள் நேற்று முன்நாள் (மே 15 2009) இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்…. போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்…..

மே 17 2009: செல்வராஜா பத்மநாதன், சர்வதேச இணைப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்: “எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”

மே 17 2009: ”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

மே 17 2009: இராணுவம் இன்று (மே 17 2009) காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர். இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 17 2009: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கி இருக்கலாமெனவும் இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

மே 18 2009 திவயின : இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 2009: இன்று (மே 18 2009) காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 18 2009: புதினம் – இணையத் தளம் : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று  (மே 17 2009) ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று  (மே 18 2009) அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தனர்.

படுகாயமடைந்த பல ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகளும் பொதுமக்களும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ எனப்படும் பகுதியில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று (மே 18 2009) அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் – அதாவது இன்று  (மே 18 2009) காலை பா.நடேசன் சீ.புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

18 May 09 The Economic Times : The fighting with Prabhakaran and his men erupted at 4 am Monday (May 18 2009) and was over within 90 minutes, leaving the man who had terrorized the country for over a quarter century dead near a lagoon in Mullaitivu district. Karuna, who is also an MP and vice president of the ruling Sri Lanka Freedom Party (SLFP), confirmed that the upper portion of Prabhakaran’s head was blown off. By then, the military had already killed his son Charles Anthony as well as all his top associates.

மே 18 2009: புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

May 19 2009: South Asian Media Net: “The government stance is clear. Norway is no longer the facilitators. The LTTE wanted to surrender their arms a little too late,” Dr. Kohona said.

மே 19 2009 : புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி சூசையின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கரையமுள்ளி வாய்க்காலின் சதுப்பு நிலப்பகுதியில் இவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மே 20 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20) சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

Pirabakaran_V விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்  உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.

தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.

மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.

பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது  புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.

புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.

அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.

எப்படி முடியும் இந்த யுத்தம்!!! : த ஜெயபாலன்

Erik_Solheim & Pirabaharan_V”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்”  என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ரொய்டர் செய்தி ஸ்தாபனத்திற்குத் தெரிவித்து உள்ளார். சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்ற எல்ரிரிஈ இன் இறுதி வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது. எல்ரிரிஈ ஆயுதங்களை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க அனுமதிக்க மாட்டாது என்பதை இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 18 2009) அதிகாலை எல்ரிரிஈ வசம் உள்ள 250 சதுர மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்பிற்குள் இராணுவம் ஊடுருவ ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையின் யுத்தம் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. உத்தியோக பூர்வமான அறிக்கைகளே மிகுந்த குழப்பத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு அப்பால் இன்னும் பல ஊகங்களும் செய்திகளாகின்றன. எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் எங்கே என்பது பல்வேறு ஊகங்களுக்கும் வதந்திகளுக்குமான பேசுபொருளாகி உள்ளது.
நேற்று (மே 17 2009) மதியம் குறிப்பிடப்படாத ஒரு பகுதியில் இருந்து எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இச்செவ்வி அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் தொலைக்காட்சியிலும் பிரித்தானிய செய்தி நிறுவனமான சனல் 4 இலும் காண்பிக்கப்பட்டது. அதில் எல்ரிரிஈ இன் தலைவர் வே பிரபாகரன் இன்னமும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் ஆயுதங்களைக் கீழே போடத் தாயாராக இருப்பதாகவும் ஆனால் சரணடையப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என இச்செவ்வி வெளியானதன் பிற்பாடு நேற்று (மே 17 2009) மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். நேற்று தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்:
”எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதான செயன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளது. முல்லைத்தீவுப் பகுதியில் எங்களிடம் இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் உடன்பட்டு உள்ளோம். ஒவ்வொரு மணித்தியாலமும் நூறு பேர்வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்கள் பொதுமக்கள்.

யுத்த நிறுத்தத்திற்கு பிரபாகரன் உடன்பட்டு உள்ளார். நான் அவருடன் நான்கு மணிநேரம் உரையாடினேன். அதில் நாங்கள் அதற்கு உடன்பட்டோம். நாங்கள் இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒருவரும் பதில் தரவில்லை. யுத்தமும் நிறுத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னமும் இந்த யுத்தப் பகுதியிலேயே இருக்கின்றார். சுற்றி வளைக்கப்பட்ட இந்தப் பகுதியில் இருக்கும் போதே நான் அவருடன் கதைத்தேன். நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடவே உடன்பட்டோம். சரணடையவல்ல.

நாங்கள் பொதுமக்களை ஒரு போதும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பொது மக்கள் எங்களுடைய உறவுகள் அல்லது எங்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தை நம்பவில்லை. அதனால் அவர்கள் எங்களுடனேயே இருந்தனர். அவர்கள் முகாம்களுக்கு செல்ல விரும்பவில்லை. இந்த முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெறுகிறது. பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகிறது. அந்த மக்கள் இலங்கை இராணுவத்திடம் செல்ல விரும்பவில்லை என்பதே நிச்சயமானது. நாங்கள் ஒரு போதும் மக்களைச் சுடவில்லை. சில சமயங்களில் இருபகுதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயப்பட்டு இருக்கலாம். நாங்கள் ஏன் எங்களது மக்களைக் கொல்ல வேண்டும்.”

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்னதாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நேற்று (மே 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோளில் ”நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை.” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் இந்தியத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது உறுதியானதும் மே 16 2009ல் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் ”எதுவும் செய்யத் தயார்” எனத் தெரிவித்து இருந்தார். அது ஆயுதங்களை ஒப்படைப்பது என்பதை மிகத் தெளிவாக நேற்று (மே 17 2009) புலிகள் அறிவித்து உள்ளனர். ”இந்த மோதல் ஒரு கசப்பான முடிவுக்கு வந்துள்ளது” என்று இந்த யுத்தத்தில் தங்கள் தோல்வியை எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்தார். ‘நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்க முடிவு செய்துள்ளோம். உயிரிந்தவர்களுக்காக மட்டும் நாங்கள் வேதனை அடைகின்றோம். இதற்கு மேல் எங்களால் நிற்க முடியவில்லை.’ என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் சுற்றி வளைக்கப்பட்ட சிறு நிலப்பரப்பொன்றினுள் புலிகள் உள்ளனர். அவர்களின் தலைமை அங்குள்ளனரா அல்லது வெளியேறி விட்டனரா என்பது இன்னமும் விடைகாணப்படாத வினாவாகவே உள்ளது.

மேலும் பெரும் தொகையான காயப்பட்டோர் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருக்கலாம் எனவும் அவர்கள் மிகக் கடினமான ஒரு உயிர்ப் போராட்டத்தில் உள்ளதாகவும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 72 மணிநேரத்தில் 70 000 பேர்வரை அப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெளியேறியவர்கள், காயப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் என வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பகுதிகளுக்கு அரசு மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்காமல் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கி வருகின்றது.

ஏற்கனவே வெளியேறிய 200 000 வரையான மக்கள் 20க்கும் உட்பட்ட முகாம்களில் நெருக்கடியில் உள்ள நிலையில் மேலும் 70 000 வரையானோர் அம்முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இது முகாம்களில் மிகுந்த நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்காததனால் இலங்கை இராணுவத்திடம் சரணடைய மறுக்கும் புலிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளுவார்கள் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அண்மைய நாட்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேதனையுடன் கழிகின்றது. இவ்வாறான ஒரு கசப்பான மிக வேதனையான சூழலுக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது.

தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகளின் தான்தோண்றித் தனமான முடிவுகளுக்கும் குறுகிய அரசியல் லாபங்களுக்கும் மிகப் பாரிய விலையை இலங்கைச் சமூகம் கொடுத்து உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனிதப் பேரவலம் சர்வதேசத்தையும் தொட்டுள்ளது. மறுமுனையில் இந்த யுத்தத்தில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை அரசு வெற்றிகரமாக மூடி மறைத்து உள்ளது. இந்த யுத்தம் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்திய ரணங்கள் அவ்வளவு இலகுவில் மாறிவிடாது.

இந்த கால்நூற்றாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெற்கில் கொண்டாடப்படுவது குறைநிலையானது. எல்ரிரிஈ மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதனாலேயே அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பினை வழங்க அரசு தவறும்பட்சத்தில் புலிகள் மீளவும் தங்களைக் கட்டமைத்து தாக்குதல்களை நடத்தக் கூடிய வலுவுடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பல நூற்றுக்கணக்கான புலிகள் ஏற்கனவே யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர்களால் ஒரு மரபுரீதியான இராணுவமாக இயங்க முடியாமலிருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் ஒரு இராணுவ முகாமை தாக்கி அழித்துவிட்டுச் செல்லும் பலம் அவர்களிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மேலும் அவர்களுடைய சர்வதேச வலைப்பின்னலில் எவ்வித குழப்பமும் இல்லை. இந்நிலையில் அவர்களையும் உள்ளகப்படுத்திய ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு செல்வதன் மூலம் நிரந்தரமான ஒரு சமாதானத்தை நோக்கி இலங்கையை நகர்த்த முடியும்.

இன்று மே 17 சந்திப்பு : வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். : த ஜெயபாலன்

IDP_Campsமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ( வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன் )

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Wanni IDPs : Their needs & Future

Meeting & Discussion

 17th of May 2009, Sunday, 4:30pm
 
Quakers Meeting House,
Bush Road,
Wanstead,
London, E11 3AU.

Futrher Information :

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
 
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

”தலைவர் வே பிரபாகரன் பொட்டம்மான் உள்ளே” சூசையின் மனைவி – ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” அமெரிக்க அதிபர் – ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” எஸ் பத்மநாதன் எல்ரிரிஈ

Obama_President_of_AmericaSelvarasa_Pathmanathan_LTTE

”I urge the Tamil Tigers to lay down their arms.” US President. ”we are ready to anything” S. Pathmanathan, LTTE.

”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று (மே 15 2009) கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி வழங்கிய தகவல்களின் படி எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுப் பிரிவுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் இன்னமும் அங்கேயே இருப்பதாகத் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அமெரிக்க அதிபருக்கு அளித்துள்ள பதிலின்படி எல்ரிரிஈ தங்களால் பணயம் வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எல்ரிரிஈ தங்கள் ஆயுதக் கிடங்குகளை வெடிக்க வைப்பதாகவும் அவர்கள் பெரும் கூட்டுத் தற்கொலைக்குத் தாக்குதலுக்கு தயாராகலாம் எனவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தெpரிவத்து உள்ளார். இன்று வெடிமருந்து நிரப்பிய பஸ் வண்டி ஒன்றை புலிகள் 58வது படையணியை நோக்கி ஓட்டி வந்ததாகவும் அது இலக்கை அடைய முன்னரே வெடித்ததாகவும் அவ் இராணுவ அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வாறான பல தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

Relted News & Articles:

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

._._._._._.

அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோள் :

”we have a humanitarian crisis that’s taking place in Sri Lanka, and I’ve been increasingly saddened by the desperate news in recent days. Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine. This has led to widespread suffering and the loss of hundreds if not thousands of lives.

Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe. Now is the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first.

So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

I’m also calling on the Sri Lankan government to take several steps to alleviate this humanitarian crisis. First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals, and the government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone.

Second, the government should give United Nations humanitarian team access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives.

Third, the government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need.

The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering. I don’t believe that we can delay. Now is the time for all of us to work together to avert further humanitarian suffering.

Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting, and grounded in respect for all of its citizens. More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve.”

The United United States President Barrack ObamaStates president Barrack Obama.

._._._._._.

எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் விடுத்த பதில்: (தமிழ்நெற்றில் இருந்து)

“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people, The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity,

LTTE is extremely mindful of the civilian hardships and is prepared to take all necessary measures that would immediately stop the current carnage. The president’s call for stopping the humanitarian crisis has been heard by the LTTE and is willing to heed to his call. The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity. Our people are now at the mercy of the international community and it has to take full responsibility for the future of our people. We call on the Sri Lankan Government too to take note of the President’s call and do everything possible to stop a blood bath unfolding.

The LTTE has relentlessly fought for the rights of our people for over three decades and will always do what is best for them. President Obama’s recent remarks gives us hope that at last he has taken an active interest in the plight of our people. A military solution will not end the current conflict. A lasting, respectful and equitable solution for our people can only be reached through political means. We have always shown our preparedness to enter a political process as long as all parties were willing to act faithfully to the process.

Encouraged by the hopeful words of President Obama the LTTE is again stating its categorical position to enter a political process facilitated by neutral international parties and find a meaningful solution to the ethnic crisis. It is the best option for all people living in the island of Sri Lanka. Both the Sri Lankan Government and us, we together have to find a solution and a way to resolve the crisis. An onslaught by the Government will only result in thousands more dying and will not pave a way for a dignified and respectful outcome. We are ready to cooperate and work towards peace as Mr Obama has insisted.”

S. Pathmanathan, Head of LTTE’s International Diplomatic Relations.

எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன்

Pirabakaran_VIndian_Election1.
எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே இன்று என்றால் மிகையல்ல. இந்தியத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்பி ஒரு துண்டுநிலத்தை தேர்தல் வரை தக்க வைத்துக் கொண்ட எல்ரிரிஈ க்கும் அதன் ஆதரவு சக்திகளுக்கும் பேரிடியாகி உள்ளது தமிழகத் தேர்தல் முடிவு. மேலும் கடந்த கால்நூற்றாண்டாக தமது கட்டுப்பாட்டில் ஏதாவது ஒரு பிரதேசத்தை வைத்திருந்த எல்ரிரிஈ இன்று தனது இறுதித் துண்டு நிலத்தையும் இழந்துகொண்டு உள்ளது.

எல்ரிரிஈ அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபனதும் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாபனதும் கடைசி வேண்டுகோள்களும் பலனளிக்காத நிலையில் இந்திய – தமிழக தேர்தல் முடிவுகளும் எல்ரிரிஈ இன் எதிர்பார்ப்பிற்கு மாறாக வந்துகொண்டு உள்ளது. மீண்டும் மத்தியில் காங்கிரசும் தமிழகத்திலும் திமுகவும் ஆட்சியமைக்கலாம் என்றே இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘மம்மியின் வரவுக்காக காத்திருந்த தம்பி’ இத்தேர்தலில் ‘மம்மி’யைத் தொலைத்துவிட்hர். இதனாலும் இலங்கை இராணுவம் ஈட்டியுள்ள இராணுவ வெற்றியினாலும் ‘தம்பி’யின் நிலை அவருடைய அரசியல் எதிர்காலம் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது.

திரையுலகத்தையும் வைக்கோ போன்ற சில அரசியல் தலைவர்களையும் நம்பி பணம் கட்டிய எல்ரிரிஈ தமிழ் நாட்டு மக்களிடம் நெற்றியடி வாங்கி உள்ளனர். தமிழ் நாட்டு மக்களுடைய தேர்தலை தமிழீழத்திற்கான வாக்கெடுப்பாக பிச்சாரம் பண்ணி இன்று தாமே தமக்கு மண்ணள்ளிப் போட்டு உள்ளனர். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை கோ பதினேழாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளால் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் துடைத்தெறியப்படும் என்று முழங்கிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் வைக்கோ தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பிரச்சினையை மட்டும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முற்பட்டவர்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள அரசியல் பாடமாகவே இது அமைந்து உள்ளது. அயல்நாட்டு அரசியலை வைத்துக் கொண்ட இன உணர்வுகளைத் தூண்டிய அரசியல் தலைவர்களுக்கு தமிழக மக்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்துள்ளனர்.

இத்தேர்தல் முடிவுகளை வைத்தக் கொண்டு தமிழக மக்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவிட்டார்கள் என்ற பிரச்சாரத்தை எல்ரிரிஈ ம் அதன் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சினைக்கு வாக்களிக்வில்லை என்பதே உண்மை. அவர்களுக்கு உள்ள அரசியல் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. திமுக – அதிமுக என்ற எல்லைக்கு அப்பால் அவர்களுக்கு பெரிதாக வேறு தெரிவுகள் இல்லை. அதனால் தவிர்க்க முடியாமல் இவ்விரு கட்சிகளில் ஒன்றே ஆட்சியமைக்கின்றன. இதற்குள் குறுக்கு வழியில் இலங்கையில் நடைபெறும் மனித அவலங்களைக் கொண்டு தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப முற்பட்டவர்களுக்கு இத்தேர்தல் மிகப்பெரும் ஏமாற்றமே.

2005ல் ஆட்சிக்கு வந்த மகிந்த அரசு புலிகளை அழிப்பதற்கான புரஜக்ற் பீக்கன் திட்டத்தை வடிவமைத்த போது தமிழகத் தேர்தல் இருப்பதை அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. புரஜக்ற் பீக்கனின் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 30 முடிவடையும் என்று திட்டமிடப்பட்ட போது அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, இது தனது தேர்தலைப் பாதிக்காது என்பதை சரியாகவே கணித்து உள்ளது என்றே சொல்லலாம். தமிழின உணர்வாளர்கள் வெத்து வேட்டுக்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 30 முடிவுக்கு வர வேண்டிய இலங்கை அரசின் புரஜக்ற் பீக்கன் 16 நாட்களே பிந்தியுள்ளது. இராணுவ ரீதியில் திட்டம் வகுத்து குறித்த கால எல்லைக்குள் அதனை நிறைவேற்றும் அளவிற்கு இலங்கை இராணுவம் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதையும், அதற்கு சர்வதேச ஆதரவு இருப்பதையும் எல்ரிரிஈ கணிக்கத் தவறிவிட்டுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னரேயே எல்ரிரிஈ அறிந்திருந்த போதும், அவர்களிடம் இருந்த அதீத நம்பிக்கையும் தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகளில் இருந்த நம்பிக்கையும் அவர்களை ஒரு மாயைக்குள் தள்ளி இருந்ததாகவே கருத முடிகிறது. ஆயுதங்களை வாங்குவது போல் சில தலைவர்களையும் மக்களையும் நினைத்தவுடன் வாங்கி விடலாம் என்ற எண்ணத்திற்கு தமிழகத் தேர்தல் சிறந்த பாடமாக அமைய உள்ளது.

Wanni_War2.
நேற்று (15 மே 2009) முதல் இன்று (16 மே 2009) மதியம் வரை 20000க்கும் அதிகமான மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர். இவர்களில் புலிகளின் கடற் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 11 பேரும் அடங்குகின்றனர். எல்ரிரிஈ சார்பு ஊடகங்கள் வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் அவலங்கைளக் கொண்டு தங்கள் பிரச்சாரங்களை முடக்கிவிட, வெளியேறும் மக்களின் நேரடியான காட்சிகள் இலங்கைத் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒலி பரப்பப்பட்டுக் கொண்டு உள்ளது. இவ்விரண்டு பிரச்சாரக் காட்சிகளும் அம்மக்கள் எவ்வளவு கொடுமையான சூழலுக்குள் வாழ நிர்ப்பத்திங்கப்பட்டு இருந்தார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றனன.

இன்று மதியம் வரை 12000 பேர்வரை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் 165000 பேர் உள்ளனர் என்று குறிப்பிட்ட போதும் 50,000 வரை அங்கு இருந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டு இருந்தது. தற்போது 20000 மக்கள் வெளியேறிய போதும் யுத்தப் பகுதியில் இன்னமும் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

50000 இராணுவம் ஒரு சில கிலோமீற்றரைச் சுத்தி உள்ள நிலையில் எல்ரிரிஈக்கு தொடர்பில் இருந்த சிறு கடற்பரப்பும் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போது 500 சதுர மீற்றர் பகுதிக்கு உள்ளேயே எல்ரிரிஈ குறுக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் தாக்குதல்கள் மந்தமடைந்து உள்ளதால் பாரிய உயிரிழப்புகள் இன்று ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜனவரி முதலான மூன்று மாத காலப்பகுதியில் 8000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் அதனைப் போன்று பல மடங்கானோர் காயப்பட்டு உள்ளதாகவும் யுஎன் மதிப்பிட்டு உள்ளது.

யுத்தப் பகுதியில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு உடனடியான சமைத்த உணவுகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது. பல நாட்கள் வாரத்திற்குப் பின் அவர்களுக்குக் கிடைக்கும் முதலாவது சமைத்த உணவு என உலக உணவுத் திட்டம் தெரிவிக்கிறது.

SL_Army_in_Final_Phase3.
தமிழ் மக்களுக்கு தங்கள் கெட்ட கனவிலும் தோண்றியிராத இந்தக் கொடுமையை இலங்கை இராணுவமும் எல்ரிரியும் சேர்ந்தே இழைத்துள்ளனர். வெளியேறி வருபவர்களின் வாக்குமூலங்கள் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களின் கண்களையும் குளமாக்கி உள்ளது. புலத்தில் உள்ளவர்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேறிய இவர்களை துரோகிகளாக முத்திரை குத்த முற்பட தெற்கில் உள்ள சிங்கள முஸ்லீம் சமூகங்கள் தங்களாலான உடனடி உதவிகளுடன் ஆபத்தில் கைகொடுக்க வந்துள்ளனர்.

தங்களது போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டதாக புலகாங்கிதம் அடையும் புலத்தில் உள்ள போராட்டக்காரர்கள் அந்தக் கவனம் அந்தப் போராட்டத்தால் அல்ல அது அந்த மக்கள் தங்கள் உயிரைவிட்டு பெற்ற கவனயீர்ப்பு என்பதை மறந்துவிடுகின்றனர். எல்ரிரிஈ யும் அதன் ஆதரவு சக்திகளும் மக்களின் உயிரைப் பிழிந்து தான் போராடி முடியும் என்பதை ஒரு போராட்ட தந்திரமாகவே மேற்கொண்டிருந்தனர். புலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கே சமைத்த உணவை வருவித்து வழங்கியவர்கள், வாரங்களாக பட்டினிச்சாவில் இருந்து வரும் மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதிலும் பார்க்க, அம்மக்களை இழிவுபடுத்துகின்ற முறையிலேயே செயற்பட்டனர். யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் நலனை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத புலத்து போராட்டங்கள் அர்த்தமற்றுப் போனதில் – பயனற்றுப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

இலங்கை முகாம்களுக்கு மே 5ம் 6ம் திகதிகளில் சென்று திரும்பிய எல்ரிரிஈ க்கு அனுதாபமான லிபிரல் டெமொகிரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிபிசி ரெடியோ 4 ற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி:

BBC Radio 4: A Group of MPs just returns from fact finding mission to Sri Lanka. We are joining one of them, Malcolm Bruce, the Liberal Democrat Chairs of International Affairs Select Committee. Good morning!

Malcolm Bruce, MP: Good morning!

BBC: What did you find?

