35000 மக்கள் மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு : பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு

puthu.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து 35000 மக்களை காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி இன்று மாலை தெரிவித்தார். மேலும் இந் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், தற்கொலைத் குண்டுத்தாக்குதல்  மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  காயப்பட்ட 17 பேர் விமான ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு 

 “24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”

இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். விரைவில் ஒட்டு மொத்த மக்களையும் மீட்டு விடுவோம். விடுதலைப்புலிகள் முற்றிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

பிரபாகரனுக்கு 24 மணி நேரம் கெடு விடுக்கிறோம். அவரும் அவரது குழுவினரும் அதற்குள் சரணடைய வேண்டும். இல்லை என்றால் எங்கள் படை அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் : புதுமாத்தளன் மேற்கு பகுதிமண் அரணின் 3 கி.மீ. படையினர் வசம் 
 
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் அரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் வரும் பொதுமக்கள் மீது இன்று 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் 24 மணி நேர காலக்கெடுவினை அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த காலக் கெடு நாளை நண்பகலுடன் முடியவடையவுள்ளது.

civiling_flee_vanni_01.png

civiling_flee_vanni_02.png

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Comments

  • www.news.lk
    www.news.lk

    Monday, 20 April 2009

    35,000 civilians escape, LTTE complete defeat imminent – President

    More than 35,000 civilians fled the last area under the control of Sri Lanka’s cornered LTTE today, President Mahinda Rajapakse said, adding that the rebels’ “complete defeat” was imminent.

    Showing aerial video from a military spy plane over the tiny area where the Tigers are staging a last stand, President said 35,000 non-combatants had crossed the lines into government-held territory since early this morning (20).

    The President Mahinda Rajapaksa made a sudden visit to the Air Force Headquarters to observe the civilians cross over from war zone area to Government control areas.

    “The footage clearly shows that the people are defying the rebels and escaping. They are running to safety. The process of the complete defeat of the LTTE has just begun, it is now all over for the Tigers,” the president said.

    The government has accused the Liberation Tigers of Tamil Eelam of using trapped civilians as a human shield, and the president suggested that their escape removed a final obstacle to an all-out military assault.

    Latest reports received from the Sri Lanka Army 58 Division indicate that over 35,000 civilians held hostage by LTTE terrorists at Puthumathalan and Amplalavanpokkani areas have been liberated. According to the sources, several thousands of others are waiting them to be rescued by the armed forces. All hostages held in Ampalavanpokkanai and Valayanmadam areas have been rescued, the sources added.

    The mass rescue operation reached a significant phase when troops captured the 3 km long earth bund built by the LTTE, on the western border of the No Fire Zone this morning. With this capture troop opened a safe route for the hostages to come out of the LTTE grip which was occupied by thousands of civilians seeking refuge with the soldiers.

    Meanwhile, defence sources on the field said that LTTE terrorists have launched a cowardly attack at the Tamil civilians leaving their grip and three LTTE suicide cadres have exploded themselves killing dozens of refugees including women and children.

    The terrorists initially fired at the civilians on the causeway using heavy machine guns, when they stepped into the lagoon to avoid LTTE machine gunfire, three LTTE cadres ran on to civilians and exploded themselves.

    Sri Lankan soldiers have been able to rescue several thousands of civilians held hostage by the LTTE terrorists in the government declared No Fire Zone.

    According to the defence sources , troops have been able to open up a safe route for the civilians to come out of the NFZ after the soldiers of 58 Division successfully destroyed the LTTE fortifications in the Puthumathalan area.

    Troops of 11 Sri Lanka Light Infantry (11 SLLI), 9 Gemunu Watch (9 GW), 8 Gajaba Regiment (8 GR), Special Force (SF) and Army Commandos (CR) captured 2 1/2 Km long stretch of LTTE built earth bund in the Puthumathalan area early this morning destroying the terrorists’ ability to attack the civilians seeking refuge with the armed force.

    As the rescue operation continued piercing the earth bund, Tiger terrorists as usual started firing artillery and mortars from the inside of the “No Fire Zone” towards the fleeing civilians.

    Reply
  • defence.lk
    defence.lk

    World’s largest hostage rescue mission becomes success; over 30,000 rescued

    Latest reports received from the Sri Lanka Army 58 Division indicate that over 30,000 civilians held hostage by LTTE terrorists at Puthumathalan and Amplalavanpokkani areas have been liberated. According to the sources, several thousands of others are waiting them to be rescued by the armed forces. All hostages held in Ampalavanpokkanai and Valayanmadam areas have been rescued, the sources added.

