நோர் வேயின் ஒஸ்லோ நகரில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டன.
நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தைத் தாக்கியவர்கள் குறித்து நோர்வே அரசாங்கம் மௌனப் போக்கினை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.