தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று புதன்கிழமை இரவு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக புதுடில்லிக்கு நேற்று சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களே எம்.கே.நாராயணனை நேற்றிரவு சந்தித்துப் பேசினர்.
கூட்டமைப்பு எம்.பி.ஆர்.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, இலங்கைப் படையினர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும் போர்நிறுத்தம் குறித்து இந்திய தரப்பில் உறுதியான பதிலெதுவும் வழங்கப்படவில்லை யெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று வியாழக்கிழமை சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்திய அரசு தரப்பை சந்திக்கக் கூடாதென கூட்டமைப்பு எம்.பி.க்களில் பெரும்பான்மையோர் வலியுறுத்தி வந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
மாயா
இது பகல் கொள்ளைக் கூட்டம்.
பார்த்திபன்
சிவசங்கர்மேனனுடனான சந்திப்பிலேயே கூத்தமைப்பினருள் பல முரண்பாடுகள். இந்த இலட்சணத்தில் இவர்கள் தமிழர்களின் தீர்வுக்காக பேசப் போறார்கள். எங்கே போய் முட்டுவதோ??
palli
பார்த்திபன் சந்திப்பில் மேனன் புலிகளை அழித்து விட்டுதான் உங்களிடம் பொறுப்பை தருவதாக சொன்னபோது சம்பந்தர் சேனாதி முகத்தில் லேசான சிரிப்பு தெரிந்ததாக தமிழக செய்தி. கூட்டமைப்பு பலது புலி விட்டு புறப்பட தயாரான நிலையில் தமிழகத்தில்.