எல்.ரீ. ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் 24 மணி நேர காலக்கெடுவுக்குள் புலிகள் சரணடையத் தவறினால் அவர்களுக்கெதிராக படை வீரர்கள் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளர்.
புலிகள் சரணடைய வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் தப்பி வரும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Kullan
ரம்புக்-கெல!
புலிகள் சரணடைகிறதை விட தமிழ்மக்கள் காக்கப்படுவதே இன்றைய தேவை. முதலில் நடக்கவேண்டியதை விட்டுவிட்டு புலிவருகிறது புலிவருகிறது என்று வெருட்டாதையும். தமிழ்மக்கள் புலிவருகிறது புலிவருகிறது என்று சொல்லிச்சொல்லி குட்டிப்பூனை கூட வரவில்லை. புலியை விட்டுவிட்டு மக்களை உங்கள் ஆமியிடம் இருந்தும் புலிகளிடம் இருந்தும் எப்படிக்காப்பது என்று பாரும்