தேர்தல்களை பிற்போடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளிற்கு மேற்குலகம் ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஒன்பது பேர் – மறைக்கப்பட்ட கதை என்ற தனது நூலின் ஆங்கில ரஸ்ய மொழிபெயர்ப்பை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மாகாணசபை உள்ளுராட்சி தேர்தல்களை காணாமல் ஆக்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல்களிற்கும் அதனை செய்வது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு முடியாத விடயமல்ல. தேசிய தேர்தல்களை பிற்போடுவதற்கு ஏற்ற விதத்தில் வன்முறையான சூழல்ஒன்று உருவாக்கப்படலாம் மேற்குலகம் அதற்கு உதவலாம்.
வாக்காளர்களை தன்னால் கவரமுடியாது என்பதால் தேர்தல்களை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி உறுதியாக உள்ளார். கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகிய பின்னர் தன்னை( சபாநாயகரை ) ஜனாதிபதியாக்க அமெரிக்க தூதுவர் முன்வந்தார் என்ற எனது குற்றச்சாட்டை சபாநாயகர் இன்னமும் மறுக்கவில்லை.
இந்த நூல் வெளியீடு அன்று ஏப்பிரல் 25 ம் திகதி நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இன்னமும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை ஜனாதிபதியின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து நேர்மையான எதிர்கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வராவிட்டால் நாடு மீளமுடியாத பலவீனமான பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.