Malcolm Bruce, MP: Horror stories in Britain about conditions in Sri Lanka camps housing hundreds of thousands of Tamil refugees are wrong. There may be shortages, but refugees I spoke to were happy to have escaped the fighting in the North.

BBC: You are just using the word, terrorists. It is a very loaded one. We are talking about the Tamil Tiger rebels here, Aren’t you?

Malcolm Bruce, MP: Well, I have to say these Tamil Tigers have assassinated many many Tamils including in and out of governments and the opposition parties and we had very credible evidence many of the people we met in camps to say they were threatened and shot at by their own side and told them if they try to leave the conflict zone their lives be at risk and in those circumstances, I think there is a clear indication that this is a divided community and the unless you end terrorism you can’t actually build the united Sri Lanka.

http://www.nowpublic.com/world/tamil-tigers-are-terrorists-malcolm-bruce-mp-2

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் அர்த்தமற்றுப் போவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வன்னி முகாம்களில் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் உண்டு. இலங்கை அரச படைகள் பல்வேறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசபடைகள் காரணமாக இருந்துள்ளன. அதேசமயம் இவை அனைத்திற்கும் எல்ரிரியும் காரணமாக இருந்த உள்ளது. ஆனால் புலத்தப் போராட்டங்கள் உண்மையான தகவல்களின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் சார்புநிலையுடன் செயற்பட்டதால் அவை வெறும் சலசலப்பையே ஏற்படுத்தின.

வன்னி மக்கள் எதிர்கொண்ட அவலத்திற்கு இலங்கை அரசும் எல்ரிரியும் சம பொறுப்புடையவர்கள். எல்ரிரிஈ பயங்கரவாதிகள் என்றும் இலங்கை அரசு சட்டரீதியானதும் என்று பார்த்தால் இலங்கை அரசு இந்த அவலத்திற்கு கூடுதல் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பக்கத்தில் நின்று பார்த்தால் வன்னி மக்களின் இந்த அவலத்திற்கு எல்ரிரிஈ யே கூடுதலான பொறுப்புடையவர்கள். தங்களை நம்பி வந்த வன்னி மக்களின் முதுகில் எல்ரிரிஈ குத்தியுள்ளது.

இலங்கை அரசு எல்ரிரிஈ இன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் மட்டும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ததுவிட முடியாது. இராணுவ ரிதியாக நிலப்பரப்பை வெற்றி கொள்வதும் கட்டுப்படுத்துவதும் ஒப்பீட்டளவில் இலகுவானது. ஆனால் அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் இதயங்களை வெல்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

எவ்வாறாக எல்ரிரிஈ யை விபரித்தாலும் அவர்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தது இலங்கை அரசின் இனவாதப் போக்கு. இனம் காணப்பட்டு உள்ள அப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்காமல் இலங்கை அரசு இலங்கையில் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது. எல்ரிரிஈ அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதானம் வந்துவிடும் என்பது அர்த்தமற்ற வாதம். இன்று மக்களுக்குள்ள உடனடிப் பிரச்சினை உயிரைப் பாதுகாப்பது. அதனால் அவர்கள் ஏனைய பிரச்சினைகள் இரண்டாம்தரமாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஏனைய பிரச்சினைகள் மீண்டும் முன்னிலைக்கு வருவது தவிர்க்க முடியாதது.

இதுவரை இலங்கை அரசு தனது மனிதத்துவத்திற்கு எதிரான அத்தனை செயற்பாடுகளுக்கும் எல்ரிரிஈ யை முன்னிறுத்தி அவற்றில் இருந்து தப்பிக் கொண்டது. இன்று முழு இலங்கையும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை அரசு பறைசாற்றுவதால் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு அரசு முழுமையான பொறுப்புடையது. எல்ரிரிஈ அங்கும் இங்குமாக மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்தக் கூடியதாக இருந்தாலும் அரசு சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய கடமைப்பாடு உடையது.

இலங்கை அரசின் புரஜகற் பீக்கனின் மூன்றாவதும் இறுதியானதுமான கட்டம் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை தொடர உள்ளது. எல்ரிரிஈ யைக் களையெடுக்கும் இத்திட்டம் மிகவும் சிரமமானது. இதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அரசியல் ரிதியாக வென்றெடுக்காத வரை இதில் அரசு வெற்றிபெற முடியாது. அவ்வாறு செய்யாதபட்சத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இன ஒடுக்குமுறைக்கு உள்ளானால் அது தமிழ் மக்களை மீண்டும் எல்ரிரிஈ யை நோக்கித் தள்ளுவதாகவே அமையும். அவ்வாறான ஒடுக்குமுறை தொடருமானால் வன்னி முகாம்கள் எல்ரிரிஈ இன் விளைநிலங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்ரிரிஈ உடன் இராணுவ வெற்றியைக் கொண்டுள்ள அரசு எதிர்காலத்தில் மக்களை வென்றெடுக்க வேண்டிய கடுமையான சூழலை எதிர்கொள்ளும். இது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்தின் இனப்படுகாலையைத் தடுப்பதற்கான ஆலோசகர் பிரான்ஸிஸ் டெங் இன் கருத்து குறிப்பிடத்தக்கது.

”இந்தத் துருவ முரண்பாடு இன மத – அடையாளம் சார்ந்த ஆழமான பிளவைக் கொண்டது. இது வெல்பவர்கள் தோற்பவர்கள் என்பதில் முடிவுக்குவராது. இது இராணுவ வெற்றியுடன் மட்டும் முடிவுக்குவராது. சட்டப்படியான பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகாணாமல் நீண்ட காலத்தில் இராணுவ வெற்றிகளை தக்க வைக்க முடியாது.”

ஐநா செயலாளர் நாயகத்தின் இனப்படுகாலையைத் தடுப்பதற்கான ஆலோசகர் பிரான்ஸிஸ் டெங்

”This polarizing conflict is identity–related, with ethnicity and religion as deeply divisive factors. It will not end with winners and losers, and it cannot be ended solely through a military victory that may not be sustainable in the long run unless legitimate grievances are addressed.”

Francis Deng. _ Special Adviser of the Secretary-General on the Prevention of Genocide.

‘மம்மி’யின் வரவுக்காக காத்திருக்கும் ‘தம்பி’. : த ஜெயபாலன்

Pirabakaran VJeyalalitha_ADMK‘A defeated Prabhakaran, if left alive in India or elsewhere, would not be a threat, but could be a nuisance for both the countries….  It is in India’s interest that the LTTE as a terrorist organization is destroyed once and for all….. If the angry Tamils once again look up to India, there is no reason why we should not reciprocate provided a new leadership emerges in the Tamil community.”

‘தோற்கடிக்கப்பட்ட பிரபாகரன் இந்தியாவிலோ வேறு எங்காவதோ உயிருடன் இருந்தால் அது ஒரு ஆபத்தாக இருக்க முடியாது.ஆனால் இரு நாடுகளுக்கும் ஒரு தொந்தரவாக வேண்டுமானால் இருக்க முடியும்….. பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் ஒரேதடவையில் அழிக்கப்படுவது இந்தியாவின் நலன் சார்ந்தது….. கோபம் அடைந்த தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நோக்கினால் தமிழ் மக்களுக்குள் உருவாகும் புதிய தலைமைத்துவத்திற்கு சார்பில்லாமல் இருப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு காரணமும் இல்லை…..’

B. Raman, Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai.
http://www.southasiaanalysis.org/papers32/paper3160.html

இந்திய புலனாய்வுச் சமூகத்தில் ஒருவரான அல்லது அதனுடன் நெருக்கமான பி ராமனின் எழுத்துக்கள் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளது. இன்று இந்தியா பழிவாங்க விரும்பும் எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரனை உருவாக்கியதில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவை நோக்கிச் செல்வதாகவே இலங்கை – இந்திய புலனாய்வுத்துறை கருதுகிறது. அவர்களது கணிப்பின்படி வே பிரபாகரனின் பொற்கோயில் முள்ளிவாய்க்கால் என்று கணிக்கின்றனர். பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. ஆனால் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இருக்கலாம் – இல்லாமலும் இருக்கலாம் என்பதற்கான காரணங்களும் தகவல்களும் குறைவில்லாமல் உலாவருகின்றது.

இலங்கையின் ஒப்பரேசன் புளு ஸ்ரார் தான் புரஜக்ற் பீக்கன். இந்த இராணுவ நடவடிக்கை என்னவோ பயங்கரவாதத்தை அழிப்பதற்கு என்று சொல்லப்பட்டாலும் தமிழ் மக்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மனித அவலத்திற்கு முகம்கொடுத்து உள்ளனர். மீக மூர்க்கமான இரு இராணுவ அணிக்கிடையே சிக்குண்டுள்ள மக்கள் ஜனவரி முதல் மரண வாழ்வுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

இந்த யுத்தத்தில் எல்ரிரிஈ தான் பின்வாங்கிய பெருமளவிலான பகுதிகளில் இருந்தும் மக்களை தன்னுடன் சேர்த்தே பின்வாங்கியது. வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு பகுதியினரையும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானோரையும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களை முழுமையாகவும் எல்ரிரிஈ யினர் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பு கிட்டத்தட்ட 8 000 சதுர கி.மீ. அதன் மொத்த மக்கள் தொகை – 550 000 க்கும் சற்று அதிகமானது. அதில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் சனத்தொகை மட்டும் 300 000. இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதி முகாம்களை 200 000 மக்கள் வரை வந்தடைந்து உள்ளனர்.

இன்னமும் புலிகளின் 5 சதுர கி மீ பரப்பளவுக்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை பற்றி மிகவும் முரண்பாடான தகவல்கள் வெளியாகின்றன. இலங்கை அரசாங்கம் 20 000 பேரே அங்கு இருப்பதாக மதிப்பிடுகிறது. எல்ரிரிஈ தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னமும் 165 000 மக்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது தனித் தனியாக கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத்தொகையிலும் அதிகமாகும். இலங்கை அரசு மற்றும் எல்ரிரிஈ தவர்ந்த அமைப்புகளின் தகவலின்படி தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 5 சதுர கி மீ பரப்பளவிற்கும் குறைவான பிரதேசத்திற்குள் 50 000 முதல் 100 000 பேர்வரை இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர்.

கடந்த நான்கு மாத காலமாக அரைவயிறு கால்வயிறு உணவுடன் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மக்கள் செல் தாக்குதல், மோட்டார் தாக்குதல், வான் தாக்குதல் என்று உயிருக்காய் துடித்த மக்கள் இன்னமும் துடிக்கவும் தவிக்கவும் விடப்பட்டு உள்ளனர். பட்டினி உளவியல் அவஸ்தைகள் நோய் என்று பல்வேறு காரணங்களால் அவர்களது உடல் உள்ளுறுப்புக்கள் மீளமுடியாத பழுதடைவுக்குச் சென்றுள்ளது. அந்த நிலையில் இருக்கும் அம்மக்களுக்கு ஒவ்வொரு நாள் கடப்பதும் அவர்களது உயிர்வாழ்வை மிகவும் கடினமாக்கும். அத்துடன் முன்னேறும் அரசபடைகளின் மழைபோல் பொழியும் தாக்குதல்கள் நூற்றுக் கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொள்கிறது.

‘தொடர்ந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்கும். சிறிது நேரத்தில் அந்தப் பிஞ்சினது சத்தம் அடங்கிவிடும். உயிரும் அடங்கிவிடும்’ என்று இருவாரங்களுக்கு முன் இந்தியவிற்கு தப்பிச்சென்ற ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவுகளுக்கு தெரிவித்து உள்ளனர். தாங்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சிப்பதாகவும் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் முயற்சிப்பதாகக் கூறுகின்றனர்.  ‘தப்பிச்செல்லும் போது அல்லது தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகளிடம் காட்டிக் கொடுத்து புலிகளுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களும் தப்பிச் செல்வார்கள். இதுதான் அங்குள்ள நிலை.’ என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் 15வது பாராளுமன்றத் தேர்தல் மே 13ல் முடிவடைகிறது. அன்று தான் தமிழ்நாட்டில் வாக்களிப்பு இடம்பெற இருக்கிறது. மே 16ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவை நம்பிய எல்ரிரிஈ யும் அதன் அதரவு அணியும் தற்போது ஜெயலலிதாவையும் பிஜேபியையும் நம்பி தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் யுத்த முனையில் பணயம் வைத்து உள்ளனர்.

இறுதிக் கட்டத்தில் தங்களுக்கொரு அதிஸ்டம் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் எல்ரிரிஈ தலைமை மே 16 தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் மத்தியிலும் தமிழகத்திலும் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் தங்களை உயிர்ப்பிக்கும் என்று எல்ரிரிஈ வலுவான நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தியாவில் குறைந்தது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில் அது இலங்கையின் இராணுவ நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது.

இராணுவக் களநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எல்ரிரிஈ இல்லாத நிலையில் எல்ரிரிஈ இன் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவில் மாநிலத்திலும் மத்தியிலும் கூட ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உள்ளுரில் உள்ள பிரச்சினைகளே தலைக்கு மேல் உள்ள போது இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறும் என்றும் உறுதியாகக் குறிப்பிட முடியாது. மேலும்  இலங்கை அரசுக்கு இராணுவ வெற்றி கைக்கெட்டும் தருவாயில் உள்ள போது இலங்கையைப் பகைத்துக் கொண்டு அதனைத் தட்டிப் பறிக்கும் அரசியல் பலம் ஜெயலலிதாவிற்கோ அல்லது இந்திய மத்திய அரசிற்கோ இருக்குமா என்பதும் கேள்விக்குரியது.

ஆனால் மே 13 தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு அது இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமையலாம் என்பதால் இலங்கை அரசு எஞ்சியுள்ள இறுதி நிலப்பரப்பையும் அதற்கு முன்னரே கைப்பற்றிவிடும் இராணுவ நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் மக்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத மே 13 தேர்தலும் மே 16 தேர்தல் முடிவுகள் வெளியாகும் காலமும் அம்மக்களை மூர்க்கத்தனமான இராணுவ நடவடிக்கைக்கும் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்பிற்கும் உட்படுத்தப் போகின்றது.

பரந்து வாழ்ந்த மக்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு மிகவும் உக்கிரமான யுத்தம் ஒன்று நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு தாக்குதலும் பதில் தாக்குதலும் மக்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்து கொண்டே இலங்கை இராணுவமும் எல்ரிரிஈ யும் இந்த யுத்தத்தை நடத்துகின்றன. தமிழ் மக்களைக் காக்க ஆயுதம் தரித்ததாகக் கூறும் புலிகள் தங்களது தலைமையைக் காக்க அப்பாவித் தமிழ் மக்களின் குழுந்தைகளையும் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாக முன்னரங்க நிலைக்கு அனுப்பி பலிகொடுப்பதுமல்லாமல் அந்த மக்களின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு தாக்குதலை நடத்துகின்றனர்.

மறுமுனையில் தங்களது ஒவ்வொரு செல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் பல பத்து அப்பாவி மக்களைக் கொல்லும் என்பதை மிக நன்றாகத் தெரிந்திருந்தும் இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை அரசு நடாத்துகின்ற இந்த யுத்தம் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று கூறுவது ஒருபோதும் மிகையாகாது. எல்ரிரிஈ தமிழ் மக்களைப் பணயமாக வைத்தே தாக்குதலை நடத்துகின்றது என்பதை சர்வதேசமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களில் விட்டில் பூச்சிகள் போன்று தமிழ் உயிர்கள் கொல்லப்படுகின்றன.

சிங்கள பேரினவாத அரசு நாடு சுதந்திரமடைந்தது முதல் இனஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. ஆனால் இந்த இனஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட வேண்டிய மதிவாத தமிழ் தலைமைகள் தங்கள் பாராளுமன்ற அரசியலைக் காப்பாற்றிக்கொள்ளவும் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் ஆர்வம் காட்டினரே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சக்திகளைப் பலப்படுத்த தவறியிருந்தனர். இந்த மிதவாதத் தலைமைகளை துரோகிகள் என்று சுட்டுவீழ்த்திய புலிகள் மாற்றுத் தலைமைகள் எதுவும் இல்லாதபடி அனைவரையும் அழித்தொழித்து ஏகபிரதிநிதியாகி தங்கள் முன்னையவர்கள் விட்ட அதே தவறுகளை ஆனால் அவர்களிலும் மோசமான இழப்புகளுடன் விட்டனர்.

இலங்கையின் தலை யாழ்பாணம். மூளை வடமராட்சி. கணக்கில் புலி. என்றெல்லாம் சுயபாட்டுப் பாடினாலும் அரசியல் கணிதத்தில் யாழ்ப்பாணத்துத் தலைமைகள் வென்றெடுத்தது இழப்புகளும் அழிவுகளும் மட்டும்தான். அர்களிடம் அன்றும் இன்றும் இருக்கும் ஒரே திறமை இழப்புகளை அரசியலாக்கி தங்கள் அரசியல் தலைமையைத் தக்க வைப்பது. அதற்கு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுடைய அரசியல் தவறுகளைப் பட்டியலிட்டால் – வரலாற்றுத் தவறுகள் என்று புத்தகமே அடிக்கலாம் என இன்று புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்.

புலிகள் போட்ட கணக்கின் படி 2005 தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். ‘மூன்றாம் தரப்பு அவசியமில்லை நாங்கள் இருவரும் பேசுவோம்’ என்று மகிந்த ராஜபக்ச கணக்குப் போட்டு ஒரு அழைப்பை விடுத்தார். ஆனால் புலிகள் போட்ட கணக்கு மகிந்த ராஜபக்ச யுத்தத்தைத் தொடங்குவார். இனவாதக் கட்சிகளுடன் உள்ள அவருக்கு சர்வதேச ஆதரவு இருக்காது. ஆகையால் வே பிரபாகரன் ஈஸியாக கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். இறுதியில் பொல்லுக் கொடுத்து அடிவாங்கியதாகி விட்டது நிலைமை.

இப்போது 50 000 – 100 000 மக்களை முள்ளிவாய்க்காலில் பணயம் வைத்துவிட்டும் இந்தத் தவறுகள் இன்னும் தொடர்கிறது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பது போய் தற்போது ஜெயலலிதாவிற்கு திடிரெனத் தாகம் எடுத்துள்ளது. புலத்து விசலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அம்மாவுக்கு ஜெ! என்று வாழத்துச் சொல்வதிலும் வாழ்த்துப் பா பாடுவதிலும் படுபிசியாகி விட்டார்கள். அன்னை இந்திரா தொடக்கிய தமிழீழப் போராட்டம் அம்மா ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக தமிழீழப் போராட்டம் நயன்தாராவிடம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கும் வாழ்த்துச் சொல்ல வாழ்த்துப் பா பாட புலத்தில் ஒரு பெரும் கூட்டம் இருக்கின்றது.

இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எப்போதும் பேரினவாதக் கருத்துக்களையே வெளியிட்டு வருபவர். அவர் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்’ என்ற கருத்து அது பேரினவாதச் சிந்தனையுடன் வெளியிடப்பட்டு இருந்தாலும் உண்மையானது. அந்தக் கோமாளித் தனத்திற்காக 50 000 – 100 000 மக்களை பணயம் வைத்துள்ள புலத்து தமிழர்களை என்னவென்பது.

ஜெயலலிதா பாஜக என்று இந்திய மத்திய மாநில அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்திய அரச இயந்திரம் தனது நலனில் மிகத் தெளிவாக இருக்கின்றது. ஆனால் அதனைக் கையாளக் கூடிய அரசியல் முதிர்ச்சி தமிழ் தலைமைகளிடம் துளியும் இருக்கவில்லை. அவர்கள் தங்களதும் தாங்கள் சார்ந்த அமைப்புகளினதும் குறுகியகால அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களை பணயமாக வைக்கின்றனர். இதன் உச்சத்தை புலிகள் முள்ளிவாய்க்காலில் செய்கின்றனர்.

ஆனால்… இது இத்துடன் முடியப் போவதில்லை என்பதை பி ராமன் மீண்டும் ஞாபகப்படுத்தி உள்ளார்.
‘தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நோக்கினால் தமிழ் மக்களுக்குள் உருவாகும் புதிய தலைமைத்துவத்திற்கு சார்பில்லாமல் இருப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு காரணமும் இல்லை…..’

இந்தியா இந்த விடுகதையை அவிழ்பவர்களைத் தான் தேடிக்கொண்டுள்ளது. இலங்கை – இந்திhய – தமிழர்கள் இந்த முத்தரப்பு இழுபறி இன்னமும் தொடரும். இலங்கையும் – தமிழர்களும் நேரடியாக தங்கள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளாதவரை. ஆனால் துரதிஸ்ட்ட வசமாக அந்த அரசியல் முதிர்ச்சி இலங்கை அரசுக்கும் தமிழ் தலைமைக்கும் கைவரப் பெறவில்லை.

‘அந்தக் யுத்தத்தில் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். பல நாட்கள் பட்டினி இருந்தோம். அங்கிருந்து தப்பித்துக் கொள்ள பல மைல்கள் நடக்க வேண்டி இருந்து. அப்போது இன்னொருவரும் வந்து என்னுடன் சேர்ந்துகொண்டார். அப்பகுதியில் இருந்து இருவரும் தப்பிக்கும் போது நீரின்றி உணவின்றி அவதிப்பட்டோம். நித்திரையின்றி நடந்தோம். கூட வந்த நண்பர் வழியில் பட்டினியால் இறந்துவிட்டார். படுத்து உறங்கினால் என்னை அறியாமலே உயிர் போய்விடும் என்ற பயத்தில் வழித்திருந்தேன். பசிக்கொடுமை தாங்க முடியவில்லை. இறந்த நண்பனின் உடலை சாப்பிடுவதைத் தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. ஆனாலும் உள்ளுணர்வு தடுத்தது. என்னால் என் நண்பனை புசிக்க முடியவில்லை. அதனை நான் செய்யவில்லை.’
பிரபல ஆபிரிக்க இசைக் கலைஞர் (பெயர் ஞாபகத்தில் இல்லை.)

இக்கொடுமையை நோக்கி முள்ளிவாய்க்கால் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இனவாத இலங்கை அரசினது யுத்தத்திற்கும் புலிகளது அரசியல் வங்குரோத்துக்கும் இந்தியத் தேர்தல் முடிவை நோக்கியும் முள்ளிவாய்க்கால் மக்களது உயிர்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கொள்கைகள், அபிலாசைகள், முரண்பாடுகள் எமது உறவுகளைக் கொல்லவும் கொல்லப்படவும் காரணமாகி உள்ளது. மக்கள் மரணத்தின் விளிம்பில் உள்ள போதிலும் விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. அத்தனையும் அந்த மக்களின் பெயரால் நடத்தப்படுகின்றது.

