பிறக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டில் அனைத்தின மக்களிடையேயும் இன, ஜக்கியம் இனஒருமைப்பாடு என்பவற்றை ஏற்படுத்தி நிலையான சமாதானமும் சகோதரத்துவமும் ஏற்ப்பட்டு எம் இலங்கைத் திருநாட்டில் புதியதோர் மாறுதலை உண்டு பண்ண வழிவிடட்டும். வன்னிப் போரின் அவலநிலை காரணமாக அகதிகளாக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள என் இனிய உறவுகள் கூடிய விரைவில் தங்களுடைய வாழ்விடங்களுக்குச் சென்று நிம்மதியான வாழ்வை நாடத்த மலரும் புத்தாண்டு வழிசமைக்கும் என்பதில் திடமான உறுதி கொண்டுள்ளேன்.
நாட்டில் தடம்புரண்டு நிலைகுலைந்து கிடந்த இனஜக்கியம் ஒருமைப்பாடு புரிந்துனர்வு என்பவற்றை மீண்டும் ஓர் எழுச்சி நிலைக்கு இட்டு செல்ல என்குகோர் சந்தர்ப்பத்தினை அளித்த கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு இம் மலரும் புத்தாண்டில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
எமது நாட்டில் புரையோடிப் போயுள்ள அனைத்து இனமுரன்பாடுகளும் அனைத்து மக்களையும் சாதி மத பேதமின்றி வெகுவாக பாதித்துள்ள நிலை தளர்ந்து புதியதோர் பேதம் அற்ற சமூகத்தினை தோற்றுவிக்க மலரும் புத்தாண்டு வழி விடட்டும்.
எம் தேச மக்களுக்கு மலரும் புத்தாண்டு அமைதி, சமாதானம், அபிவிருத்தி எனும் உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்க வழியமைத்துக் கொடுக்கும் என்பதில் அனைத்து மக்களும் உறுதி பூணுவோம். சிதைந்து போய் கிடக்கும் எமது நாட்டை கடடியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற கரம் நீட்டி எழுவோம்.