தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகாவை செயற்கை நுண்ணறிவின் (AI) ஊடாக வடிவமைத்துள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தன்று, செயற்கை நுண்ணறிவின் ஊடாக வடிவமைக்கப்பட்ட துவாரகாவை, உயிருடன் இருப்பதை போன்று வெளிப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிய வருகின்றது.
மாவீரர் தினத்தன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் சிறப்புரையாற்றுவது வழக்கம்.
இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நோர்வேயில் உள்ள மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் நெடியவன் என்கிற பேரிம்பநாயகம், நோர்வேயில் இருந்து விடுதலைப் புலிகளை மீட்டெடுக்க பல தடவைகள் முயற்சித்த போதிலும் புலனாய்வு அமைப்புகள் அதனை முறியடிக்க முடிந்ததுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது