ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அவருடன் படை உயரதிகாரிகளும் கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.
கிளிநொச்சியில் படையினருடன் புத்தாண்டு நிகழ்வுகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முப்பது வருடங்களின் பின்பு இலங்கை அரசுத் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தமது விஜயத்தின்போது, கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து படையினருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
palli
இதுக்கும் அம்பலவாணரின் உண்ணா நோம்புக்கும் பல்லிக்கு வேறுபாடு தெரியவில்லை. இரண்டுமே பகட்டுதான்.
பார்த்திபன்
இல்லை பல்லி இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
“கிளிநொச்சியில் ராஜபக்ஸவிற்கு காவலர் பாதுகாப்பு. சுவிசிலை அம்பலவாணருக்கு காவலர் ஆப்பு”.