உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிடும் வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவரை, இரண்டு வாரம் பரோலில்’ விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.
அப்போது, வன்முறையை ஏற்படுத்தும் வகையில் எந்த அவதூறு கருத்துகளையும் பேச மாட்டேன்’ என உறுதி அளிக்குமாறு வருண் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதன்படி, வருண் காந்தி அடைக்கப்பட்டு இருந்த எடா சிறையின் சூப்பிரண்டிடம் ஒரு உறுதி மொழி பத்திரத்தை வழங்கினார். அந்த உறுதி மொழியின் நகலை சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழங்க வேண்டும். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி மொழி பத்திரத்தை வருண் காந்தி நேற்று அளித்தார்.
அந்த உறுதி மொழியில், மத கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசவோ, எழுதவோ மாட்டேன்’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.