அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. அதற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர்.
முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது. 4/2 என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
வெட்கம் சபாநாயகர் அவர்களே! என்று குறிப்பிட்டுள்ளது.