இவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் ஆயிரம் மினி கோப் சிட்டிகள் அமைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 500 மினி கோப் சிட்டிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறினார். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் பாரிய மாற்றங்களையும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் எமது அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மூவாயிரம் இலட்சம் ரூபா செலவில் 104 லக் சதோச, 300 இலட்சம் ரூபா செலவில் 363 கோப் சிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 1000 மினி கோப் சிட்டிகள் நிறுவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களும்; நிறுவப்பட்டு வருகின்றன.
பருப்பு, சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்; புத்தாண்டு காலங்களில்; லக் சதோச வண்டிகள் மூலம் பொருட்கள்; விற்பனை செய்யும் நடமாடும் சேவையையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுளளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.