Whilst the Sri Lankan Opposition parties have on 8 August 2010 called on the Government (GOSL) to release the draft constitutional and electoral reforms that are to be amended and how they will be amended in the proposed new Sri Lanka Constitution, an important milestone in uniting the Tamil diaspora in London was achieved on the same day.
A representative gathering of over 50 members of Tamil and Muslim political parties, independent researchers and general public gathered at Walthamstow, East London unanimously endorsed a Memorandum of Understanding of all Tamils and Muslim communities in London to implement at the earliest opportunity the guidelines consisting of Nine (9) Minimum Aspirations of All Tamils and Muslims for circulation among the wider diaspora around the world and in Sri Lanka.
These Minimum Aspirations – the Walthamstow Guidelines – are not demands on the Government (GOSL) for the settlement of the Tamil problem, but are the accepted minimum conditions to be recommended to all elected Tamil and Muslim political parties and their representatives in Sri Lanka and all Tamil & Muslim diaspora for co-operation with the Government (GOSL) to alleviate the suffering of the Tamil speaking peoples, as well as to lend support to the Government (GOSL) to amend the Constitution of Sri Lanka speedily.
The Walthamstow Guidelines are practical and pragmatic principles within a set timeframe for requesting implementation by the Government (GOSL) for good governance, reconciliation and enduring peace in Sri Lanka. The Guidelines were formulated by an all party Tamil and Muslim sub-committee consisting of political activists, adversaries, independent researchers and think tank who studied the Tamil intransigence and political naivety over one year and made these guidelines in a Consultation Paper to the larger diaspora and which was unanimously accepted by the Tamil and Muslim representatives at yesterday’s ,meeting.
The list of the Nine Minimum “Walthamstow Guidelines” will be published soon.
Victor Cherubim
8 August 2010.
ஓகஸ்ட் 08 ஞாயிறு : தமிழர்களிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவதற்கான சந்திப்பு : தேசம்
தமிழ் அரசியல் தலைமைகளிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவும் அப்புரிந்துணர்வை தொடர்ந்தும் தக்க வைப்பது பற்றியுமான கலந்துரையாடல் ஓகஸ்ட் 8 2010 இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் பிரிவுகளினின்றும் ஆர்வலர்கள் கலந்தகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்திப்பின் முதலாவது அம்சமாக அண்மையில் இலங்கை சென்று ஓகஸ்ட் 6 2010ல் லண்டன் திரும்பியுள்ள வாசுதேவன் இலங்கையின் தற்கால யாதார்த்த நிலவரம் பற்றி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய கலந்துரையாடல் இடம்பெறும்.
அதனை அடுத்து கலந்துரையாடலின் முக்கிய அம்சமான குறைந்தபட்ச புரிந்துணர்வு மற்றும் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் பற்றிய விடயம் கலந்துரையாடப்படும். குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவது அதற்கான வரையறைகள் பற்றி கடந்த ஓராண்டு காலமாக இடம்பெற்ற விவாதங்களை ரவி சுந்தரலிங்கம் வி சிவலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.
அவர்களுடைய தொகுப்புகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். கலந்துரையாடலின் முடிவில் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் எது என்பதனை கூடி உள்ளவர்களின் ஒப்புதலுடன் தீர்மானிமாக்கப்படும்.
இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பின் பொதுத்தளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான மேலதிக விவாதங்கள் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்று அவை பரவலாக்கப்படும்.
இக்கலந்தரையாடல் தேசம் கூட்டங்கள் வழமையாக இடம்பெறும் குவார்கஸ் ஹவுசில் இடம்பெறாது. வோல்தம்ஸ்ரோவில் கீழுள்ள புதிய முகவரியில் இடம்பெறும்.
சந்திப்பு விபரம்:
குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு
காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30
இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)
._._._._._.
குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08, 2010ல் : தேசம்
இலங்கைத் தமிழ் மக்களுடைய வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் மே 18 2009ல் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழலில் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். பல்வேறு முரண்பாடுகளும் பல்வேறு குறைபாடுகளும் இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளிடமே உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாகி நிற்பதனால் தமிழ் சமூகம் பலவினமான நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர்களை ஆயுத பலம்கொண்டு பலாத்காரமாக ஓரணியல் நிறுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலாலும் அத்தலைமைகளை ஓரணியில் கொண்டு வரமுடியவில்லை. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் வந்தவர்களும் உண்மையான முழுமையான புரிதலுடன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மே 18 2009ற்குப் பின்னான அவர்களின் அரசியல் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்விற்கு வரவேண்டும் என்பது அவசியமானதாக இருந்தது. இப்புரிந்துணர்வு வெளி அழுத்தங்களால் உருவாவதைக் காட்டிலும் அவர்களின் சுயவிருப்பில் இருந்து அவர்களின் சிந்தனையில் இருந்து உருவாவது அந்தப் புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும்.
