ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தங்கியிருந்த ஈராக்கிய தளமொன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ள அதேவேளை இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈராக் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள முன்னாள் ஈரான் ஆதரவு குழுவான ஹசெட் அல் சபியின் தளத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக்கின் உள்துறை அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் மூன்று ஈராக்கிய படையினரும் உள்ளனர் .
விமானதாக்குதலே இடம்பெற்றது என ஈராக் அதிகாரிகள் இருவர் குற்றம்சாட்டியதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர் இழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹசெட் அல் செபி அமைப்பு தனது பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈராக்கிய படையினர் யார் தாக்குதலை மேற்கொண்டனர் என்பதை தெரிவிக்கவில்லை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை..
இதேவேளை அமெரிக்கா இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
ஈராக்கின் மீது குறித்த தினத்தில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹசெட் அல் சாபி அமைப்பு தற்போது ஈராக்கிய இராணுவத்தின் ஒரு பிரிவாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.