ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பிரதேச பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவருக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அதே பாடசாலையின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு கற்கும் மூன்று மாணவிகள் மீது தொல்லைகளைப் பிரயோகிக் முயற்சித்ததாகவும் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த அந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகித்தால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சந்தன கமகேவின் உத்தரவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.