    The mass rescue operation reached a significant phase when troops captured the 3 km long earth bund built by the LTTE, on the western border of the No Fire Zone this morning (Apr 20). With this capture troop opened a safe route for the hostages to come out of the LTTE grip which was occupied by tens of thousands civilians seeking refuge with the soldiers.

    Meanwhile, defence sources on the field said that LTTE terrorists have launched a cowardly attack at the Tamil civilians leaving their grip. Defence.lk special correspondent in the area said that three LTTE suicide cadres have exploded themselves killing dozens of refugees including women and children.

    “The terrorists initially fired at the civilians on the causeway using heavy machine guns. When they stepped into the lagoon to avoid LTTE machine gunfire, three LTTE cadres ran on to them and exploded themselves”, he said.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    புதினம் இணையத்தள தகவல்

    சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: 988 தமிழர்கள் படுகொலை

    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

    அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.

    Reply
  • dailymirror.lk
    dailymirror.lk

    Please watch this video, Tamils who are trapped in Mullaitive escape LTTE control area
    UAV footage of civilians fleeing LTTE areas

    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=46555

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    35 000 மேற்பட்ட மக்கள் அரசினால் மீட்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் GTV தனது நிகழ்ச்சியில் இலங்கையில் இன்று 1 000க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் பல்லாயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் 35 000 மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டதாகவும் திரும்பத் திரும்ப புரளியைக் கிளப்பி மேலும் மேலும் தமிழர்களை முட்டாளாக்கிய வண்ணமேயுள்ளது. இதற்கு பல்லவி பாட சில நேயர்களும் தமது பங்கிற்கு கதை விடுகின்றார்கள். உண்மையில் GTV யின் இந்தப் புலுடாக்களை ஒளிப்பதிவு செய்து மொழிப் பெயர்ப்புகளுடன் சுவிஸ் அரசிற்கும், பிரித்தானிய அரசிற்கும் வழங்கி நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும். காரணம் இரு நாடுகளிலுமே GTV யின் ஒளிபரப்பு அலுவலகங்கள் இயங்குகின்றன.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறிவரும் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். “தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன” எனப் பெயர்குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரியொருவர் கூறியிருப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இராணுவப் பேச்சாளர் உடனடியாக கருத்துத் தெரிவிக்காவிட்டாலும், மேலும் இரண்டு இராணுவ வட்டாரங்கள் இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    இதேவேளை, இராணுவத்தின் 11வது காலாற்படை, கெமுனு வொட்ச் 9, கஜபா ரெஜிமன்ட் 8, விசேட படையணி மற்றும் இராணுவக் கொமாட்டோப் படையணி ஆகியன இணைந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்பு வலயமான புதுமாத்தளன் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அணையின் இரண்டரைக் கிலோ மீற்றரைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.

    Reply
  • ஓர் இலங்கைத் தமிழன்
    ஓர் இலங்கைத் தமிழன்

    GTV, புதினம் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்.

    படையினரின் நடவடிக்கைகளில் மக்கள் சாகவே இல்லை; காயம் மட்டும் பட்டுவந்தனர். அவ்வாறு காயம்பட்டவர்களை கடற்படை உதவியுடன் திருகோணமலைக்கு மீட்டுவிட்டனர்.

    புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியே மக்கள் சாகிறார்கள். படையினரின் ஆயுதங்கள் படையினரை மட்டுமே தாக்குகின்றன.

    இன்றைய தாக்குதல்களில் சுமார் 2,000 புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

    கடந்த மாதங்களில் சுமார் 30,000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரம் புலிகள் விரைவில் கொல்லப்படுவர்.

    சுமார் ஒரு லட்சம் மக்கள் காப்பாற்றப்படுவர். ஒரு லட்சம் புலிகள் கொல்லப்படுவர்.

    இந்தத் தகவல்களை சுவிஸ், பிரித்தானிய அரசுகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    TODAY SRILANKAN GOVERMENT HAS BEEN KILLED MORE THAN THOSANDS INNOCENT TAMIL CIVILIONS.THIS IS PAINFUL AND HURT FULL. AER WE HEARD? WHERE ARE YOU INTERNATIONAL COMMUNITY? ARE WE FORGOTTEN RACE IN SRILANKA?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புதுமாத்தளன் பகுதியிலிருந்து வெளியேறும் பல்லாயிரக் கணக்கான மக்களின் ஒளித்தொகுப்பு

