மதிமுக பொதுச்செயலாளர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியி தான் போட்டியிடும் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘’என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக்கேட்க வேண்டும். இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை” என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு; தோழமை. மக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கோபத்தில் உள்ளனர். அதனால் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்று பேசினார்.
ramesh
மாரிகாலம் வந்தால் தவளை கத்தும். தேர்தல் காலம் வந்தால் வை.கோ கத்துவார். எதற்கும் இலங்கைத் தமிழன்தான் துரும்பா?
msri
வெளியில் ஜெயலலிதாவோடு சேர்ந்து ஓங்கி ஒலித்தாச்சு! இனி பாராளுமன்த்தில் ஓர் ஒலிப்பு!
msri
இலங்கை இந்தியப் பாராளுமன்த்தில் சட்டசபையில் எக்கசசக்கமானபேர் பேசி முடிவுக்கு வராத பிரச்சினை> இவர் ஓங்கி ஒலிக்க முடிவுக்கு வந்துவிடுமாம்! இதை நாங்கள் நம்பவும் வேண்டும்!
பார்த்திபன்
ஜெயலலிதாவிடம் ஒரு சீட் கூடக் கேட்டு ஓங்கிக் குரல் கொடுத்தும் பார்த்தவர். கடைசிலே காலிலே விழுந்து தருவதை வாங்கி சரண்டரானவர். நாளை டெல்லியில் போய்க் குரல் கொடுத்து……. ம்..ம் “கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போற கதை சொல்வானாம்”.