07

07

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து இன்று Wed. 8 April 4pm லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சோசலிஸ்ட் கட்சியினால் (CWI- Socialist Party) ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இன்று இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இன்று இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

International Day of Action – Protest at INDIA HOUSE, Aldwych, London, WC2B 4NA
http://www.stoptheslaughteroftamils.org/

Wednesday 8 April 4 – 5.30 pm

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

லாலு பேச்சு: கைது செய்ய உத்தரவு

laluprasat.jpgநான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.

இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தலைவர் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன்

thalai.jpgதமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.
 
1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

srilanka-parliament.jpgநாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க  பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்; இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது. ஐ.தே.க.வும் முஸ்லிம் காங்கிரஸ{ம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இத்தாலி : நிலநடுக்க பலி 180 ஆக உயர்வு

italyearthquake.jpgஇத்தாலியின் மையப்பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

அப்ருஸோவின் தலைநகரான லக்யுலாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளன. அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்தன. அதில் தூங்கிக் கொண்டிருந்த மக்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

புதுவருடம் கழிந்ததும் பயங்கரவாதமற்ற நாடு உருவாகும் – பாராளுமன்றத்தில் பிரதமர்

pm-srilanka.jpgமுப்பது வருடகாலமாக நாட்டைப் பெரிதும் பாதித்து வந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது. புதுவருடம் முடிந்தவுடன் பயங்கரவாதமற்ற நாட்டில் மக்கள் வாழ முடியுமென பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தமதுரையில் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இந்த மகத்தான வெற்றியை ஈட்டுவதற்கு எமது வீரமிக்க பாதுகாப்புப் படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். யுத்தமுனையில் அதிக எண்ணிக்கையிலான தமது தலைவர்களை இழந்துள்ள எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு இந்தத் தோல்வியை மறைப்பதற்கு பொய்ப் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் அவர்களின் போலிக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். புலிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளபோதும் இதற்கு சில தரப்பினர் உதவி வழங்கி வருவதையிட்டு நாம் கவலையடைகிறோம். வடக்கில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள சிவிலியன்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் புலிகள் பொதுமக்கள் மத்தியில் மறைந்து வாழ்கின்றனர். எனினும் மனித நேயத்துடன் செயற்பட்டு வரும் எமது படை வீரர்கள் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதல்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

புலிகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துண்புறுத்தல்கள் பற்றி சில சர்வதேச அமைப்புக்கள் முற்றாக உதாசீனம் செய்துள்ளன. எனினும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் இத்தகைய அமைப்புக்களின் நோக்கம் தோல்வி கண்டுள்ளன என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். 

லசந்தவுக்கு யுனெஸ்கோ விருது

lasantha.jpgபடுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான”யுனெஸ்கோ’ 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர விருதை வழங்கவுள்ளது. அவர் தனக்கு ஆபத்துள்ளதை உணர்ந்தும் தனது மரணம் வரை உண்மையை பேசியதால் இவ்விருதுக்கான தேர்வாளர்களால் இவரது பெயர் ஏகமனதாக ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அவர் எழுதி வெளியிட்ட ஆசிரிய தலையங்கத்தின் பின்னரான மூன்று நாட்களுக்குப் பின்னரே ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் ஊடக சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்ததுடன் இதன் அடிப்படையே கொலைக்கான ஆரம்பமாக இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இவ்விருது மே மாதம் மூன்றாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் வழங்கப்படவுள்ளது.

வருண்காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கவேண்டும்: லாலு

laluprasat.jpgநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்து இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வருண் காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கி இருப்பேன் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் ஆவேசமாக பேசினார். பீகாரில் உள்ள கிஷன்கன்ஞ்சில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் பேசுகையில்,

கடந்த தேர்தலின்போது ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ. மதவாதத்தை தூண்டி விட்டது. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்னையை கையில் எடுத்தனர். பா.ஜ.வின் இந்த சூழ்ச்சியை ஆர்.ஜே.டி. கட்சியும் நானும் தோற்கடித்து ஏமாற்றம் அடைய வைத்தோம். பாபர் மசூதியை இடித்ததில் நேரடியாக தொடர்பு உடைய அத்வானியின் மடியில் நிதிஷ்குமார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.

ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்

pc-shoe.jpgமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார். அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை. இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

ஜனாதிபதி லிபியா பயணம்

mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை லிபியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதற்தடவையாக லிபியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.

லிபியா அரசாங்கத்தால் கடந்த வருடம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்த இது வழிவகுக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் பல பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்