மொனராகலை, புத்தல பிரதேசத்தில் நேற்றிரவு (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்படடவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகிரித்துள்ளது.புத்தல, மஹகொடயாய கிராமத்துக்குள் திடீரெனப் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறு என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது கொல்லப்பட்டோர் ஒன்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயலில் வேலை செய்து விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திருப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.கொல்லப்பட்டவர்களில் 3 பெண்களும் 3 சிறுவர்களும் அடங்குவர். ஓரு வயோதிப பெண் காயமடைந்தார். இந்தத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்தது.
jaffna man
அரசு செய்வது இனப்படுகொலை: புலி செய்வது…..??
சர்வதேசம் நிச்சயம் நம் பிரச்சினையை கவனத்திற்கெடுக்கும். நல்லா கவனயீர்ப்புப் போராட்டம் செய்யுங்கோ.