இலங்கையில் நெடுங்காலமாக இருந்துவரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது,
அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே என சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன ரீதியாகவும் வறுமை காரணமாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கும் முகமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அமைச்சர் அங்கு ஐ.நா. செயலாளரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
புலிகளின் இத்தகைய செயற்பாடுகளால் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் துயரங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா இங்கு மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்ää அவற்றுக்கான மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆரதரவளிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அரசியலுரிமைப் பிரச்சினைக்குரிய தீர்வு நோக்கிய முயற்சிகளுக்கு எதிராகக் காணப்படும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படும் பட்சத்தில் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை அழிவுகளிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மனித அழிவுகளும் அவலங்களும் அற்ற ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும் அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் அனுபவித்து மகிழவும் உதவ வேண்டும் என இச்சந்திப்பின்போது ஐ.நா. செயலாளரிடம் அமைச்சர் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kullan
யாழ்பாணம் தடையின்றி இருக்கிறது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அடிச்ச காசில் 10வீதத்தை தெருப்போடவும் கோவில்கட்டவும் பாவிக்கிறீர்கள். மக்களுக்கு எரிகிறவீட்டில் எஞ்சிய கொள்ளி மிச்சம் என்று மக்களும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் வாய்திறந்தால் துப்பாக்கிகள் வாய் திறந்து விடும்
msri
நீங்களும் உங்கள் பேரினவாத்க் கூட்டாளிகளும்>தமிழ் மக்கள் அபிலாசைகளை கண்க்கில் எடுத்து அர்த்தமுள்ள அரசியல் தீர்வை முன்வைத்திருந்தால் புலிகளின் தடையை மக்கள் இல்லாதாக்கியிருப்பார்கள்! இப்போதுள்ள நிலையும் அதுவே!
vanthiyadevan
தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது,
அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே samething been told by mr eric solhaim in this morning in norway special meeting
thanie
“இலங்கையில் நெடுங்காலமாக இருந்துவரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது, அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே.. தேசம்னெட் செய்தி
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை ஏற்று ஐனநாயக வழிமுறைக்கு தாமும் வந்திருந்த போதிலும் புலித்தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக அந்த ஒப்பந்த நடைமுறைக்கு புலித்தலைமை தடையாகவே இருந்து வந்திருப்பதாகவும் தனது உரையின் போது செயலாளர் நாயகம் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். –ஈபிடிபி செய்தி