கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு மாவட்டத்தில் சுமார் 256 இடங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.