“அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.” – அமைச்சர் டக்ளஸ்

“அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

“நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாகச் கூறி வருகின்ற எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளும் தற்போது வந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதனைத் ஏற்க மாட்டோம் என்று கூறியவர்கள் இன்றைக்கு அது வேண்டும் என கலந்துரையாடல் நடத்துகின்றனர்.

 

இதனூடாக அன்று முதல் இன்று வரை உண்மையையும் சாத்தியமானதையுமே நாம் கூறி வருகின்றோம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது அன்று நாம் சொன்னதை நிராகரித்தவர்கள் இன்று அதுவே சரியானது என ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனையே வழங்கக் கோருகின்றமை காலம் கடந்த ஞானம்.

 

எமது மக்களின் பிரச்சினைகளை மேதாவித்தனத்தோடு அணுக முற்பட்டால் இழப்புத்தான் ஏற்படும். ஆகையால் அதிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான வழியில் எடுதுரைத்தால் வெற்றி பெறலாம் என்பது எனது அனுபவம்.

 

குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆனால், மற்றக் கட்சிகளிடம் அப்படியான ஒரே கொள்கையோ அல்லது வேலைத்திட்டங்களோ இல்லை.

 

உண்மையில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை விட அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்பாவி மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.

 

இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தபோது நான் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தேன்.

 

 

குறிப்பாக அவர் சார்ந்த கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பிலும், அந்தக் கட்சியின் முன்னைய தலைவர்கள் செய்த விடங்கள் குறித்தும் கூறியிருந்தேன்.

 

 

அன்று அவ்வாறு எல்லாம் செயற்பட்டவர்கள்தான் இன்றைக்கு வீர வசனங்களைப் பேசி அரசியலைச் செய்கின்றனர் என்றார்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *