அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.
அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.
நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.
முதலில் அவர்களை வெளியேற சொன்னோம் எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.