பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ஓர் இலங்கைத் தமிழன்
    ஓர் இலங்கைத் தமிழன்

    பெப்ரவரியிலிருந்து வந்த 10,000 பேரில் சுமார் நூற்று எழுபத்து நான்கு அரைப் பேர்கள் மட்டுமே காயமடைந்தவர்கள். ஏனைய ஒன்பதாயிரத்தி எண்ணூற்றி இருபத்து ஐந்து அரைப் பேர்கள் கொலரா, நெருப்புக் காய்ச்சல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    கொலரா, நெருப்புக்காய்ச்சல் நோய்களைப் பரப்பியவர்கள் பாசிசப் புலிகளே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புதுமாத்தளன் பகுதியிலிருந்து வெளியேறும் பல்லாயிரக் கணக்கான மக்களின் ஒளித்தொகுப்பு

    http://www.youtube.com/watch?v=dhLTd_55-2E&eurl=http%3A%2F%2Flive%2

    Reply