‘இலங்கை அரசு இனப்படுகொலை செய்கிறது. இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும்.’ என்று ஒரு பகுதியும் ‘புலிகள் மக்களைப் பணயம் வைத்துள்ளனர். புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும்.’ என்று மறு பகுதியினரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் விவாதம் என்று கடந்த பல வாரங்களாக ஈடுபட்டு உள்ளனர். வழமை போல் மக்களை கொடுமையில் இருந்து விடுவிக்க இயலவில்லை. இது இப்படித்தான் இருக்கும். தவிர்க்க முடியாது என்று விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் தொடர்கிறது.

மக்களது மரணங்கள் எண்ணப்படுகிறது. பெருக்கப்படுகிறது. வகுக்கப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. விளக்கப்படுகிறது. ஆனால் அதனை நிறுத்தவதற்கான வழிகள் பற்றி ஆராய கொள்கைகள், அபிலாசைகள், முரண்பாடுகள் இன்னமும் விடவில்லை. எஞ்சியிருக்கும் மக்களும் மரணத்தை சந்திக்கும் வரை இவர்கள் விவாதிப்பார்கள் விளக்குவார்கள் போராடுவார்கள் அந்த மக்களின் பெயரில். அதற்குப் பின் நேரம் கிடைக்கும் போது அவர்களின் ஆவிகள் பற்றியும் விவாதிப்பார்கள். விளக்குவார்கள். போராடுவார்கள்.

பாவம் மக்கள்.!!!

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இன்று அனுப்பப்படுகின்றன. – ஜெயபாலன் & புன்னியாமீன்

02.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரிநிலையங்களினுள்ளே இயங்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கான மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் கல்வியதிகாரி திரு. த. மேகநாதன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

தேசம்நெற் ஆசிரியர் குழுவும், சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் திட்டத்தின் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்தமை அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கு 1100 வீதம் மாதிரிவினாத்தாள்கள் 10உம், புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடு தொகுதி 01 நூலும் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டன. 

இந்த மாதிரிவினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பரீட்சையாக நடத்தப்படுகின்றன. இந்த அனுப்பப்படும் பொதிகளில் பின்வரும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டி புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 11 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 12 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 13 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 14 1100 பிரதிகள்
மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02 எனும் நூலின் 1100 பிரதிகள்

மேற்படி மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி., பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி., காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 16 மாதிரிவினாத்தாள்களையும் (விசேட மாதிரிவினாப்பத்திரம் இலக்கம் 01 – 16 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், தரம் 06, 07, 08, 09, 10, 11 மாணவர்களுக்காக வேண்டி வி.ச. சுப்பரமணியம், ஞானசுந்தரம், பா. கிருபாகரன் ஆகிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களின் ஒரு தொகுதியும் குவி அச்சக வெளியீடுகளின் ஒரு தொகுதி செயல் நூல்களும் இன்று அனுப்பப்பட்டுள்ளன.

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

Wanni_IDPs_Barbed_Wire_Fenceநரகலோகத்திற்கு செல்பவர்களுக்கு யமனின் ஆட்சியில் என்னென்ன கொடிய தண்டனைகள் வழங்கப்படும் என்ற கற்பனைக் கதைகள் பல பள்ளியில் படித்ததுண்டு. ஆனால் அந்தக் கதையிலும் கெட்டவர்களுக்குத்தான் அந்தத் தண்டனை என்றே கூறப்பட்டது. ஆனால் இவ்வாண்டு ஜனவரி முதல் முல்லைத்தீவு நரகலோகம் ஆக்கப்பட்டுவிட்டது. 250 000 வரையான அப்பாவித் தமிழ் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். கற்பனைக் கதையிலேயே நரகலோகத்தில் ஒரு யமனின் ஆட்சி தான் இருக்கும். ஆனால் வன்னி மக்களோ இரு யமன்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் நிலை:

முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இலங்கைப் படைகள் நெருங்க மோதல்கள் மேலும் தீவிரமடைந்து உள்ளது. 5 சதுர கி மீ பரப்பளவேயுள்ள இப்பிரதேசத்தில் 40 செல்சியஸ் வரை அனல் வீசும் வெப்பத்தில் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழுகின்ற கொடுமை நினைத்துப் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.

அதற்குள் கர்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். கைக் குழந்தைகள் பாலின்றித் தவிக்கின்றன. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்காவது ஏதாவது கொடுக்க முடியாதா, அவர்களது பசியாற்ற முடியாதா என்று அந்த அம்மாக்களும் அப்பாக்களும் தவிக்கின்ற தவிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. குடிப்பதற்கே தண்ணீரில்லாத போது குளிப்பது எப்படி? ஏப்ரல் 20 – 21ல் 100 000ற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய போது அவர்களது அவலங்களை விபரிக்க வார்த்தைகள் இல்லையென சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த மக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு அனுப்ப்படுகின்ற போது பஸ்வண்டிகளிலேயே உயிர் பிரிந்துள்ளனர்.

இப்போது இன்னும் மூன்று வாரங்கள் கடந்துவிட்டது. இன்னமும் புலிகளின் அரண்களாகப் பாவிக்கப்படும் அந்த மக்கள் தங்கள் உயிரைத் தாங்கி வருவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த மக்கள் தவிட்டை தண்ணீரில் கரைத்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இலங்கை அரசு உலக உணவுத்திட்டம் மூலம் அனுப்புகின்ற உணவு அவர்களுடைய தேவைக்கு மிகமிகக் குறைவானது. அதனையும் புலிகள் மக்களுக்கு விற்பனை செய்கின்ற நிலைதான் அங்கு உள்ளது. அந்த உச்சவிலைக்கு தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அன்று வெளியேறியவர்கள் தம் இயலாமையை விபரித்து இருந்தனர்.

வன்னி முகாம்கள் பற்றிய வாக்கு மூலங்கள்:

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமை இவ்வாறு மரணப் போராட்டமாக இருந்தால், அங்கிருந்து தப்பி வருகின்ற மக்களுக்கு இலங்கை அரசு அடிப்படைத் தேவைகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. Hurricane Katrina -ஹரிக்கேன் கத்ரீனா அமெரிக்காவின் நியூஓர்லினைத் தாக்கிய போது அங்கு நிவாரணப் பணிகள் எதனையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிபிசி செய்தியாளர் மக் பிரைட், மூன்றாம் உலக நாடான இலங்கை சுனாமி நடந்த 48 மணி நேரத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைய ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படியான எதிர்பாராத சுனாமி அவலத்தின் போதே மக்களை உதவிகள் சென்றடைந்தன. ஆனால் இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட மனித வெளியேற்றம் ஒன்று இடம்பெற்ற போது அரசு தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.

இது தொடர்பாக வன்னி முகாம்களுடன் தொடர்புடையவர்கள் தேசம்நெற்றுக்கு அளித்த வாக்குமூலங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. தகவல்களை வெளியிட்டவர்களது விபரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

அரசு தயார் நிலையில் இருக்கத் தவறிவிட்டது. – வைத்தியர்:

”இந்த யுத்தத்தின் போது மக்கள் யாரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை என்பது அரசுக்கு நன்கு தெரியும். அப்படி என்றால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எல்லாம் எங்கு போனார்கள்? அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான் இருந்திருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா? அவ்வளவு மக்களும் வெளியேறி வந்தால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கவனிக்க வேண்டியது அரசினுடைய பொறுப்பு. என்ஜிஓக்களை முன்னரேயே அங்கு அனுமதித்து தயார்நிலையில் அல்லவா வைத்திருந்திருக்க வேண்டும்.

மக்கள் வெளியேறி வந்தபோது அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு என்பனவற்றுக்கு மணித்தியாலக் கணக்கில் தவிக்கவிடப்பட்டனர். உடனடி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கான போக்குவரத்துகள் ஒழுங்கற்று இருந்தது. பல மணிநேரம் மக்கள் பஸ் வண்டிகளிலேயே விடப்பட்டனர். சில சமயங்களில் அம்மக்கள் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர்.

ஏற்கனவே வந்தவர்கள் ஓரளவு அங்கு பரவாயில்லாமல் உள்ளனர். ஆனால் புதிதாக முகாம்களில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உடல் பலவீனப்பட்டு இறந்துள்ளனர். இவர்களது உடல்கள் கொழுத்தும் வெய்யிலில் பல மணிநேரமும் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே விடப்படுகின்றது. அதனால் உடல் பழுதடைந்து துர்நாற்றம், தொற்று கிருமிகள் என பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

புலிகளும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். தங்களது பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடாமல் இன்று தமிழ் மக்களை பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். எல்லா இடங்களையும் கைவிட்ட அவர்கள் இந்த துண்டு நிலத்தில் என்னத்தை சாதிப்பதற்காக மக்களை இப்படிப் பலிகொடுக்கின்றனர். நாம் இவ்வளவு இழந்து இவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து கண்டது தான் என்ன?”

மக்கள் விலங்குகளாக நடத்தப்படுகிறார்கள். – வங்கி அலுவலர்:

”நான் மக்களுடைய வங்கித் தேவைகளுக்காக இந்த முகாம்களில் பணியாற்றினேன். அங்கு மக்கள் படும் அவலங்கள் நெஞ்சைப் பிழிகின்றது. வெப்பநிலை காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சில சமயம் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றது. அதனை உண்டாவது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனையும் நெருக்குவாரப்பட்டு மிதிபட்டு வாங்க வேண்டி உள்ளது. சிலர் அதனை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். நான் சந்தித்த ஒருவர் இரு நாட்களாக தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

நான் சென்ற முகாம் மிகவும் பரந்த பிரதேசம் அதனைச் சுற்றிவர மூன்று மணிநேரம் எடுக்கும். காடுகள் அழிக்கப்பட்டு வெட்ட வெளியிலே கொளுத்தும் வெய்யிலைத் தடுக்க ஒரு ரென்ற் கூட அவர்களுக்கு இல்லை. கிழிந்து கந்தலான ஆடைகளுடன் தான் வந்துள்ளனர். ”

பாலியல் வல்லூறவுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளது. – உதவிகள் மேற்கொள்ளும் அரச அலுவலர்:

”நான் அடிக்கடி முகாம்களுக்கு சென்று வருவேன். ஒரளவு தொடர்புகளை ஏற்படுத்தி சில உதவிகளையும் வழங்கி வருகிறேன். முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. பெண்கள் மீதான கொடுமைகள் சில இடம்பெற்று உள்ளதை நான் அறிந்திருக்கிறேன்.

குறிப்பாக செட்டிகுளம் முகாம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றில் பொழுதுசாய குளிக்கச் சென்ற சில பெண்களின் (1 – 9) உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் குளிப்பதற்கு மறைவிடம் இல்லாததால் பொழுதுசாய இருட்டில் குளிப்பதற்குச் சென்று உள்ளனர். அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடந்தது என்று தெரியவில்லை ஆனால் பத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கலாம்.

இதனைச் சென்று முறையிடுவதற்கோ விசாரிப்பதற்கோ மக்கள் பயப்படுகின்றனர். இச்சம்பவங்கள் பரவலாக நடக்கின்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இச்சம்பவத்தையடுத்து அம்முகாம்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் இருந்து பொலிசாரிற்கும், STF ற்கும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொழுதுசாய்ந்த பின் ஆற்றுப் பக்கம் செல்ல வேண்டாம் என அவர்களுக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நூற்றுக் கணக்காணவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டாலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை. புலிகளைக் களையெடுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களும் அது பற்றிய சில தகவல்களை வழங்கியும் வருகின்றனர்.”

சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை. – மற்றுமொரு வைத்தியர்;

”நான் பணியாற்றும் முகாமிலும் பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வருகின்றனர். அவர்கள் அங்குள் சிங்கள மருத்தவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் மொழிப் பிரச்சினை காரணமாக முழுமையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிடும் போது பல பிரச்சினைகளையும் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாமல் உள்ளது. எந்நேரமும் இராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பார். நோயாளியுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி எல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் அருகில் நிற்கும் போது அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இயலுமானவரை முகாமிற்கு சென்று கடமையைச் செய்துவிட்டு வருவதையே செய்கிறேன். இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவது ஆபத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் யுவதிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஆராய முடியாது.”

பொம்பிளைப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் மோசம் – உதவிகள் வழங்கிவரும் வயதான தாயார்:

”நான் இந்த யுத்தத்தில் ஆரம்பத்திலேயே வந்துவிட்டதால் முகாமில் இல்லை. ஆனால் வவுனியா வைத்தியசாலைக்கு தினமும் சென்று வருகிறேன். அங்கு தான் மிகவும் காயப்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பஸ்நிறைய நோயாளிகள் கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அவர்கள் குளித்து பல் விளக்கி பல நாட்களாக இருக்கும். கிழிந்த அழுக்கான உடைகளுடன் வருவார்கள். அவர்களுக்கான சோப், பற்பசை, ஆடைகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறேன்.

பொம்பிளைப் பிள்ளைகளுடைய நிலைதான் மிகவும் கஸ்ரமானது. அவர்களுடைய இயற்கை உபாதைகள் ஒருபுறம். வன்னியில் புலிகள் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால் சின்னஞ் சிறுசுகளுக்கெல்லாம் கலியாணம் செய்து வைத்திடுவினம். பதினைந்து பதினாறு வயசிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு கைக் குழந்தையும் வந்திடும். முந்தி கலியாணம் கட்டின பெடியளை பிடிக்காயினம். இப்ப என்னென்றால் கடைசி நேரத்தில கலியாணம் கட்டினவையையும் பிடித்துக் கொண்டு போய் அதுகளும் செத்துப் போக இந்தப் பிள்ளையள் கைக்குழந்தையோட முகாம்களில தவிக்குதுகள். (முகாம்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைப் பேற்றிக்கு தயாராக இருக்கிறார்கள் என அரசாங்க அதிபரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.)

புலிகளோடு தொடர்புடையவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தாய் தகப்பன் இருந்தால் அவர்களிடம் கூறிவிட்டே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் விசேட முகாம்களில் வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

முதலில் வந்து தங்க வைக்கப்பட்டவர்களின் நிலைகள் பரவாயில்லை. அவர்களுக்கு அடிப்படையான விடயங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20லும் அதற்குப் பிறகும் வந்தவர்களுடைய வசதிகள் சரியான மோசமாக உள்ளது.”

இந்த நேரடிச் சாட்சியங்கள் வன்னி முகாம்களின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. விலங்குகளைக் கூட இவ்வளவு மோசமான சூழலில் வைத்திருக்க முடியாத நிலையில் வன்னி மக்களை அரசு இவ்வாறு வைத்திருப்பது வன்மையான கண்டணத்திற்கு உரியது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் கீழ்மைப்படுத்தும் வகையிலேயே அரசு நடந்து கொள்கிறது.

ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்காண மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பான முன் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம் அதற்கான பரவலான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் கீழுள்ள விடயங்களை மேற்கொள்வதற்கான அழுத்தக் குழுவொன்று குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனை ஒரு பொது வேலைத்திட்டமாக பரவலாக முன்னெடுப்பது மிக அவசியம்.

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.