புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ ஒருபோதும் முடியாது
எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ அவற்றின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்து நாட்டைப் பாதுகாக்க முன்வருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். மேல் மாகாண ஐ.ம.சு.மு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உங்களைப் போன்ற மூன்று இளைஞர்களின் தந்தையாக இருந்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமைப்படுகின்றேன். உங்கள் மத்தியில் இருக்கும் துடிப்பையும், எதையாவது புதிதாக செய்யவேண்டு மென்ற ஆர்வத்தையும் நானறிவேன்.
இந்நாட்டின் எதிர் காலத்தைப் பொறுப்பெடுக்கவிருப்பவர்கள் நீங்களே, உங்களைப் போன்ற பருவத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். மிகவும் குறைந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானேன்.
தாய் நாட்டின் மீது பற்றுள்ள இளம் சமுதாயத்தினரே புலிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த வடக்கையும், கிழக்கையும் விடுவித்திருக்கின்றனர்.
நாட்டின் இளம் சமுதாயத்தினர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற சமயம் நான் புரிந்துகொண்டேன். திருமலை கடற்படை முகாமிலும், விமானப்படை முகாமிலும் நடைபெற்ற வைபவங்களில் கலந்துகொண்ட வேளையிலும் இதனை நான் அறிந்துகொண்டேன்.
இலட்சக்கணக்கான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவது வேறு தொழில்களில் ஈடுபட முடியாமல் அல்ல. மாறாகத் தாய் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்று காரணமாகவே அவர்கள் இவ்வாறு இணைகின்றனர்.
இளம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு நாட்டையும், சமுதாயத்தையும் உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.
அவர்களது எதிர்பார்ப்புக்கள் இனம்காணப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுபானத்திற்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் மூலம் நல்லொழுக்கமுள்ள சமுதாயம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவரும் அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எனது நோக்கமாகும் என்றார்.
Adam L.S
ஜனாதிபதியின் வாதமும் சரியானதுதான் பலமுறை யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் இரானுவத்தினரும் புதுவருட கொண்டாட்டங்களை கிளிநோச்சியில் கொண்டாடியதானது புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் மிகப்பெரும் அடியாகும். யுத்த முனையில் இரானுவத்தினர் எந்தவித அச்சுருத்தலுமின்றி அழகாக விளையாடிக் கொண்டிருந்தனர் இது இலங்கையின் மேற்கில் அல்ல புலிகளின் தலைநகரில் எனவே இதன் அர்த்தம் புலிகளால் இனி எதையும் கிழிக்க முடியாது என்பது மட்டுமே.
புதைத்துவைத்த ஆயுதம் முதல் கையில் வைத்திருந்த ஆயுதங்களை மட்டும் பிரபாகரனால் காப்பாற்ற முடியாமல் போகவில்லை தனது குடும்பத்தின் புகைப்பட அல்பத்தைக் கூட அவரால் காப்பாற்ற முடியவில்லை என்றால் இனி புலிகளின் பலம் எங்கேயிருக்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது.
இல்லாத ஒன்றை ஏன் காப்பாற்ற வேண்டும்! தற்போதைய புலிகளின் நிலையை ரஜனிகாந்த் ஸ்டைலில் சொன்னால்;
கெட்டவர்களுக்கு இறைவன் நிறையக் கொடுப்பான் ஆனால் கைவிட்டு விடுவான்! எனலாம்.
தற்போது அப்பாவி மக்களுக்குள் புலிகள் தங்களின் வீரத்தைக் காட்டாமல் மக்களை விடுவித்துவிட்டு சுற்றிவலைத்திருக்கும் இரானுவத்தினரிடம் வீரத்தைக் காட்டலாமே!
ஜனாதிபதி சொன்னதைப்போல புலிகளிடம் ஒரு மணிநேரத்திக்கு தனது துப்பாக்கிகளை மக்களின் நெஞ்சிலிருந்து தாழ்த்தி மக்களை விடுதலை செய்ய புலிகளின் தலைவரைக் கோருங்கள்.. அதன்பின் புலிகள் யுத்தத்தில் தாக்குப்பிடித்தால் நிரந்தர யுத்த நிறுத்தத்திற்காக நாங்களும் உங்களுடன் கொடிபிடிக்கிறோம்.
தனது குடும்ப போட்டோ அல்பத்தைக் காப்பாற்ற முடியாத தலைவர் தமிழினத்தை காப்பாற்ற போகிராறாம்……….. Joke of the day.
நன்றி.
mukilvannan
IN SRILANKA ONLY JOB IS AVAILABLE IN MILITARY,DO YOU CREATE ANY JOBS OTHER THAN MILITARY,YOU AND YOUR FAMILY MAKING MONEY BUT LOOK ORDINARY PEOPLE THEY STRUGLE IN THEIR EVERY DAY LIFE.YOU MIGHT GONE IN FEW YEARS TIME BUT SRILANKA DEPT STIL REMAIN,WHO GOING TO PAY ALL THIS LOANS YOU GETTING FROM THE WORLD.
OKAY,YOU WON THE WAR AGAINST THE TAMILS,TELL ME WHAT SOLUTION YOU HAVE FOR THEM? ITS SEEMS TO BE YOU MAY LEAVE THAEM IN THE CAMPS. IS THAT FAIR FOR TAMILS? THIS IS NEVER ENDING WAR MAKINDA YOU BETTER RESIGN AND GIVE IT TO SOME ONE BETTER THAN YOU,PLEASE NOT YOUR BROTHERS GOTH PAYA OR KITTUL.