நோர்வேயில் உள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது

norwy-slhc.jpgநோர்வேயில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தின் கதவுகள், சாளரங்களை அடித்து நொருக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது

ஓஸ்லோவிலும் கடந்த 5 நாட்களாக இலங்கை தூதரகம் முன் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கை பாதுகாப்பு வளையத்துக்குள் அந் நாட்டு ராணுவம் 300 கிரனைட்களை வீசி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர்.

பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரை தள்ளிவிட்டுவிட்டு இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்த அவர்கள் ஜன்னல்கள் மற்றும் மேஜைகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் – நோர்வே அரசு கண்டனம்
 
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதையிட்டு நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நோர்வே ஒஸ்லோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியிருப்பதையிட்டு நோர்வே அரசாங்கம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

தூதரகத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் ஸ்டோறி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் நோர்வேயின் முயற்சியால் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை போர் நிறுத்தம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது – நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கியது

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.

1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை

2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை

3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை

ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 Comments

  • Sethurupan
    Sethurupan

    ஒப்பனைக்கு நோர்வே கன்டித்திருந்தாலும் ……….
    காரணம் நோர்வே பொலிசாருக்கு தமிழ் மக்களின் மரணத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இழைஞார்களை பாதுகாப்பாக பொலிசார் மீண்டும் ஆர்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு வந்து விட்டனர். சம்பவத்தை பற்றி தமக்கு எதுவும் தெரியாது நாம் வரமுதல் அரோ செய்துபோட்டு போட்டினம் என்டு பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

    ஆர்பாட்டத்திற்கு பொலிசார் பூரண ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நோர்வெயில் இலங்கை அரசின் பருப்பு அவியாது என்று உயர் அதிகாரி ஒருவர் நட்பு ரீதியாக கதைக்கும்போது தெரிவித்தார்.

    Reply
  • jaffna man
    jaffna man

    நோர்வே பேச்சுவார்த்தை என்று ஈழத்தில் புலிகளை சிக்கலில் மாட்டி (முன்பு பாலஸ்தீனத்தை மாட்டியது போல) எமது போராட்டத்தை கெடுத்தது போல இப்ப இந்த தத்தாரிகள் அடித்துடைத்தல் வேலைகளை செய்ய விட்டு வெளி நாட்டிலும் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆப்பு வைக்கிறார்கள்.

    Reply
  • kalawathi
    kalawathi

    புலம்பெயர் நாடுகளில் நடப்பவைகள் போராட்டம் என்றால் தமிழீழம் கிடைக்கும் என்று நம்புவோம் – சிலவேளை பாதுகாப்பு வலயம் மட்டும்தான் தமிழீழமோ? வட – கிழக்குப்பகுதிகளில் உள்ள அனாதரவான குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் உங்கள் ஊர்வலம் ஏதாவது தூக்கினார்களா? இந்த பாதகாப்பு பிரதேசத்தில் புலிகளின் தலைவர் இல்லை என்றால் இந்த பி ரி எப் இப்படி ஊர்வலம் ஒழுங்கு படுத்துவார்களா? கடந்த காலங்களில் கிழக்குமாகாணத்தில் நடந்தவைகளுக்கு ஏன்? செய்யவில்லை.

    மீண்டும் 1983ல் மக்களின் உணரச்சிகளை தவறாக பயன்படுத்தியது போல தற்போதுள்ள நிலைமைகளில் உள்ள உணர்ச்சிகளை லண்டனில் வெளிநாடுகளில் உள்ள புலிப்பினாமிகள் தமது சொந்த நிதி சேகரிப்புக்கும் ஏற்கனவே புலிகளை ஆதரித்து மாற்று இயக்கத்தவர்களை எதிர்த்து ஒதுக்கி தமது நிதி சேகரிப்பில் வந்த பணத்தை பாதுகாக்கவுமே இந்த உணர்சிகர மக்கள் கூட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

    புலிகள் அழிந்த பின்னர் இவர்கள் யாரையும் காணமுடியாது போய்விடும்.
    தமது குடும்பங்களை தொலைத்தவர்கள் மீண்டும் அரசை கூப்பன்கள் கேட்கவும் உணவு முத்திரை கேட்கவுமே வேண்டி வரும்.

    சுனாமியில் சேர்த்த பணம் எங்கே? கண்ணீர் வெள்ளத்ற்கு சேர்த்த பணம் எங்கே? கோட் சூட் போட்டு வணங்காமண்ணுக்கு சேர்த்தவைகள் எங்கே? இந்தப்பதாகைகள் தூக்கும் காலம் வரும்.

