தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் சிறந்த சாணக்கியன் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரணை தனது நண்பர் என அவர் வெளியிட்டுள்ள கருத்து முழுக்க முழுக்க அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
“கருணாநிதி, எந்த நேரத்தில் எவ்வாறான ஓர் கருத்தை முன் வைக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தை நன்கு தெரிந்தவர். வன்னிப் பிரதேசத்தில் பிரபாகரனினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 70,000 பொதுமக்களை விடுதலை செய்வது குறித்து கருணாநிதி அக்கறை காட்ட வேண்டும்” என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.