எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்குமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, நாட்டு மக்களிடையே இனமுரண்பாடு ஏற்படும்.
எனவே ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் சிறுபான்மை மக்களும் வாக்குகளை சிதறடிக்காமல் தமக்கு பிடித்தமான இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.