    புலிகளின் கொலைகளுக்கும் துப்பாக்கி சூட்லும் இருந்து தப்பி வந்து அரச முகாமில் இருக்கும் மக்கள் அன்று புலிகள் சொன்ன தமிழீழ மக்கள் இன்று அரச மக்களா?

    Reply
  • BC
    BC

    //Sethurupan – நோர்வெயில் இலங்கை அரசின் பருப்பு அவியாது என்று உயர் அதிகாரி ஒருவர் நட்பு ரீதியாக கதைக்கும்போது தெரிவித்தார்.//

    அப்படியா? இலங்கையுடன் தூதரக உறவை நோர்வே துண்டிக்க போகிறதா?

    Reply
  • mohan
    mohan

    லண்டனில் உள்ள தூதரகத்திற்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் இந்த புலி வர்க்கத்தின் போராட்ட மூலோபாயங்கள் முடிவடைந்ததும் அடுத்து இப்படியான வேலைகள் தான்.

    Reply
  • padamman
    padamman

    இதை புலிகள் செய்யும் என்று முன்பே தெரிந்தவிடயம் தான் புலிகளின் பலவினத்தின் வெளிப்பாடு இன்னும் நிறையவே செய்வார்கள் அதனால் பாதிப்படையபோவது புலன் பெயர் தமிழர்தான்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஒப்பனைக்கு நோர்வே கன்டித்திருந்தாலும் ………. – சேது//

    சேது அண்ணை அது ஒப்பனை(Makeup) அல்ல ஒப்புக்கு என்று வந்திருக்க வேண்டும். நோர்வேயிலுள்ள ஒரு தூதரகம் தாக்கப்பட்டது நோர்வேக்குத் தான் அவமானம். இதனால் எதிர்காலத்தில் எமது தமிழர்களுக்கு ஏற்படப்போகும் அவமானங்களையும் நீங்க பார்க்கத் தானே போறீங்க. அப்ப தெரியும் எந்தப் பருப்பு அவியுதெண்டு.

    Reply
  • முறிந்த பனை
    முறிந்த பனை

    /இந்த பாதுகாப்பு பிரதேசத்தில் புலிகளின் தலைவர் இல்லை என்றால் இந்த பி. ரி. எப். இப்படி ஊர்வலம் ஒழுங்கு படுத்துவார்களா? கடந்த காலங்களில் கிழக்குமாகாணத்தில் நடந்தவைகளுக்கு ஏன்? செய்யவில்லை./—
    திருமதி ரஜனி திரனகமாவின் “முறிந்த பனையின்” கடைசி அத்தியாயத்தில், “நாங்கள் எங்களுடைய பிரச்சனைப் பற்றி எழுதி விட்டோம், மட்டக்களப்பார்களுடைய பிரச்சனைப் பற்றி, அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்தான் எழுத வேண்டும்” என்று இருக்கிறது. இதில் ஆராய்ச்சி பண்ணுகிறவர்களுக்கு புரியாத, “பிரத்தியேக பிரச்சனைகள்” பல உள்ளன, தனிப்பட்ட ரீதியில் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள், “தாங்கள் பிறந்த இடத்திற்கே சென்று”, அந்தக் கோரிக்கையை விடுவது நல்லது என்று கருதுகிறேன்- மற்றவர்களுக்கு தொல்லை தராமல்….”ஒரே குழப்பமப்பா…….

    Reply
  • BC
    BC

    கலாவதி சொன்னது மிக சரியே.1983ல் மக்களின் உணரச்சிகளை தவறாக பயன்படுத்தி நல்லா பணம் சம்பாதித்து நல்ல சுவை கண்டவர்கள் தான் இந்த புலி ஆட்கள்.இந்த சந்தர்பத்தையும் நன்றாக பெருப்பித்து பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

    Reply
  • defence.lk
    defence.lk

    Government condemns LTTE terror attack on Sri Lanka Mission in Oslo
    “Not feasible for Norway to engage in facilitation”

    The Government of Sri Lanka vehemently condemns the violent attack by hooligans belonging to the international terror network of the LTTE on the Sri Lanka Embassy in Oslo on Sunday, 12th April 2009.

    In an official protest lodged with the Norwegian Ambassador in Colombo today (April 13) the Government states it is deeply regretted that the Norwegian Government has failed in discharging of its obligations under international law, consequent to its sheer neglect in the provision of adequate security to the Sri Lanka Mission in Oslo.

    Requests for adequate security for the Mission had been made repeatedly by the Ambassador of Sri Lanka to Norway, who had been informed by the authorities that since the Norwegian Security Service were maintaining a constant surveillance of the Mission, they did not perceive the necessity to place a static guard to provide security cover.

