எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.
பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கம் வழங்கிய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் புலிகள் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.
புதுமாத்தளன் மற்றும் அம்பலவான்பொக்கனை ஆகிய இடங்களில் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Kullan
உண்மையான புலிகள் அங்கு நின்றால்தானே சரணடைவதற்கு. எல்லாத்தையும் தாட்டு வைத்துப்போட்டு புலித்தலைமைகள் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள் சுதந்திரப்பறவைகளாக. மீதியுள்ள குஞ்சு குருமகன்தான் அங்கே சயனைட்டுக்குப்பியுடன் நிற்கிறார்கள்.
பார்த்திபன்
குலன்; . தலை வேண்டுமானால் தப்பியிருக்கலாம். ஆனால் அடுத்த கட்டத்தலைகள்(தலைக்குள் ஒன்றுமில்லாத) அங்கு தான் மாட்டுப்பட்டுள்ளனர். அதனால்த் தான் சாதாரண போராளிகளை மூர்க்கமாகப் போராட வைத்துத் தாம் தப்பிக்க முயற்சிக்கின்றனர். புலித்தலைகள் முழுவதும் தப்பியிருந்தால் சாதாரண போராளிகள் என்றோ துப்பாக்கிகளை தூர எறிந்து விட்டு இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பார்கள்.
மாயா
கடைசி நிமிட அதிசயத்துக்காக பின் வாங்குகிறார்கள் புலிகள். அதைச் சொல்ல இளம்திரையனும் இல்லை? இதுவும் தாக்குதல் யுத்திதானோ?
அகிலன் துரைராஜா
முப்பது நாற்பது வருடங்களாக வல்வெட்டித்துறை கடத்தல் வள்ளங்கள் அடிபட்டு பிடிபட்டு போனதெல்லாம் 26ஆம் திகதியில்தான். இதனால் பின்னர் 26ஆம் திகதி ஒரு கேடான திகதி என்று 26ஆம் திகதியில் ஒன்றும் செய்வதில்லை. அண்மையில் கனடாவில் நடந்த வல்வெட்டித்துறை ஒன்று கூடலிலும் 26ஆம் திகதி பிறந்த வேலுப்பிள்ளையின் மகன் எப்பதான் அடிபடபோகுதோ என்று பலர் பயந்தனர். தமிழருக்கு எட்டாம் நம்பர் ஒரு நாளும் சரி வராதாம்.
பிரபாகரன் தனது புத்தியீனம் படித்தவர்கள் கிட்ட வந்தால் தெரிய வந்து ஊரெல்லாம் பரவி விடுமோ என்ற அச்சத்தில் ஒரு படித்தவனையும் கிட்ட விடவில்லை பத்தாம் வகுப்பு படித்த போலீஸ் கான்ஸ்டபில் நடேசனுக்கு பதிலாக சிவா பசுபதி அல்லது வேறு ஏதாவது நன்கு விஷயம் தெரிந்த சாணக்கியமாக கருமம் ஆற்றக்கூடிய ஒருவரை நியமித்திருக்கலாம் ஒரு விஷயம் தெரிந்தவனையும் பிரபாகரன் தன்னை மீறி விடிவார்கள் என்று கிட்டவேவிடவில்லை. எம் ஜீ ஆர் மூன்றாம் வகுப்பு தான் படித்திருந்தாலும் மெத்தபடித்த பல அனுபவசாலிகளை தன் அருகே எப்போதும் வைத்திருந்தார்.
பிரபாகரனோ தன்னை பப்பா மரத்தில் ஏத்திய தன்னை சூரிய தேவன், திட்டம் வைத்திருக்கிறார் என்று புளுகிற படிப்பறிவில்லாதவர்களை தன் அருகே வைத்து கொண்டதுடன் கடத்தல் மாபியா பாணியில் ஒன்றில் மண்டையில் போடுவது இல்லையேல் காசு கொடுத்து ஆட்களை வாங்குவது இதை விட்டால் பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது. சுத்த அரசியல் சூனியம் ராணுவ சூனியம் இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் இருந்த பொடியளையும் அநியாயமாக புதை குழிக்கு அனுப்பி வடக்கு கிழக்கில் இருந்த பொருளாதாரத்தையும் அடியோடு அழித்து விவசாயிகளின் நெல்லை புசல் முன்னூறு ரூபாக்கு துப்பாக்கி முனையில் வாங்கி அவர்களுக்கு மண்ணெண்ணையை போத்தல் முன்னூறு ரூபாவுக்கு வித்து டிராக்டர் எல்லாத்தையும் பறித்து மீனவரின் போட்களையும் அவுட்போட் எஞ்சின்களையும் வாகனங்களையும் பறித்து ஆமா போடா மறுத்த அத்தனை சமூகத்தின் அறிஞர்களையும் துணுக்காய் சித்திரவதை முகாமில் அடைத்து பரலோகம் அனுப்பி இந்த சூனியம் மொத்தத்தில் வடக்கு கிழக்கில் இருந்தவர்களின் பிழைப்பையும் பிள்ளைகளையும் சூறையாடி இந்தியா கொண்டுவந்த வடக்கு கிழக்கு இணைந்த தீர்வையும் பிரேமதாசாவுடன் சேர்ந்து இல்லாமல் பண்ணி எங்கட காசிலை வாங்கின இத்தனை சாம் செவேனையும் ஒன்று கூட பாவிக்காமல் மண்ணிற்குள் தாட்டுவிட்டு கேம்ஓவர் என்று பங்கருக்குள் இருக்கும் இந்த வங்குரோத்து தலைவன் தமிழரை வங்குரோத்தாக்கி இன்று இலங்கையில் அகதி முகாம்களிலும் வெளி நாட்டில் தெருக்களுக்கும் கொண்டு வந்து விட்டு தானும் இன்றோ நாளையோ வலையன்மடத்திலோ அல்லது கரையாம் முள்ளிவாய்க்காலிலோ செத்தொழிந்து போக வெளிநாடு புலிஆதரவாளர்களுக்கும் இந்தியாவில் படமெடுக்கிற புலிஆதரவாளர்களுக்கும் மில்லியன் கணக்கில் யூரோக்களும் டாலர்களும் ருப்பிகளும் சேர புலிக்கு பணம் கொடுத்தவனும் இலங்கையில் பாதிக்கப்பட்டவனும் அம்போ அதோகதியாக புலி என்ற கதை அழிந்து போகும்.-அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம் –