இலங்கையின் வேலைவாய்பற்ற இளைஞர்களிற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களிற்கு வழங்கியதை பார்த்த பின்னரே நான் எதிர்த்துகுரல் எழுப்பினேன் என கொழும்பு விமானநிலையத்தின் விசா வழங்கும் நடைமுறைகளை வெளிநாட்டு நிறுவனத்திடம் வழங்கியமைக்காக எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விமானநிலையத்தின் வருகை விசாக்களை கையாளும் பொறுப்பினை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளமைக்கு விமானநிலையத்தில்வைத்து எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆவணங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானநிலையத்தின் குடிவரவு துறை அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்ர்.
விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் காணப்பட்ட இளைஞன் இன்று பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் வேலைவாய்பற்ற இளைஞர்களிற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களிற்கு வழங்கியதை பார்த்த பின்னரேநான் எதிர்த்துகுரல் எழுப்பினேன் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் விசாவழங்குதல் போன்ற செயற்பாடுகள் வெளிநாட்டு நிறுவனங்களிற்கு வழங்கப்பட்டுள்ளதும் கவலையை ஏற்படுத்துகின்றது அவர்கள் அதனை பயன்படுத்தி இலாபம் உழைக்கபோகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் தாய்லாந்தில் தொழில்புரிந்துவிட்டு நாடு திரும்பியுள்ளேன் தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பெரும் இடைவெளி கவலைதருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு அரசியல் தொடர்புகள் உள்ளது தான் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் நான் இலங்கையின் இளைஞர்களின் குரலையே விமானநிலையத்தில் ஒலித்தேன் இலங்கையின் அரசமைப்பின்படி செயற்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. !