    In these circumstances, the Government of Sri Lanka perceives that it is no longer feasible for Norway to act as facilitator in the engagement with Sri Lanka in the current context.

    Following is the text of a Media Release on this subject issued by the Ministry of Foreign Affairs:

    The Government of Sri Lanka vehemently condemns the violent attack by operatives belonging to the international terror network of the LTTE on the Sri Lanka Embassy in Oslo on Sunday, 12th April 2009.

    On the advice of the Minister of Foreign Affairs, Rohitha Bogollagama, the Royal Norwegian Ambassador in Sri Lanka, Tore Hattrem was summoned to the Foreign Ministry today (13th April 2009), and an official protest lodged. The following matters were brought to the attention of the Ambassador in connection with the attack on the Sri Lankan mission in the Norwegian capital yesterday.

    * The Sri Lanka Government strongly condemns the premeditated attack on the Sri Lanka Embassy in Oslo on Sunday ,12th April 2009 by operatives of the international terror network of the LTTE.

    * In the recent past, there have been a number of demonstrations organized by the LTTE’s international network across the globe. On this particular day (12th April) too, a demonstration was held with the permission of the Norwegian Government. The said attack was subsequent to this demonstration.

    * The Norwegian Government, being fully cognizant of the modus operandi of the LTTE and in constant contact with its international network as well as its leadership in the North of Sri Lanka, ought to have ensured the provision of adequate security to the diplomatic premises and agents of the Sri Lanka Government as obligated by the Vienna Convention on Diplomatic Relations of 18th April 1961. Article 22(2) of the Convention casts a special duty on the receiving State “to take all appropriate steps to protect the premises of the mission against any intrusion or damage and to prevent any disturbance of the peace of the mission or impairment of its dignity.”

    * Furthermore, requests for adequate security for the Mission had been made repeatedly by the Ambassador of Sri Lanka to Norway, who had been informed by the authorities that since the Norwegian Security Service was maintaining a constant surveillance of the Mission, they did not perceive the necessity to place a static guard to provide security cover.

    * In this context, the Government of Sri Lanka deplores the failure of the Norwegian Government in fulfilling its obligations under international law, consequent to its sheer neglect in the provision of adequate security to the Sri Lanka Mission in Oslo.

    * Quite in contrast, the Government of Sri Lanka has been continuously providing security to Norway’s diplomatic representation in Sri Lanka at all times, notwithstanding the constraints of manpower and other resources on the Police and security agencies,

    * It was fortunate that none of the staff of the Sri Lanka Embassy came to harm due to their absence from the diplomatic premises, when this vicious and violent attack on the Mission took place.

    * It is deplorable that this act of terror took place within hours of the presidential directive to the armed forces to restrict their operations to those of a defensive nature, in order to give the civilian population entrapped as hostages by the LTTE, the opportunity to celebrate the Sinhala & Tamil New Year in a suitable atmosphere and have uninhibited freedom of movement from the No Fire Zone to the cleared areas.

    * This outrageous act of terror committed by the LTTE in Oslo, the capital of Norway which they feel is a secure location due the moral backing available locally, should demonstrate to the Norwegian Government,the true character of the LTTE.

    * Further, it displays that repeated concessions made by the Sri Lanka Government have been treated only with contempt by the LTTE.

    * In these circumstances, the Government of Sri Lanka perceives that it is no longer feasible for Norway to act as facilitator in its engagement with Sri Lanka in the current context.

    * The Government of Sri Lanka strongly urges the Norwegian Government to apprehend the perpetrators of the attack on its Embassy in Oslo and bring them to justice immediately.

    In addition, the Government of Sri Lanka also expects the Norwegian authorities to act swiftly to provide adequate security for the Sri Lanka Mission, as well as all for the staff of the Mission, in keeping with Norway’s international obligations under the Vienna Convention on Diplomatic Relations, and also ensure that there is no recurrence of such incidents in the future.

    The violent conduct of LTTE elements conducting various demonstrations elsewhere abroad, amounting to glorification of terrorism, should at least now convince the international community of the absolute intransigence of the LTTE and its callous disregard for international law and civilized norms of behaviour.

    Ministry of Foreign Affairs

    Colombo

    13th April 2009

    Reply
  • Sethurupan
    Sethurupan

    எனது அறிவுக்கு எட்டி அளவில் நோர்வே சமாதானம் பேச வந்தது உண்மை. 100 வீதம் அவர்களின் முதுகில் பேச்சு மேசையில் இருந்தவர்கள் குத்தியதுதான் தற்போதய நிலைக்கு காரணம். நோர்வே உலகில் உள்ள அனைத்து உலகப் புகள் பெற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்வை பேனி வருகிறது. அது அவர்களுடைய கொள்கை.

