சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளில் சற்று அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் – அவற்றுக்கான பின்னணி தொடர்பிலும் அண்மையில் தேசம் திரை காணொளியில் நளினி ரத்னராஜா அவர்களுடன் இடம்பெற்ற முழுமையான உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!