புத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டில் இன்றும் நாளையும் இரவுநேர ஊரடங்கு நீக்கப்படுவதாக பலாலி படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. புதுவருடத்தை ஒட்டி இந்துக்கள் ஆலயங்களில் இடம்பெறும் பூசை மற்றும் சமய நிகழ்வுகளில் பங்குபற்ற வசதியாக ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.