ஒரிசா மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய அலுமினியத் தாது சுரங்கத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நேற்று நடத்தியத் தாக்குதலில், மத்திய தொழில்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
கோரபுட் மாவட்டம் பஞ்ச்பட்மாலி என்ற இடத்தில் தேசிய அலுமினியம் கம்பெனிக்கு (நால்கோ) சொந்தமான பாக்ஸைட் சுரங்கம் உள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் 100 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்து 80 தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய அவர்கள், பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டதாக காவல்துறை தலைவர் எம்.எம். ப்ரராஜ் தெரிவித்தார்.
சுமார் 10 மணி நேரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் அனைவரும் சுரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு தப்பியோடி விட்டதாகவும், இந்த மோதலில் சிஐஎஸ்எஃப் காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்ஸலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
haran
லண்டனில் உள்ள நக்ஸலைட்டுக்கள் என்ன செய்கிறார்கள்.
பார்த்திபன்
//லண்டனில் உள்ள நக்ஸலைட்டுக்கள் என்ன செய்கிறார்கள்.//
பொலிசார் அவர்களை குறித்த இடத்திலிருந்து வெளியேற்றி விட்டதால், இப்ப தெருவிலை நிற்கிறார்கள்.
kural
நக்சலைட்டுக்கள் தேசவிரோதிகள் இல்லை.அவர்கள் தேசபக்தர்கள் என்று இந்தியஉச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.இந்தியாவில் நக்சலைட்டுகளின் எழுச்சியை வசந்தத்தின் இடிமுழக்கம் தூரத்தில் கேட்கிறது என தோழர் மாசேதுங் குறிப்பிட்டார்.லண்டனில் சில இந்தியவிசுவாசிகளுக்கு இந்த நக்சல்பாரிகளின் எழுச்சி அச்சத்தை கொடுப்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
MUKILVANNAN
SUCH A DEMOCRACY IN INDIA PEOPLE HAVING TOO MUCH FREEDOM THEY EVEN ATTACKS POLICE BUT ITS UNLIKELY IN SRILANKA PEOPLE WILL ARREST,IF THEY RAICE THEIR VOICE AGAINST THE GOVERMENT.
INTERNATIONAL COMMUNITY WAS SILENT FOR LONG TIME, BUT IF ANYTHING HAPPENT IN INDIA IT WILL COME OUT ON ALL NEWS PAPER ALL OVER THE WORLD.
SO INDIA IS RESON FOR EVERY THING.
புண்ணாக்கு
/இந்தியாவில் நக்சலைட்டுகளின் எழுச்சியை வசந்தத்தின் இடிமுழக்கம் தூரத்தில் கேட்கிறது என தோழர் மாசேதுங் குறிப்பிட்டார்.லண்டனில் சில இந்தியவிசுவாசிகளுக்கு இந்த நக்சல்பாரிகளின் எழுச்சி அச்சத்தை கொடுப்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது./… kural
….இது ஒரு புண்ணாக்கு கதை .பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்தவர்கள் தேசபக்தர்கள்தானே!!. நக்ஸல் பாரிகளுக்கு சீன கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு என்பது பழைய கதை. மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்டுகள் பி.ஜே.பி யுடன் கூட்டு வைத்து பாராளுமன்றம் சென்றது வரலாறு. இந்தியாவின் சீன எல்லைப்புர மாநிலங்களில் உள்ள கட்சிகள் இந்திய தேசிய கட்சிகளை பயமுறுத்த (திராவிட கட்சிகள் போன்று)போடும் முகமூடியே “மாவோயிஸ்டுகள்” என்பது. சீன எல்லையில் “நேப்பால்” அமைந்திருப்பதால், இந்திய அதிர்ப்தியாளர்கள் பயன்படுத்தும் கவர்ச்சிச் சொல். சீனாவுடனான எந்த உருப்பிடியான அமைப்புடனும் இவர்களுக்கு தொடர்பில்லை. ”இலங்கைத் தமிழ் இந்திய எதிர்ப்புணர்வாளர்கள்” இந்த “முகமூடியை” போட்டுக் கொண்டு பூச்சாண்டி காட்டப்போகிறார்களா??. இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே ஒரு எல்லை இந்தியாதான்.ஓ… லண்டனின் எல்லையா…..
kural
நக்சலைட்டுக்கள் இந்தியாவில் வறிய மக்களின் விடுதலைக்காக போராடுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.மேலும் பாராளுமன்ற பாதையை நிராகரித்து பாட்டாளிமக்களின் தலைமையில் ஆயுதப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் பற்றி கருத்து சொல்ல முன்னர் குறைந்த பட்சம் அவர்களுடைய வரலாற்றையாவது கொஞ்சம் படித்துவிட்டு சொல்வது நல்லது. 60 களில் இருந்து அவர்கள் தமது போராட்டத்தை உறுதியுடன் நடத்தி வருகின்றனர். எவ்வளவு கொடிய அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டும் அவர்களை இந்திய அரசால் ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது அதிகரித்து வருவதை முதலாளித்துவ ஊடகங்களே ஒத்துக்கொள்ளும்போது சகோதரர் புண்ணாக்கு அவர்களுக்கு ஏன் கொபம் பொத்திக் கொண்டு வருகிறது என்று புரியவில்லை?
/மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்டுகள் பி.ஜே.பி யுடன் கூட்டு வைத்து பாராளுமன்றம் சென்றது வரலாறு/ என்று கூறும் புண்ணாக்கு அவர்கள் அதற்கான ஆதாரத்தை முன்வைப்பாரா?
/சீனாவுடனான எந்த உருப்பிடியான அமைப்புடனும் இவர்களுக்கு தொடர்பில்லை/ சீனாவில் எந்த அமைப்புடன் தொடர்பிருப்பதாக நான் கூறவில்லையே!
மாறாக இந்திய அரசுதான் நக்சல்பாரிகள் சீனாவின் ஊடுருவல் சக்திகள் என்று அபாண்டமாக பழியை சுமத்தினார்கள்.ஆனால் நக்சல்பாரிகள் தேச பக்தர்கள் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதால் அந்த குற்றச்சாட்டும் எடுபடவில்லை என்பதே உண்மை.
/இலங்கைத் தமிழ் இந்திய எதிர்ப்புணர்வாளர்கள்” இந்த “முகமூடியை” போட்டுக் கொண்டு பூச்சாண்டி காட்டப்போகிறார்களா??. / நாம் பூச்சாண்டி காட்டத்தேவையில்லை. நக்சல்பாரிகள் பற்றி ஒருசில வரிகள் எழுதியவுடனே கோபம் வருகிறது என்றால் அந்த இந்தி விசுவாசிகளின் நக்சலைட்டு குறித்த கிலி பற்றி பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
kumar
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள்.இந்தியாவில் நக்சலைட்டுக்கள் தாக்குதல் நடத்தினால் லண்டன் வாழ் இந்திய விசுவாசிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.என்னதான் வேடம் போட்டு வந்தாலும் அவர்கள் அம்பலப்படுவதை தவிர்க்கமுடியாது.இது புரட்சியைக் காட்டிக்கொடுக்கும் வர்க்க குணாம்சத்தின் வெளிப்பாடுபோலும்.