அமெரிக்காவின் வேர்மன்டில் உள்ள பல்கலைகழகமொன்றிற்கு அருகில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
வேர்மன்ட் பல்கலைகழக வளாகத்தில் நபர் ஒருவர் பாலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அராபிமொழியில் உரையாடிக்கொண்டிருந்தவேளை அராபிய ஸ்கார்வ் அணிந்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார் சந்தேகநபரை தேடிவருகின்றோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்ள்ளனர்.