அரசிய லமைப்பு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) 2009ம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 5 மில்லியன் ரூபாவை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்கென ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேற்படி மாவட்டங்களிலுள்ள 42 செயற்திட்டங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழுகாமம் விவேகானந்தா சிறுவர் இல்லத்திற்கு 6 இலட்சம் ரூபாவும், கிரான் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாவும், காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கவென 1,50,000 ரூபாவும், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் மற்றும் கிழக்கு மாகாண ஆலயங்களுக்குமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.