இலங்கை பாராளுமன்றத்தை நடாத்த நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா செலவு !

பாராளுமன்றத்தை நடத்த ஒரு நாளைக்கு   ஒரு கோடி ரூபா  செலவிடப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே  ஞாயிற்றுக்கிழமை விவாதத்தை  ”கூட்ட நடப்பெண்” கோரி இடைநிறுத்தியதாக  அரச தரப்பின் பிரதம கொறடாவும்  அமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க  குற்றம்சாட்டினார்.

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய  முன்னெடுக்கப்படும் – Presidential Secretariat of Sri Lanka

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த  கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

டிசம்பர் 20ஆம் திகதி திங்கட்கிழமை சபை நடவடிக்கைகளின் அறிக்கை என்னிடம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக்கிழமை வற் வரி சட்டமூலம் மீதான பாராளுமன்ற  விவாதம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தை நடத்த ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா  செலவிடப்படுகிறது. ஆனால் இந்த விவாதத்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் விவாதத்தை நடத்த விரும்பினோம்.

பாராளுமன்ற ஊழியர்கள்   தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இது எளிதானது அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இந்த விவாதத்தை முறியடித்தன.

அதனால் தான் அவர்கள் ”நடப்பெண்” கோரினார்கள்   எதிர்க்கட்சியினர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர் என்றார்.

இதன்போது எழுந்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  பிரசன்ன ரணதுங்க  சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்துகிறார்.

தெரிவுக்  குழுவின் போது விவாதத்தை நடத்துவது எதிர்க்கட்சியின் பொறுப்பு. ஆனால் ஞாயிற்றுக்கிழமை  குழுநிலை நிகழ்வு அல்ல என்றார்.

மீண்டும் எழுந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ,  எதிர்க்கட்சித் தலைவருக்கு புத்தி சாதுர்யம் இல்லை என மக்கள் கூறுகின்றனர்.

நான் அதை ஏற்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுத்தான் ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் விவாதம் நடத்துவோம் என்று தான் நாங்கள் சொன்னோம் என்றார்.

இதன்போது சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன, தயவுசெய்து இந்த விவாதத்தை நிறுத்துங்கள். இன்றும் நேரத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள் என்றார்.

மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பேசுவதற்கு உரிமை உண்டு. எங்களுக்கும் பதில் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல் வரான , அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   இந்த குழுநிலையில் எதிர்க்கட்சிகளுக்கு நேரம் கிடைக்கும். அது  குறையாது. அது முடிந்தவுடன், ஞாயிற்றுக்கிழமையின்  மீதி நேரம்   எடுக்கப்படும்  என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *