ஹமாஸுடனான போருக்கு மத்தியில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் பணியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அந்நாட்டின் அரசாங்க செய்தி தொடர்பாளர் அயூப் காரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அல் ஜசீரா அலுவலகங்களை மூடுவதற்கும் அவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கும் அரபு நாடுகளின் நடவடிக்கையின் அடிப்படையில் எங்கள் முடிவை மேற்கொண்டுள்ளோம்.
வன்முறையை மேற்கொள்ளும் முகமாக இந்த ஊடகம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை, அந்நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.