போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 596 ஆண்களும் 17 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 342 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 332 ஆண்களும் 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 84 கிராம் ஹெரோயின் , 32 கிராம் ஐஸ் , 168 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 68 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 66 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 கிராம் ஹெரோயின் , 555 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 133 கிராம் 911 மில்லிகிராம் ஹெரோயின், 177 கிராம் 616 மில்லிகிராம் ஐஸ் , 2,204 கிராம் 479 மில்லிகிராம் கஞ்சா , 50 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 126 சந்தேக நபர்களும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.