    நான் இலங்கையின் பரப்பு என்று நான் சொல்ல வந்த விடயம் அவர்களின் அழுத்தங்கள் ஏனய நாடுகள் பொன்று இங்கு இலகுவில் நகர்த்த முடியாது. இந்த நாடு ஒரு விசித்திரமான நாடு.

    Reply
  • மாயா
    மாயா

    புலத்தில் பயங்கரவாதம் பகிரங்கமாகத் தொடங்கிவிட்டது.
    புலி போன இடமெல்லாம் இரத்தக் களறி.

    புலி அழிவால்
    புலியை விட
    புலி வால்களுக்கே தலை காட்ட ஏலாது?
    அதன் தாக்கம் போராட்டமா வெடிக்குது
    இங்கும் கலவரமாக நிச்சயம் மாறும்

    ஒரு ஆமி டிரக்குக்கு குண்டு வச்சதால
    1983 கலவரம்.
    மாவிலாறு பிரச்சனையால
    இந்த ஓட்டம்.
    புலத்து போராட்டத்தால
    வெள்ளைகளும் கை வைக்கப் போகுது.

    இருந்து பாருங்கோ
    இனி உருப்பட்ட மாதிரிதானுங்கோ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நோர்வேயில் இலங்கைத் தூதரகம் எம்மவர்களால் தாக்கப்பட்டதையடுத்து நோர்வே பொலிசாரே அங்கிருந்து எம்மவரை அப்புறப்படுத்தியுள்ளனர். இப்போது வெறும் கண்துடைப்பாக இதுபற்றிய விசாரணைகள் நடைபெறுவதாகவும் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் அறிவித்துள்ளனர். இதன் மூலம் நோர்வே அரசு தமக்கும் பயங்கரவாதிகளுக்குமுள்ள தொடர்புகளை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குரிய அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயை, அதிலிருந்து உத்தியோகபூர்வமாக தற்போது நீக்கியிருப்பதாக அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவே..

    Reply
  • Norman
    Norman

    தங்கள் பணமும் ஏகபிரதிநிதித்துவக் கனவும் வீணாகிப் போனதன் விரக்தியில் செய்த வேலைதான் இது. இவர்களுடைய பெற்றோர்கள்தான் 1987 இல் நோர்வேயில் ஏவற்பேய்க் கலாச்சாரத்தைத் தொடக்கி வைத்தார்கள்.

    Reply
  • thevi
    thevi

    நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியது போன்று இன்று (ஏப். 13) சுவிஸ் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் சிலர் சுவிற்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். தூதரகத்தில் இந்தியத் தேசியக்கொடி பறந்து கொண்டிருந்த கம்பத்தையும் தேசியக்கொடியையும் தாக்கி அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததை தொடர்ந்து அவர்கள் தூதரகத்திற்கு உள்ளே செல்லும் முயற்சியை கைவிட்டு தப்பிச் ஓடியுள்ளனர்.

    இது குறித்து தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விரைந்து செயற்பட்டதை தொடர்ந்து தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பேர்ணிலுள்ள சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் இந்தியா எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடாத்திவரும் புலிகள் மற்றும் புலிசார்பு அமைப்புக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    புலிகளின் அடாவடி நடவடிக்கைகளால் சுவிற்சர்லாந்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும், பொதுபோக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாகவும் ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களையும் வெறுக்கும் நிலைக்கு வித்திடப்படுவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் கற்பிக்க முயலும் புலிகள் வன்னியில் இந்திய இராணுவம் வந்து நிற்பதாகவும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கூறி தமிழக தமிழர்களையும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

    உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளை இன்னும் உருவாக்குவதைத் தவிர வேறெதையும் புலிகள் சாதிக்கப் போவதில்லை என புலி சார்பானவர்களே சலித்துக் கொள்கின்றனர்.

    Reply
  • மாயா
    மாயா

    புலி வால்கள் சில நோர்வேயில் ஆடிய ஆட்டத்தை ஒளிப்பதிவு செய்துள்ளதை பாருங்கள்:
    http://www.youtube.com/watch?v=cKxxv_7YQKY

    Reply
  • Sethurupan
    Sethurupan

    இதில் ஒருவிடயத்தை பாராட்ட வெண்டும். உடைத்தவர்கள் பட்டபலில் ஊடகவியலாளார் முன்னிலையில் இதை செய்தது மட்டுமல்ல இதை சாட்டி இலங்கை அரசு நோர்வேயை வெளியேற்றுவதாக அறிக்கை விட நோர்வே இதை கடந்த தேர்தல் காலத்தில் 2005/2006 இலங்கை அரசு செய்துவிட்டதாக கூறி இலங்கையின் மூக்கை மீண்டும் உடைத்துள்ளது.

