தாய்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பாங்காங்கின் பிரதான வீதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து வருகின்றனர்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், உள்துறை அமைச்சகத்திற்குள் உட்புகுந்ததோடு, தற்போதைய பிரதமர் பயணித்ததாக கருதப்படும் வாகனம் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசி எறிந்தனர். வீதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இது வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.