இப்புரிந்துணர்வை எட்டுவதை அடிப்படையாகக்கொண்டு யூன் 21 2009இல் ‘அடுத்த நகர்வை நோக்கிய ஒரு பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் தேசம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் மக்களைப் பாதிக்கின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த 13 ஆண்டுகளாக தேசம் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது. 2002ல் மலேசியத் தமிழ் அறிஞர்களை வரவழைத்து மலேசிய தமிழ் இலக்கியம் – நூல் கண்காட்சியும் கலந்துரையாடலும், 2006இல் கலாபூஷணம் பி எம் புன்னியாமீன் அவர்களை வரவழைத்து தமிழ் – முஸ்லீம் இனஉறவுகள், 2007ல் கொன்ஸ்ரன்ரைன் தலைமையில் லண்டன் வந்திருந்த ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல், 2008இல் 13வது திருத்தச்சட்டம் பற்றிய சந்திப்பு இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் தேசம் கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
இவ்வாறு சமகால விடயங்களை கலந்துரையாடி விவாதிக்கும் தேசம் யூன் 21 ஏற்படுத்திய சந்திப்பில் பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்துக்களையும் அரசியல் பின்னணியையும் உடையவர்கள் கலந்துகொண்டு பல்வேறு அரசியல் கருத்துக்களையும் முரண்பாடுகளையும் உடையவர்கள் மத்தியில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அதற்கான உரையாடல் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சந்திப்பில் இலங்கையில் செயற்படுகின்ற பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் பேராசிரியர் என் சண்முகரட்ணம், வியூகம் ஆசிரியர் ரகுமான் ஜான் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் கீழுள்ள எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு
இந்த எட்டு விடயங்களிலும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறை என்ன என்பது பற்றி ஆராய்ந்து உடன்பாடு எட்டுவதற்கு 15 பேர் கொண்ட செயற்குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் 12 சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் இதுவே இறுதியானது அல்ல. இந்த வரையறையை நிர்ணயம் செய்ய கேட்டுக்கொண்ட யூன் 21 2009, ஓகஸ்ட் 02 2009 பொதுக் கூட்டத்தளத்தைக் மீண்டும் கூடி அவர்களின் கருத்துக்களையும் பெற்று இந்தக் குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இது பற்றிய விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போது அன்றைய நிலைமைகள் புரிந்துணர்வு எட்டப்படுவதற்கான தேவையை வலியுறுத்திய போதும் கட்சிகள் தேர்தல்களை எதிர்நோக்கி இருந்த அப்போதைய சூழல் புரிந்துணர்விற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
யூன் 24 2010இல் முதலில் சந்தித்த தமிழ் கட்சிகள் தற்போது தொடர்ச்சியாக 3 சந்திப்புக்களை மேற்கோண்டு தமக்கிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கும் தமிழ் மக்களுடைய நலனை முன்னிலைப்படுத்தும் பொது வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படவும் முன் வந்துள்ளன. மேலும் சந்திப்புக்கள் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பணிமனையிலோ என்றில்லாமல் பரஸ்பர உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தமிழ் கட்சிகளின் அடுத்த சந்திப்பை கிழக்கு மாகாணத்தில் நடாத்த முதலமைச்சர் சந்திரகாந்தன் அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி அச்சந்திப்பு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இத்தமிழ் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டிற்கு வரும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மௌனமாகவே உள்ளது. தமிழ் மக்களின் கூடிய பிரதிநிதித்துவத்தை வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியம் என்பதனை ஏனைய கட்சிகள் அறிந்தே தமது அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!
தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொருவருமே பொறுப்புடையன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் கூடிய பொறுப்புடையது. பெரும்பாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதன் தலைமைகளை உருவாக்கியது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே. அந்த வகையில் வி ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, ஆர் சம்பந்தன் ஆகியோர் தாங்கள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகளுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்து தமிழ் மக்களுடைய நலன்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுப்பதுடன் தமிழ் மக்களுடைய அரசியல் சமூக பொருளாதார வாழ்நிலையின் தரத்தை உயர்த்துவதற்கு முன்வர வேண்டும்.
தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் தமக்கிடையேயான முரண்பாடுகளுடன் முட்டிமோதி காலத்தையும் நேரத்தையும் விணடிப்பது தமிழ் மக்களின் வாழ்நிலையையே கீழ்நிலைக்கு இட்டுச்செல்ல காரணமாகிறது. அதனால் தமிழ் கட்சிகளிடையே ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அழுத்தங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் வழங்கப்பட வேண்டும்.
சந்திப்பு விபரம்:
குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு
காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30
இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)
இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறையைச் செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஆன சந்திப்பு ஓகஸ்ட் 08 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னைய சந்திப்புக்கள் பற்றிய விபரமும் இணைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறையை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்னையை சந்திப்புக்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.
அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்