நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

20-karunanithi1.jpgநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • நாஞ்சில் கி மனோகரன்
    நாஞ்சில் கி மனோகரன்

    இந்த முறை இங்கு வெயில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது,ஏற்கனவே எனக்கு மூளை சூடாகியுள்ளது!,சரி…ஒரு சமரசத்திற்கு வருவோம்,..”கலைஞர் டிவி,சன்டிவி குழுமங்களை பார்ப்பவர்கள் அனைவரும் என் நண்பர்கள்”,சரியா….”பிரபாகரன் கலைஞர் டிவி மட்டும் பார்ப்பதாக,(தமிழ் தேசிய தொலைக்காட்சியை விட்டு,விட்டதாக,..”தமிழ் தேசியம் என்றாலே…எனக்கு அலர்ஜி… இ.வி.கே.சம்பத்தும்,கவிஞர் கண்ணதாசனும் கனவில் வந்து பயமுறுத்துகிறார்கள்),உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது,அதனால்தான் குளறிவிட்டேன்,பிறகுதான் தெரிந்தது,புலம்பெயர் புண்ணாக்குகளான,புலிவால்கள் மட்டும்தான் நம்முடைய டிவி களைப் பார்ப்பதாக”.இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே,விடுங்களப்பா….”கார்டை வாங்குகளப்பா”…யூ.கே….பவுண்ட்….டென்மார்க்….குரோனர்…”கைத்தறி..வாங்கலையோ..கைத்தறி…என்று கூவி விற்றுதானே அண்ணாவிடம் பொருளாளர் பதவி வாங்கினேன்….

    Reply