அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நாட்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் தவறாது 210 தினங்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. அதற்கேற்ப பரீட்சை தினங்களிலும் பாடசாலைகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
210 தினங்கள் அரசாங்க பாடசாலைகள் நடைபெறும் விதத்தில் க. பொ. த. சாதாரண தரம், உயர் தரம் பரீட்சைகள் நடைபெறும் தினங்களிலும் வகுப்புக்களை நடத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அரசாங்க பாடசாலைகள் சரியாக 210 தினங்கள் நடைபெற வேண்டும் எனினும் எந்த வருடத்திலும் குறிப்பிடப்பட்ட 210 தினங்கள் பாடசாலைகளை நடத்த முடிவதில்லை. பிரதானமாக க. பொ. த. சாதாரண தர, உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் நீடிப்பதாலேயே இவ்வாறு நடத்த முடிவதில்லை. குறிப்பிட்ட 210 தினங்கள் பாடசாலைகள் நடத்தப்படாமையால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை சரிவர பூர்த்தி செய்ய முடியாத நில ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்