    http://www.youtube.com/watch?v=dhLTd_55-2E&eurl=http%3A%2F%2Flive%2

    Reply
  • ramesh
    ramesh

    பிரபாகரன் வன்னியில் இருந்தாலல்லோ சரணடைவதற்கு

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்று அதிகாலை இராணுவத்தினர் 35000 பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டுள்ளனர். தொடர் தோல்விகளைச் சந்திதது வரும் புலிகள் இதனைத் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலி எனவும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் படுகாயமெனவும் புரளியையக் கிளப்பிவிட, அதனை புலியாதரவாளர்களும் வேகமாகப் பரப்பி வருகின்றனர். தப்பிவந்த பொதுமக்கள் மீது புலிகளால் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தான் 17 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தப்பி வந்த பொதுமக்களே தெரிவித்துமுள்ளனர்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளின் சிறையில் இருந்து பல்லாயிரகணக்கான வெளியேறி கொண்டிருக்கும் இந்த மணத்தியாலங்களில் இந்தியா லண்டன் உட்பட புலம்பெயர் நாடுகளில் இந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்தாவது பிரபாகரன் உயிரை பாதுகாக்குமாறு உண்னாவிதரப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    Reply
  • Kusumpan
    Kusumpan

    தலைவனின் 13 வயதுப்படத்துடன் உங்கள் காலக்கெடு தொடங்கியது எழுபதுகளில் இன்னும் காலக்கெடு முடிந்ததாகத் தெரியவில்லை.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Video of civilians in vanni the great escape:

    http://www.youtube.com/watch?v=lhgQdoBC-hM&feature=player_embedded

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    SATURDAY, OCTOBER 11, 2008
    by G. Hettigoda

    (October 12, Colombo, Sri Lanka Guardian) A well respected Hindu astrologer from Karnataka, India, Mr. A. K. P. Theventhra Rajh predicts that between November 8 and 15, 2008 is a very critical period for Velupillai Prabhakaran, the leader of the Tamil Tigers, the terrorist group fighting to carve out a separate state for the Tamil minority in Sri Lanka. Speaking to some local media people, Mr. Theventhra Rajh has reportedly told that Prabhakaran is seriously ill due to stress caused by the constant fear for his life. Prabhakaran, who is also a chronic diabetic, requires regular insulin shots, which has been disrupted owing to constant change of hideout due to aerial bombing by the SL forces.

    However, Mr. Theventhra Rajh predicts that Prabhakaran’s death will come not from the SL forces, but from a natural cause, more likely due to a heart attack, or stroke resulting from diabetic complications. Mr. Theventhra Rajh has been consulted by a group of LTTE sympathizers in Tamil Nadu, along with several members of the Tamil National Alliance, who had visited the famous Hindu astrologer last week to conduct a Krishna pooja to bestow blessings on Prbhakaran. Following this unexpected discloser of the impeding doom of the LTTE leader, the visitors had left the temple in tears, and had urged the others who were present during the pooja not to speak to any media person. However, it was Mr. Theventhra Rajh himself who later informed the media. Mr. Theventhra Rajh is a very popular astrologer among both Sinhalese and Tamils in Sri Lanka. – Sri Lanka Guardian

    Reply
  • jaffna guy
    jaffna guy

    Sri Lankan government is bring our vanni brothers and sisters to Jaffna schools.

    Chavakachcheri hindu college
    Thirunavukkarasu makavidyalam
    Veerasingam makavidyalam

    They are still coming via A9 route. If anyone got more information, please let us know.

    Jaffna_guy

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட பொது மக்களில் எண்ணிக்கை இப்போது 49058 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இவர்களில் 41000 பேர் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வந்த ஏனையோரை கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் யுத்தப் பிரதேசத்தில் சிக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் அங்கிருந்து வெளியேறிப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர விரும்பவில்லை என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றமம் சுக்குசுக்காக உடைந்தது.

    புலிகளின் அரசியல்வழி அழிவுகரமானது என்பதை அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் இப்போதாவது விளங்கிக்கொள்ள வேண்டும். இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியது மாத்திரமல்லாமல் கடைசிக் கட்டத்தில் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடியிருக்கின்றார்கள். அங்கிருந்து வெளியேறும் சிவிலியன்கள் மீது தாக்குதல் தொடுக்கக் கடைசி நேரத்தில் கூட அவர்கள் தயங்கவில்லை.

    புலிகளின் ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியடைந்ததும் தங்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதும் பாதுகாப்புப் படையினர் அம் மக்களை மீட்டெடு த்ததுமான நிகழ்வுகள் தமிழ் பேசும் மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்து சரியான தீர்மானத்தை மேற் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.-அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம் –

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள மக்களையும் வெளியேவிடாது புலிகள் துப்பாக்கி முனையில் தடுக்கும் காட்சிகளைப் பாருங்கள்.

    http://www.youtube.com/watch?v=eBEhhWspphM&eurl=http%3A%2F%2Flive%

    Reply