சென்னையில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில்,
கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறான பொருளாதார கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவு தந்தார். அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து எங்களுடன் சேர்ந்து பேராடினார்.
இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றார். இந்த தேர்தல் தமிழகத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டு மக்களை காப்பாற்றும்படி இல்லை. எனவே, அந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.