மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்களுக்கு வரி விலக்கு – அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன

பெறுமதி சேர் வரி பூச்சியத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவில்லை. 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படுகிறது. இது தொடர்பில் போலியான செய்திகள் பகிரப்படுகின்றன. மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (12)  இடம்பெற்றபோது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய 15 சதவீதமாகக் காணப்பட்ட வற் வரி 3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், இரசாயன உரம், மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற 43 பொருட்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. வற் வரி தொடர்பில் போலியான தகவல்கள் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பரப்பப்படுகின்றன.

வரவு மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையிலேயே இம்முறை வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அரசாங்கத்தை நிர்வகித்துச் செல்ல முடியாது. யார் ஆட்சியைப் பொறுப்பேற்றாலும் இரு வாரங்களுக்கு மேல் அவர்களால் ஆட்சியைக் கொண்டு செல்லவும் முடியாது.

இந்தியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் என்பவை எமக்கு கடன் சலுகைகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வற் வரியை குறைக்க முடியும். அதற்கமைய முடிந்தளவு மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *