2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும் விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்ன நடக்கப்போகின்றது நான் என்ன நடக்கலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் எங்கள் தலைவர் யார் என்பது மிகவும் முக்கியமான விடயம் நாங்கள் யாரை தெரிவு செய்கின்றோம் யார் எங்களிற்காக பேசப்போகின்றார் என்பது முக்கியம் என மிச்செல்ஒபாமா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்கள் எதனையும் செய்யவில்லை மக்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் முதல் பெண்மணி அரசாங்கம் எல்லாவற்றையும் எங்களிற்கு செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி ஜனநாயகத்தை நாங்கள் சில வேளைகளில் அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ள சூழலிலேயே மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
ஜனநாயகத்தின் எதிர்காலத்தை இந்த வருட தேர்தலே தீர்மானிக்கும் என்ற செய்தியை பைடன் முன்னிறுத்திவருகின்றார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் பைடனிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக கட்சியினர் பைடனின் செய்தி மக்களை சென்றடையவில்லை என தெரிவித்து வருகின்றனர்.