இலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால் தான் இலங்கைப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை : “போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபட்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.
ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது. ஈழத் தமிழர்களை ராஜபட்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
உங்களைப் போல் பிரபாகரனுக்கு எடுபிடியாக இருந்திருக்கலாமென்று யோசிக்கின்றீர்கள் போல..
palli
ஜயா தாங்கள் தமிழர் மீது அன்பு கொண்டவர்தான். அதனால் தம்பி பிரபாவிடம் இரு வார்த்தை சொல்லுங்கோ.
தம்பி மக்களை வாழ விடு.
அதனால் மக்களை வெளியேற விடு.
சில வேளை ஜயா சொன்னால் தம்பி கேப்பாரெல்ல.
thurai
//ஈழத் தமிழர்களை ராஜபட்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன்//
இலங்கை இராணுவத்தின் நண்பர்களாக புலிகழும் இருக்கின்றார்கள் என்பதையும் கூறியிருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். இராணுவம் குண்டுபோட்டுக் கொல்கிறார்கள், புலிகள் தப்பி ஓடுவோரை தலையில் சுட்டுக் கொல்கிறார்கள்.
துரை
msri
சில புலியெதிர்பாளர்கள் போல் நெடுமாறனும்>கர்னகடுர புலி எதிர்பாளர்களிடம் புலி பிழை அதற்கு பதில் உங்களிடம் உள்ள மாற்று எதுவெனக் கேட்டால் மெளனமே பதில்! காங்கிரசையும் கருணாநிதியையும் தோற்கடியுங்கள் என்கின்ற நெடுமாறனிடம் இதற்கு மாற்றெதுவெனக் கேட்டால் 2-வது 3-வது 4- அணியென சொல்வாரா? சொல்லலாமா? புலிகளின் “கொள்கை பரப்புச் செயலாளரும” (நடேசன்) அண்மையில் தமிழக மக்கள் உரிய நேரத்தில் உரியதை செயவார்களென இதையே நாசுக்காக சொல்லியுள்ளார்! தமிழ்மக்கள் பிரச்சினையில் இந்தியக் கட்சிகள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே! இது நெடுமாறனுக்கும் புலிக்கும் தேர்தல் முடியத்தெரியும்!