    இதைதான் சொன்னன் இலக்கை பருப்பு அவியாது என்று.

    இதற்கும் அப்பால் நோர்வேயில் உள்ள எந்த தூதுவராலயத்திற்கும் அச்சுறுத்தல் என்டால் காவல் கம்பனிகளை வேலைக்கு அமர்த்த வேண்டியது அந்த தூதுவராலயத்தின் வேலையெ தவிர தூதுவராலயத்திற்கு முன்னாலை போய் காவல் நிக்கிறது நோர்வெ காறரின் வேலை இல்லை.

    Reply
  • Norman
    Norman

    நன்றி!!! இலக்கை(தமிழீழம்+சிறீலங்கா) பருப்பு அவியாது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சேதுரூபன் உங்களுக்கு புலிபித்தம் தலைக்கேறி விட்டது. பாதுகாப்புக்கு இலங்கை இராணுவத்தையா அங்கு நிறுத்த முடியும். இலங்கை அரசியல் பிரச்சனைகள் மூலமா பல பிரச்சனைகளை சந்தித்துகொண்டிருக்கிற நாடு.பயங்கரவாதத்கிற்கும் தற்கொலை குண்தாரிகளுக்கும் பேர்எடுத்த நாடு.
    பிள்ளைதாச்சிக்கோ பன்னிரவயது சிறுமிக்கு குண்டை கட்டிவிட்டு உயிரை மாய்த்து சதைபிண்டமாக சிதறிப்போவதை கண்டுகழித்து மகிழ்ந்து அதுபோராட்டம் என அங்கீகாரம் கொடுக்கும் புலம் பெயர் தமிழ் கூட்டம்.
    இத்தனைக்கு மத்தியிலும் இந்த புத்திபேதலிச்ச கூட்டத்தால் தூதரகத்திற்கு ஆபத்து வராது என ஒருநாடு கருதுமேயானால் அதில் நயவஞ்சகமும் சூழ்சியும் புதையுண்டு கிடக்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நோர்வே தூதுவராலயத்தை தாக்கிய வீரபுருசர்களின் சாதனைகள் ஒளிப்படமாக வந்திருப்பதை பலர் பார்த்து விட்டோம். வீடியோ எடுப்பதை மறைக்கத் தான் தாங்கள் பதாதைகள் கொண்டு வந்திருக்கினம் என்பதும், வீடியோ எடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்ததும் விழுந்தடித்து ஓடுவதும் முகத்தை மறைக்க படாதபாடு படுவதும் தான் வீரமென்பதோ??

    எனக்குத் தெரிந்து பிரித்தானியாவில் சட்டவிரோதச் செயல்களிலீடுபட்ட பலர் நோர்வேயில் போய் பதுங்கி விட்டனர். இதை நோர்வே பிரித்தானியாவிற்கு மூக்குடைத்தாக எடுத்துக் கொள்ள முடியுமா??

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    நெதர்லாந்தில் “கில்வெர்சம்” எனுமிடத்திலுள்ள அரசஊடகநிலையம் நேற்று திங்கள் (13.04.2009) ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களால் திடீரென முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. மதியம் 1மணியளவில் நாலா பக்கங்களிலிருந்தும் இவ்வூடக நிலையத்தின் முன்பு ஒன்றுதிரண்ட தமிழ்மக்கள் தாயகத்தில் மகிந்த அரசால் தொடரப்படுகின்ற தமிழினப் படுகொலைகளானது நெதர்லாந்து ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுவதை வெளிப்படுத்தியிருந்தனர். இதனை ஒத்துக்கொண்ட இவ்வூடகநிலையத்தினர் இனிமேல் தாங்கள் கவனமெடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர். அத்துடன் இவ்ஆர்ப்பாட்டத்தை அன்றையதினமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் செய்திருந்தனர்.

    இவ்ஆர்ப்பாட்டத்தை மாலை 4.30 மணியளவில் நிறைவுசெய்துகொண்டு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட டென் காக் எனுமிடத்திலுள்ள நாடாளுமன்ற முன்றலிற்கு அனைவரும் சென்று அங்கு 4வது நாளாக அனுமதி மறுக்கப்பட்டநிலையில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருகின்ற இருதாய்மார்களிற்கும் தங்கள் ஆதரவைத்தெரிவித்து அனுமதி தரப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத காவற்துறையினர் மக்களை அமைதியாக கலைந்து செல்லுமாறும் இன்றிலிருந்து (14.04.2009) அனுமதி தருவதாகவும் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்துசென்றனர்.

    காவற்துறையின் மருத்துவப்பிரிவும் உண்ணாவிரதிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தியிருந்தனர்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    இலங்கையின் சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்கள் என்ற நிலை ஏற்கனவே நீங்கிவிட்டதாக இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பவர் தெரிவித்துள்ளார்.மூன்று வருடங்களுக்கு முன்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து அனுசரணையாளர்களாகத் தம்மால் பணியாற்ற முடியவில்லையென அவர் கூறியுள்ளார்.

    “சமாதான முயற்சிகள் 2006ஆம் ஆண்டு முறிவடைந்த பின்னர் எம்மால் அனுசரணையாளர்களாகப் பணியாற்ற முடியாது” என பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்கள் என்ற நிலையிலிருந்து நோர்வேயை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்தே ஜோன் ஹன்சன் பவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தமிழ் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சமாதான அனுசரணையாளர்கள் நிலையிலிருந்து நோர்வேயை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    சந்திரன் ராஜா.
    நான் புலியும் இல்லை புலி பித்தனும் இல்லை. நான் சொல்ல வந்த விடயம் நோர்வே சட்டம் சம்மந்தமானது. அதாவது பிரித்தானிய தூதவராலயத்தை போய் பாத்தால் அமெரிக்க தூதுவராலயத்தை போய் பாத்தால் ஏன் இஸ்ரவேல் தூதுவராலயத்தை போய் பாத்தால் ஏன் பாலஸ்தீன தூதவராலயத்தை போய் பாத்தால் ஏன் சவுதி தூதவராக இருப்பவர் என்னுடன் பல காலம் வேலை செய்தவர். அனைத்து தூதுவராலயமும் தமக்கு தனியார் பாதுகாப்பு கம்பனியை பாதகாவலராக வைத்துள்ளார்கள். ஆனால் இலங்கை தூதவராலயம் மட்டும் ஏன் நோர்வே பொலிசாரை தனது வாடகை கட்டிடத்திற்கு காவல் கேக்குது? நோர்வே சட்டபடி உணக்கு உனது நிறுவனத்திற்கு உனது தூதவராலயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தால் நீ உனது பாதுகாப்பை பாதுகாப்பு நிறுவனங்கள் ஊடாக உறுதிபடத்திகொள் என்பது சட்டம்.

    அதற்கும் அப்பால் நோர்வேயில் 100க்கு மெற்பட்ட தூதவராலயத்திற்கு 100 பொலிசார் காவல் வெலை செய்தால் நோர்வெக்கு எவ்வளவு பணம் செலவாகும்.? நான் புலி புராணம் பேசவில்லை சரத்தை உங்களுக்கு சொல்கிறென்.

    பார்தீபன் நான் நினைக்கவில்லை பிரித்தானிய பொலிசார் அவ்வளவு முட்டாள்களாக இருப்பார் என்று.

    Reply
  • thurai
    thurai

    வன்னிமக்களை அடிமையாக்கி மகிழ்ந்த புலிகள். புலத்தில் அகதிகளாய் வந்தவர்களை மிரட்டி பணம் கறந்த புலிகள். இன்னும் தெளிவாகக் கூறினால் உலக்த்தமிழரின் இரத்தத்தை குடித்து வாழ்ந்த புலிகள். இன்று உயிரைக்காக்க உலகமெங்கும் ஓடித்திரியும் புலிகளாகி விட்டனர். வாழ்வா, சாவா என்றநிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் வெகுண்டு ஓடுகிறார்கள். உலகெங்கும் இவர்களின் கொலை வெறி அடக்கப்பட்டுள்ளது ஆனால் இவர்களின் சுயரூபம் மெல்ல மெல்ல வெளிப்படப்போகின்ற்து.

    புலத்தில் ஈழத்த்மிழர் 99 வீதமானவ்ர்கள் புலிகள் என ஏற்போம். புலிகளால் துரோகிகள் என்று கூறப்படும் 1 வீதமான தமிழருடன்தான் உலகமுள்ளது என்பதனை இன்னமும் ஏற்றுக்கொள்ள மனம் மாறாத புலத்துப்புலிகளும் பயங்கரவாதிகளேயாகும். இலங்கை அரசாங்கம்போல புலத்திலும் புலிகளிற்கெதிரான ந்டவடிக்கைகள் எடுப்பார்கள்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலம்பெயர் தமிழருக்கு “தமிழ்ஈழம்” வேண்டும். ஈழத்தில் வாழ்கை நடத்தும் மக்களுக்கு உயிரும்-வாழ்வும் வேண்டும். இது தான் விதியாக தொடருகிறது. சர்வதேச நாடுகளையும் சர்வதேச சட்டங்களையும் தம்கையில் வளைத்தெடுக்க புலிகள் தலையால் கிடங்கு கிண்டுகிறார்கள்.
    மனிதநாகரீகத்தையும் சர்வதேச சட்டங்களை மதிப்பதையும் அதற்கு பணிவாக இறங்கி வரப்போவதில்லை என இவர்கள் தொடர்சியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை.

    ஆர்பாட்டஊர்வலங்களையும் உண்னாவிதரங்களையும் பாருங்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? தம்பிடியுள்ள மக்களை விடுவிக்க சொல்லி யாராவது போராட்டம் உண்னாவிதரம் இருக்கிறார்களா? சர்வதேச சமூகத்தை தொடர்ந்தும் முட்டாள் ஆக்கிக்கொண்டே இருக்கிறார்கள். முட்டாள் பாறாங்கல்லை தூக்குவது தன்சொந்த காலில் போடுவதற்கே என்ற சீனமுதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. லும்பனாக மாறிப்போனது புலம்பெயர் தமிழர் என்றால் அதில் தவறுயிருக்க முடியுமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சேது, ஒவ்வொரு நாடும் தமது நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அந்தந்த நாடுகளின் கடைமையாகும். அந்தப் பாதுகாப்பை ஒரு நாட்டால் வழங்க முடியாது போனால் அது அந்த நாட்டிற்குத் தான் அவமானம். நோர்வேயில் பாதுகாப்பு சம்மந்தமாக தனியார் நிறுவனங்களைத் தான் அணுக வேண்டுமென சட்டம் இருப்பதாக தாங்கள் கூறுவதும் பொய்யான தகவல் என நோர்வேயில் வசிக்கும் எனது நண்பரொருவரும் உறுதியாகக் கூறினார். அத்துடன் இலங்கைத் தூதுவராலயம் மேலதிகமாக பாதுகாப்பு கேட்டபோது கூட இப்படியொரு பதிலை நோர்வே வழங்கியதாகவும் கூறவில்லை. தாம் மேலதிகமான பாதுகாப்பு வழங்காதது தவறு தான் என்று ஒப்பும் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் புலிகளுக்கும் நோர்வேயிற்கும் வக்காலத்து வாங்க இப்படியான பொய்யான தகவல்களை அள்ளி விட வேண்டாம்.

    மேலும் பிரித்தானிய பொலிசார் முட்டாள்களா இல்லையா என்பதில் தங்களுக்குள்ள அனுபவம் எனக்கு இல்லைத் தான்.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழரின் கல்வி மேம்பாட்டால்,நிலைநாட்டப்பட்ட
    தமிழரின் சிறிய புகழைக்கூட உலகின் சாக்கடைகளில்
    ஓடவிடும் புலிகளின் ஆதரவாளர்கள்.

    தற்கொலைப்படை
    தீமூட்டிக்கொலை
    சாகும்வரை உண்ணாவிரதம்

    சொந்த மண்ணில் படுகொலை.
    புலத்தில் முடிந்தால் அகிம்சை
    முடியாவிட்டால் கொடுமை.

    துரை

    Reply
  • accu
    accu

    //ஈழத்தமிழரின் கல்வி மேம்பாட்டால், நிலைநாட்டப்பட்ட தமிழரின் சிறிய புகழைக்கூட உலகின் சாக்கடைகளில் ஓடவிடும் புலிகளின் ஆதரவாளர்கள்.//

    சரியாகச் சொன்னீர்கள் துரை கனடாவில் இப்போ பலரின் ஆதங்கம் இதுதான். கனடா ஒட்டாவாவில் தொடர் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் கூத்தில் மானம் போகிறது. அங்கே பல உணவுச்சாலைகளில் சிறுநீர் கழித்து அசிங்கம் ஆக்கியதால் இப்போ தமிழருக்கு அனுமதியில்லை. நேற்று ஒரு தமிழ்க்கடைக்கு முன்னால் ஒருவர் தொலைபேசியில் பேசியது என் காதில் விழுந்தது “மச்சான் என்னட்டை போத்தில் இருக்கு நீ சாப்பாட்டை கட்டிக்கொண்டு வா ஆறு மணிக்கு இறங்கலாம்.[ஒட்டாவாவுக்கு] இது எப்படி இருக்கு?

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    ஒஸ்லோவில் உள்ள நோர்வேக்கான இலங்கை தூதரகம் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான கைது நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    அக்கு அதைவிட கொடுமை இழசுகளுக்கு
    தற்ப்போது இங்குதான் சொர்க்கம் தெரிகிறது.
    கூட்டு கலாவி..
    கூட்டு காதல்..
    கூட்டுநட்ப்பு..
    இழயசமுதாயம் அழிய மிக இலகுவான இடம் இதுதான். அதை விட பெற்றவர்களே பிள்ளைகளை இங்கு கொண்டுபோய் விடுவது. சிலர் பேசுகின்றனர். GTVயில் தமது பிள்ளைபோய் நாலுநாளாய் வீட்டுக்கு வரவில்லையாம். (பெண்)கேட்டால் உனர்வு பொங்கி விட்டதாம். இப்படி பல
    பேருக்கு 1983 பொங்கிதான் இன்று நாடுநாடாய் தமிழன் அலைவது தெரியாமல். மீண்டும் அதே விளையாட்டை தொடங்குகிறார்கள்.

    Reply
  • BC
    BC

    சந்திரன் ராஜா சென்னது போல் முட்டாள் பாறாங்கல்லை தூக்குவது தன்சொந்த காலில் போடுவதற்கே என்ற சீன பழமொழி வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்கு பொருந்தும்.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Well said Accu and Thurai.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நோர்வேயில் புலிஆதரவுகள் தூதுவராலயத்தில் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் வீடியோவில் வெளிவந்த பின்னும், GTV யில் தினேஷ் என்றவர் இத்தாக்குதல் அனுசரணையாளராகவிருந்த நோர்வேரைக் களட்டிவிட இலங்கை அரசே நடாத்தியதாக கதை விடுகின்றர்.

    Reply
  • John
    John

    30வருடத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர் பிரச்சனையில் இன்று வரை எந்தநாடுகளும் முன்னின்று பேச்சுவார்த்தைகளுக்கு ஒழுங்கு செய்ய முன்வரவில்லை. நோர்வே முன்வந்து தன்னாலான உதவிகளையும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் செய்தது. பேச்சு வார்த்தை மேசையில் இருந்தவர்கள் எவரும் இதயசுத்தியுடனும் மக்களை கருத்திலும் கொள்ளாது நடந்ததன் விளைவே இது. எறிக் சூல்கெய் எனக்கு நேரடியாகச் சொன்னார். நோர்வே பேச்சு வார்த்தைகளுக்கு அனுசரணையாளராக இருக்குமே தவிர போருக்கு உடன்படாது. அதேவேளை இதைத்தான் செய்யவேண்டும் என்று அழுத்தமும் கொடுக்காது என்று. பேச்சு வார்த்தைகள் நடந்தேறுவதற்கு ஒரு கருவியாக இருந்தார்களே தவிர பேச்சுவார்த்தைகளைக் கொண்டு சொல்லவேண்டியவர்கள் பிரச்சனைக்குரியவர்களே. ஒர் அழுத்துத்தின் கீழ் எடுக்கப்படும் முடிவு இன்றை இஸ்ரவேல் பாலஸ்தீனம் போன்று தீர்க்க முடியாத பிரச்சனையாக அமைந்து விடும். நோர்வே தான் எடுத்த செயலை சரியாகவே செய்தது என்பது என் கருத்து

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜோன்; பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகமே இருண்டு விட்டதென்று நினைக்குமாம். அது போல நோர்வே கிட்டத்தட்ட வெள்ளைப்புலிகளாகவே செயற்பட்டதென்பது முற்றிலும் உண்மை. தற்போதைய போரில் நோர்வேயால் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிநவீன போர்க்கருவிகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள், நீர்மூழ்கிக் கப்பலுக்கான உதிரிப்பாகங்கள் போன்று பல கண்டுபிடிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தை தறிகெட்டலையும் தமிழ் இளையோர் தாக்கிய போது அவர்களை பாதுகாப்பாக நோர்வே காவற்துறையே வெளியேற வைத்துவிட்டு, தாக்குதல் பற்றி விசாரணை நடப்பதாகவும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென நோர்வே அரசு அறிவித்தது. (ஆனால் தூதுவராலயத் தாக்குதல் பற்றிய ஒளிப்பதிவு பல ஊடகங்களிலும் வந்துள்ளது.) நோர்வேயின் வெள்ளைப்புலி வேசம் இதன் மூலம் பலருக்கும் வெளிப்பட்டது. இப்படியான செயற்பாடுகள் ஜோனுக்கு நியாயமான செயற்பாடுகளாக தெரிவது விந்தையிலும் விந்தை.

    Reply