பாதுகாப்பு பிரதேசத்தில் இன்றும் 18 பொதுமக்கள் காயங்களுடன் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்களில் அனேகமானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. உணவுப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதனால், அங்குள்ள மக்கள் பெரும் கஸ்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு சில கடைகளே இருப்பதாகவும் அவற்றில் – ஒரு கிலோ அரிசி 300 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோதுமை மா 350 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், வெங்காயம் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும், பால் மா பக்கட் ஒன்று (440 கிராம் நிறையுடையது) 2200 ரூபாவுக்கும், மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tax
தேங்காய் 1500ரூபா
மிளகாய் 8000
உள்ளி 15000
மீன் ஒருகிலோ 1500
அரிசி 280
சீனி 2000
மா 600
லக்ஸ்பிறே 1300
பனடோல் ஒரு காட் 100
யப்பான் மீன் 1500
ஒரு பவுண் நகை 4500
லப்ரொப் 800 ரூபா
மோட்டார் சைக்கிள் 1700
பாண் இல்லவே இல்லை. இன்றைய வன்னியின் விலை விபரம்.
பார்த்திபன்
புலத்தில் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் இதற்குரிய காரணத்தை விளக்குவார்களா?? அரசினாலும் ஏனைய உதவி நிறுவனங்களாலும் இலவசமாக வழங்கப்பட்ட உணவுப்பொருட்களை யார் இப்படி அறாவிலைக்கு விற்பனை செய்கின்றார்கள். கிடைத்த உணவுப் பொருட்களைப் பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கி பணம் சம்பாதிப்பதை குறி வைத்தது யார்??
மாயா
இதெல்லாம் வாயில மண் கப்பலில லண்டனில இருந்து கொண்டு வந்த பொருட்கள் பார்த்திபன்? சிறீலங்காவிலயிருந்து லண்டனுக்கு ஏத்தி, அங்கயிருந்து புதுக்குடியிருப்புக்கு கப்பல்ல கொண்டு வாறதேண்டா லேசுப்பட்ட வேலையில்லை? பெற்றோல் காசு வேற எகிறிப்போச்சு.
__________
அவன் அடிக்கவேயில்லை என்கிறான்
இவங்க அடிச்சு ஆக்கள் செத்தாங்கள் என்கிறாங்கள்
இதில எது உண்மையில உண்மை?
பார்த்திபன்
அட ஆச்சரியமாயிருக்கு. கப்பல் கடலிலை வராமல், காற்றிலை வந்து சேர்ந்திட்டுது போல……